Krishna Kumar Murugan Profile picture
Social, Political & Economics Observer | Believe in Dharma and Karma | Modi | Views Personal

Jun 24, 2021, 6 tweets

சட்டசபையில் நிதி அமைச்சர் தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டதைப் போல் பெட்ரோல் டீசல் விலையை ஏன் குறைக்க வில்லை என்பதற்கு விளக்கம் அளித்தார்.

1) வளர்ந்த மாநிலங்களில் தமிழகம் தான் குறைவான மாநில மதிப்புக் கூட்டுதல் வரி விதிப்பதாக கூறினார். இது தவறான தகவல்.

ஜூன் மாதம் ஒன்றாம் தேதி பெட்ரோலின் உற்பத்தி விலை மற்றும் கலால் வரி ₹68.89. இந்தியாவில் அவர் குறிப்பிட்ட வளர்ந்த மாநிலங்கள் விதிக்கும் வரி

மஹராஷ்ட்ரா : 26% VAT+ ₹10.12
கர்நாடகம் : 35% sales tax
குஜராத் : 20.1% VAT+ 4% Cess on Town Rate & VAT
தமிழகம் : 15% + Rs.13.02 per litre

இதன் அடிப்படையில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மாநில அரசு விதித்த வரி.

மஹராஷ்ட்ரா : ₹28.03
கர்நாடகம் : ₹24.46
தமிழகம் : ₹23.05
குஜராத் : ₹16.84

அவர் குறிப்பிட்ட மாநிலங்களில் குஜராத் தான் குறைந்த மதிப்புக் கூட்டுதல் வரி வசூலிக்கிறது. தமிழகம் இல்லை.

2) Cess வரி கூட்டியதால் மாநிலங்களுக்கு வரும் நிதியில் தட்டுப்பாடு ஏற்படும் என்று அமைச்சர் கூறினார்.

இந்த வருடம் மத்திய அரசு நிதி நிலை அறிக்கையில் Cess வரி மாற்றி அமைத்தது உண்மை தான்.

இதனால் மாநிலங்களுக்கு அளிக்கப்படும் நிதி குறைந்ததா?

Standard devolution மட்டும் பார்த்த நிதி அமைச்சர், grant In aids, post devolution revenue deficit grants மற்றும் other grantsஐ பார்க்க மறந்து விட்டார் போல.

மத்திய அரசிடம் கூடுதல் நிதி வருமே தவிர அது குறையாது என்பது நிதி நிலை அறிக்கையில் தெளிவாக தெரிகிறது.

Cess மாற்றி அமைத்ததால் மாநில மதிப்புக் கூட்டு வரியில் எந்த பாதிப்பும் இல்லை, மத்திய அரசிடம் பெறப்போகும் நிதியும் 2019-20ஐ விட அதிகமாக தான் வரப்போகிறது.

அதனால் இப்படி எதாவது காரணம் சொல்லாம உங்க தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டதைப் போல பெட்ரோல் டீசல் விலையை குறைங்க.

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling