Master🍥 Profile picture
Out of Stock🤷🏿‍♂️. Goofy🎠 FakeID 🎭 @photophactory_📷 https://t.co/a0AqPXP9g0

Jul 4, 2021, 7 tweets

சுப்பிரமணியபுரம் க்ளைமாக்ஸ் குறித்து இயக்குநர் சசிகுமாரிடம் கேட்டபோது அவர் பகிர்ந்துகொண்டவை.

- முகில் சிவா

***

#subramaniyapuram
#13YearsOfSubramaniapuram

நான் செஞ்ச உருப்படியான விஷயம் நான் யாருக்கும் கதை சொல்லலை. கதிருக்கு மட்டும் தெரியும். எடுக்கப் போகும் காட்சியை காலையில் சொல்லுவேன். டயலாக் அதிகம் இருந்தால் முந்தைய நாள் இரவு கொடுப்பேன். க்ளைமேக்ஸ் சொன்னேன். ஜெய் கலங்கிட்டான்.

சுவாதி அங்கிருந்து எழுந்துபோய் அறையில் அழ ஆரம்பித்துவிட்டாள்.
அறையிலிருந்து போன் செய்து ‘அப்ப நான் என்ன முதுகுல குத்துற ஆளா?’ என்று கேட்டு புலம்ப ஆரம்பிச்சிருச்சு. கதாபாத்திரத்தோடு அவர்கள் ஒன்றிப் போயிருந்தது எனக்கு சந்தோஷம் கொடுத்தது.

‘நீங்க எனக்கு சொல்லல க்ளைமாக்ஸை.’

‘நாந்தான் சொன்னேனே நீ சாக மாட்டேன்னு.’

‘இதுக்கு நான் செத்திருக்கலாம்.’

அந்த மூட் சரியாக இருந்தது. காட்சி எடுக்க அந்த மனநிலைதான் தேவைப்பட்டது. ‘இப்படியே இருங்க. யாரிடமும் பேசக்கூடாது’ என்று ஜெய்யிடம் சொல்லிவிட்டேன்.

‘சேர்த்து வைச்சிரலாமே. ஏன் இப்படி கொடுமைப்படுத்துற’ன்னு கனி கேட்டார். காட்சிகள் எடுத்து முடித்ததும் நான் அவர்களிடம் சொல்லாததன் காரணத்தைச் சொன்னேன்.

முதலிலேயே முடிவு தெரிந்தால் ‘சிறு பொன்மணியில்’ உனக்கு வெட்கம் வராது. ஜெய்க்கு உன் மேல் காதல் வராது. இறுதியில் சொன்னதால் உனக்கு ஷாக். அதுதான் எனக்குத் தேவைப்பட்டது.

#சுப்பிரமணியபுரம்
#13YearsOfSubramaniapuram

Rest is History 💥🔥♥️

Title card of "Gangs of Wasseypur" directed by Anurag Kashyap.

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling