KANNAN. 🦚🦚♥♥♥ Profile picture
கொற்றவையின் மைந்தன் 🔥 பாலை நிலத்து காரன்🖤 சேது சீமை❤ இந்திய ராணுவத்தின் காதலன்🇮🇳💪 முருகன் அடிமை 🙏

Jul 6, 2021, 14 tweets

என்னை தூக்கில் போட்டவுடன் இங்கிலாந்து மண்ணிலேயே என் உடலை புதைத்துவிடுங்கள்! 😂🇮🇳

இத்தனை ஆண்டுகள் இந்திய மண்ணை இங்கிலாந்து ஆண்டது போல்,

இங்கிலாந்தின் ஆறடி மண்ணை
ஓர் இந்தியன் நிரந்தரமாக அபகரித்துக்கொண்டான் என்பது ஒரு மாறாத அவமானமாக உங்களுக்கு அமையட்டும்.

#ஜாலியன்_வாலாபாக்_படுகொலை நிகழ்த்தியவர்களை...

21 ஆண்டுகள் காத்திருந்து தன் மூச்சு,செயல்,வாழ்வு அனைத்தையும் இதற்கு மட்டுமே அர்பணித்து பழி வாங்கிய இந்திய சுதந்திர போராட்ட போராளி #உத்தம்சிங்.

தன்னை தூக்கிலிடும்
முன்பு கூறிய வரிகள் இவை.

இந்திய வரலாற்றின் மறக்க முடியாத அந்த ஜாலியன் வாலாபாக் கோரச் சம்பவம், 15 நிமிடங்களுக்குள் நடந்தேறியது.

1000 பேருக்கும் மேலான மக்கள் ஜெனரல் டயர் என்பவனால், கொன்று குவிக்கப்பட்டனர்.

2,000 பேருக்கும் அதிகமானோர் குற்றுயிரும் குலை உயிருமாகத் துடித்துக்கொண்டு இருந்தனர்.

ஒவ்வொரு துப்பாக்கி வீரனும்
33 ரவுண்ட் சுட்டு இருந்தான். மொத்தம் 1,650 ரவுண்ட் சுடப்பட்டது.

செத்து விழுந்த உடல்கள் ரத்த வெள்ளத்தில் மிதந்தன. தப்பிப் பிழைத்தவர்கள், நடக்க முடியாமல் வீதியில் விழுந்து கிடந்தனர்.

"என்னை மதிக்காத இந்தியர்களுக்கு
நான் அளித்த தண்டனை இது.

ஒரு ராணுவ அதிகாரியாக இந்தச்
செயலுக்காக நான் சந்தோஷம்
அடைகிறேன்.

என்னிடம் இன்னும் அதிக
ஆயுதங்கள் இருந்திருந்தால்,
அதிக நேரம் சுட்டிருப்பேன்’ என்று
வெளிப்படையாகத் தெரிவித்தான்
ஜெனரல் டயர்.

இங்கிலாந்தில் இருந்து வெளியாகும்
'மார்னிங் போஸ்ட்’ என்ற பத்திரிகை
ஜெனரல் டயரை 'வெற்றி

நாயகன்’
என்று பாராட்டி எழுதியது..

ஜாலியன் வாலாபாக் படுகொலை,
இந்தியாவை உலுக்கியது. அந்தப்
பாதகச் செயலுக்கு காரணமாக
விளங்கிய...

பஞ்சாப் கவர்னர் மிக்கேல் ஓ டயர்
மற்றும் ஜெனரல் டயர் ஆகியோரைப்
பழிவாங்குவேன் என்று, உத்தம்சிங்
என்ற #பஞ்சாப் இளைஞன் சபதம்
செய்தான்...

சொன்னபடியே சரியாக
21 ஆண்டுகள் காத்திருந்து
இங்கிலாந்தில் எச்சில் தட்டு கழுவி
கூலி வேலை செய்து கிடைத்த
பணத்தில் துப்பாக்கி வாங்கி
1940-ம்ஆண்டு மார்ச்13-ம்தேதி
கவர்னர் ஓ டயரைச் சுட்டுத்
தள்ளினார் உத்தம்சிங்
உத்தம் சிங்கின் செயல் இந்தியமக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது

ஆனால் இதை “பைத்தியகாரத்
தனமான செயல்” என்று கூறி காந்தி.
அறிக்கை வெளியிட்டார்.
நேருவும், காந்தியும்
பஞ்சாப் காங்கிரஸ் அரசை,
உத்தம் சிங்கின் செயலைக்
கண்டித்தும் ஜெனரல் டயரின்
மனைவிக்கு ஆறுதல்தெரிவித்தும்
தீர்மானம் இயற்ற வைத்தனர்.
இதனை கடுமையாக எதிர்த்து,
உத்தம் சிங்கின் செயலைப்

பாராட்டி
கடிதம் எழுதினார் நேதாஜி சுபாஷ்
சந்திர போஸ். இதனால் காந்தியின்
வெறுப்புக்கு ஆளானார்.

காந்திக்கும் நேதாஜிக்கும் பிளவு
ஏற்பட்டு காந்தியால் நேதாஜி
காங்கிரசில் இருந்து திட்டமிட்டு
இழிவுபடுத்தப்பட இது ஒரு முக்கிய
காரணமாக அமைந்தது.

அந்தக் கொலை வழக்கில், உத்தம்

சிங்குக்கு தூக்குத் தண்டனை
விதித்தது இங்கிலாந்து நீதிமன்றம்.
"தூக்கில் போட்டவுடன் இங்கிலாந்து
மண்ணிலேயே என்னைப்
புதைத்துவிடுங்கள்.

இத்தனை ஆண்டுகள் இந்திய
மண்ணை இங்கிலாந்து ஆண்டது
போல், இங்கிலாந்தின் ஆறடி
மண்ணை...

ஓர் இந்தியன் நிரந்தரமாக
அபகரித்துக்கொண்டான்

என்பது மாறாத அவமானமாக
உங்களுக்கு அமையட்டும்"
- முழங்கினர் உத்தம் சிங்.

ஜூலை 31, 1940 அன்று அவர்
வந்தே மாதர கோஷத்துடன்
தூக்குக்கயிறை முத்தமிட்டார்.

“தியாகச்சிங்கம்” என
அழைக்கப்பட்ட அவரது உடல்
சீக்கிய மதச்சடங்குகளுக்கு
தடைவிதிக்கப்பட்டு சிறைச்
சாலையில் புதைக்கப்பட்டது.

பஞ்சாப் மாநிலம் சுல்தான்பூர்
சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்
எஸ்.சாது சிங்,

உத்தம் சிங்கின் எலும்புக்
கூடுகளையாவது இந்தியாவிற்கு
எடுத்துவர வேண்டும் என்று மைய
அரசிடம் கேட்டுக் கொண்டார்.

அன்றைய பிரதமர் இந்திரா காந்தி
இதற்கான முயற்சிகளை
மேற்கொண்டார்.

முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப்

பின்னர், 1975 ஆம் ஆண்டு
இங்கிலாந்து அரசு உத்தம் சிங்
புதைக்கப்பட்ட இடத்தை மீண்டும்
தோண்டி,

மிச்சம்மீதி எலும்புக்கூடுகளை
சேகரித்து கட்டி இந்தியாவிற்கு அனுப்பியது.

உத்தம்சிங்கின் எலும்புக்கூடுகள்
ராஜமரியாதையோடு இந்தியாவில்
வரவேற்கப்பட்டு,

உத்தம்சிங்கின் சொந்த ஊரில்
எரியூட்டப்பட்டு, சாம்பல் கங்கை
ஆற்றில் கரைக்கப்பட்டது.

தேசத்தை நேசிக்கும் அனைவரும்
அவரது தியாகத்தைப் போற்றுவோம்.

#வாழ்க_பாரதம்! #வந்தே_மாதரம்!

#ஜெய்_ஹிந்த்!

Krishnaveni ji.

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling