கார்த்தி சமூகவாதி Profile picture
Money is always ultimate ♣️ ! Love ❤️ ! Nature 🌿 ! Books 📚 ! Movies 🎬 ! 📝

Jul 17, 2021, 19 tweets

#சேலம்_ஆடிப்பண்டிகை
#சேலம்_ஆடித்திருவிழா
😍♥️🎊💥✨

இந்தவருடம் சேலத்தில் ஆடிப்பண்டிகை ஆரம்பம் ஆகவேண்டியநாள் இன்று.!

சேலத்தில், ஆடி 1 தேங்காய் சுடும் பண்டிகை என்று தொடங்கி அந்த மாதம் முழுவதும் திருவிழா தான்.🙌🏽😃

வாங்க ஒரு சின்ன த்ரெட்ஆ பாப்போம்.. இன்ரெஸ்ட் ஆ.😃

#KarthiWrites

ஆடி1 அன்னைக்கு ஊரே குதூகலமாக இருக்கும். சின்ன வயசுல விடிஞ்சா குச்சியும் தேங்காயும் கையுமா தான் சுத்திக்கிட்டு இருப்போம் அந்த நாள் முழுக்க.

அரிசி, பருப்பு, அவுள்,எள்ளு, பொட்டுக்கடலை, வெல்லம், எல்லாம் கலந்து போட்டு சரியான அளவு தேங்காய் தண்ணீர் நிரப்பி அடுப்பில் சுட்டு சாப்பிடுவோம்

சின்ன வயசுல வீட்டு பக்கம் இருக்குற காலியிடம்/காட்டுல அக்கம், பக்கம் வீடுன்னு எல்லாரும் விறகுகளைகொண்டு நெருப்பு மூட்டி சுடுவோம் ஆனால், இப்போ எல்லாம் வீடாகிட்டு, அதனால் அவங்க அவங்க வீட்டுலேய எல்லாம் முடிஞ்சுடும்.

வெந்து முடியும் தருவாயில் ஒரு மணம் வரும் பாருங்க. அப்போவே நாக்குல

எச்சில்🤤🤤 ஊரும். அவ்வளவு வாசாமா இருக்கும்.! அளவு சரியா போட்டு தேங்காய் தண்ணீர் சரியா சேர்த்திருந்தால் நெய் கலந்த பொங்கலை விட சுவையாக இருக்கும்😍

ஆடி 1 பிறந்து அடுத்து வரும் செவ்வாயில் பண்டிகைக்கு பந்தக்கால் நட்டு, பூ போட்டு பண்டிகை தொடங்கும். ஒரு நாள் விட்டு அடுத்து வரும்

வியாழக்கிழமையன்று கம்பம் நட்டு விழா சூடு பிடிக்கும்! அதிலிருந்து அடுத்த 15ஆம் நாள், பால் குடம், கரகம் எடுத்தல், அலகு குத்துதல், பூ மிதித்தல் என்று விழா மையப்பகுதியில் குடிகொண்டிருக்கும்.

இதில் இடையில் ஆடி முதல் வெள்ளி, ஆடி 18(ஆடிப்பெருக்கு) என்று ஒவ்வொன்றாக முடிவுக்கு வரும்.

~ நீங்க நினைக்கலாம் எல்லா ஊரிலும் இது தானே நடக்கும் இதுல என்ன ஸ்பெஷல் இருக்குன்னு?!.

கிராமத்துல ஒரு சின்ன ஊருல நடக்குறதுக்கும், சிட்டில ஊரே குதூகலமாக இருக்குறதுகும் வித்தியாசம் இருக்கு.!

இதுல சேலம் பழையபேருந்து நிலையம் அருகில் இருக்குற போஸ் மைதானத்தில், பெரிய பொருட்காட்சி

அரசாங்கத்தால் நடத்தப்படும். ஆடிப்பண்டிகையை ஒட்டி, அதன் காரணமாகவே நடத்தப்படும் ஒரு பொருட்காட்சி/கண்காட்சி. திருவிழாவின் மைய நாட்களன்று பொருட்காட்சியில் entry க்கு கொடுக்குற டிக்கெட்ல கலெக்ட் ஆகுற அமௌண்ட் எவ்வளவு அப்டின்னு செய்தில பேப்பர்ல எல்லாம் வரும்! அந்த அளவுக்கு அந்த ஒரு

7 நாட்கள் கூட்டம் கூடும் சேலத்தின் மையப்பகுதியில். இதில் மையத்தில்உள்ள சேலம் கோட்டை மற்றும் குகை மாரியம்மன் கோவில் முக்கியபங்கு வகிக்கும்.

இந்த கோவிலில் திருவிழாவின் முக்கியமான மூன்றாம் நாள் வண்டிவேடிக்கை என்னும் ஒரு சிறப்பு மாலையில் ஆரம்பித்து இரவு முடியும்வரை நடக்கும்.

சுற்றுவட்டாரத்தில் 40km தொலைவில் இருந்தும் மக்கள் இந்த நிகழ்வை காண வருகைதருவார்கள். அந்த அளவிற்கு சிறப்பாக நடக்கும். அதன் ஒரு பகுதியின் யூடியூப்/வீடியோ லிங்க் கீழே.



இந்த வழியில் செல்லும் பேருந்துகள் அனைத்தும் அன்று மதியத்தில் இருந்து மறுநாள் காலைவரை

நிறுத்தப்படும். இந்த மூனு நாள் திருவிழாவுக்கு சேலத்து மக்கள் எங்க இருந்தாலும், சேலத்தை நோக்கி வருவாங்க கண்டிப்பா. அந்த அளவுக்கு சிறப்பா நடக்கும்!

இந்த மூனு நாள்ல தெரிஞ்சிடும் ஊருக்குள்ள எத்தன பொண்ணுக்கு கல்யாணம் ஆகிருக்கு, யார் யாரு ரெடியா இருக்காங்க. அப்டின்னு.

அந்த ஒரு வாரம்

பசங்க எல்லாம் யோசிக்கணும், இவ்வளவு நாள் இவளுங்க எல்லாம் எங்க தான் மறைந்திருந்தார்கள்ன்னு!

யோசிச்சி கூட பாக்க முடியாத அளவுக்கு தேவதை கணக்கா புடவைலையும் தாவனிலையும் கோவில் கோவிலா குடும்பத்தோட சுத்திட்டு இருப்பாங்க. பசங்க மனசு திருவிழா கடைல கட்டி தொங்கவிட்டிருக்குற பலூன் மாதிரி

அவங்களையே சுத்தி சுத்தி பறந்துட்டு இருக்கும். இந்த ஒரு வாரத்துல மனச தொலைத்த பசங்களும் பொண்ணுங்களும் ஏராளமாக இருப்பாங்க. 😍♥️

சேலம் சிட்டில ஏறியாவுக்கு ஒரு கோவில் இருக்கும், பண்டிகை ஆரம்பமே அந்த இரண்டு பெரிய கோவில்ல இருந்து தான் ஆரம்பிக்கும். அதனால ஊருமுழுக்க விழாக்கோலம்

பூண்டிருக்கும். மையவிழா நடக்குற 5நாள் செவ்வாய்-ஞாயிறு வரை சேலத்துல லோக்கல் ஹாலிடே இருக்கும் அரசு அறிவிப்போடு. ஸ்கூல், Govt, எல்லாமே லீவ் ல இருக்கும்!

இந்த ஒரு வாரத்துல ஊருக்குள்ள இருக்குற பெரியகை, ஆளு இருக்குறவன் எல்லாம் கிரின்ச் கூ🔥யானுங்க மாதிரி சுத்திட்டு இருப்பானுங்க. Eg.👇🏽

பக்தி மயத்துல இருக்குறவங்கலும் இருப்பாங்க.

இந்த ஒரு மாசமும் கோவில்ல கூழு ஊத்துறது பிரசாதம் குடுக்குறதுன்னு அமர்க்களமாக இருக்கும். ஊரு முழுக்க எங்க பாத்தாலும் ரேடியோல சாமி பாட்டு தான். சவுண்ட் சிஸ்டம்லாவச்சு நைட்ல பாட்டுகச்சேரி, Dance, நாடகம் பட்டி மன்றம்ன்னு, சேலம் ஜொலிக்கும்.

இதுல எதாவது ஒரு கோவில்ல விஜய்டிவி சன்டிவி பிரபலங்கள்ன்னு கூட்டிட்டு வந்து புரோகிராம் பண்ணுவாங்க. அந்த கோவில்களை தேடி தேடி போயி மக்கள் பாப்பாங்க..

ரொம்ப நாள் கழிச்சி சந்திக்கும் சொந்தங்கள், நண்பர்கள், சரக்கடிக்கிர gang, போலீஸ்கிட்ட அடிவாங்குற gang இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கும்

சொல்லிகிட்டே போகலாம்.. அவ்வளவு இருக்கும் இந்த ஒரு மாதத்தில்.. 😍🤩🎊

😔 ஆனா போன வருடம், இந்த வருடமும் கொரோனா காரணமா விழா நடக்கல. எத்தனையோ வருடத்திற்கு பிறகு விழா தடைபடுது அப்டின்னு போன வருடம் சன் செய்தில சொன்னாங்க. வருடம் மட்டும் சரியா ஞாபகம் இல்ல, ஆனால் அதிக வருடம் அது ஞாபகம்

இருக்கு. Hope 😊 அடுத்த வருடம் எல்லாம் சரி ஆகிடும்னு நம்புறேன்/நம்புறோம். 😌♥️😎
நாங்க @ramesh_twetz @Its_Me_Prabakar @mundrikottai

Tag: @Tonystark_in @Ganae_Ramesh @_Java_Speaks @GiriSuriya_7 @manion_ra @CinemAnalyst @Karthicktamil86 @Ajit_karthi @karthick_45 @smithpraveen55

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling