ஆடி1 அன்னைக்கு ஊரே குதூகலமாக இருக்கும். சின்ன வயசுல விடிஞ்சா குச்சியும் தேங்காயும் கையுமா தான் சுத்திக்கிட்டு இருப்போம் அந்த நாள் முழுக்க.
அரிசி, பருப்பு, அவுள்,எள்ளு, பொட்டுக்கடலை, வெல்லம், எல்லாம் கலந்து போட்டு சரியான அளவு தேங்காய் தண்ணீர் நிரப்பி அடுப்பில் சுட்டு சாப்பிடுவோம்
சின்ன வயசுல வீட்டு பக்கம் இருக்குற காலியிடம்/காட்டுல அக்கம், பக்கம் வீடுன்னு எல்லாரும் விறகுகளைகொண்டு நெருப்பு மூட்டி சுடுவோம் ஆனால், இப்போ எல்லாம் வீடாகிட்டு, அதனால் அவங்க அவங்க வீட்டுலேய எல்லாம் முடிஞ்சுடும்.
வெந்து முடியும் தருவாயில் ஒரு மணம் வரும் பாருங்க. அப்போவே நாக்குல
எச்சில்🤤🤤 ஊரும். அவ்வளவு வாசாமா இருக்கும்.! அளவு சரியா போட்டு தேங்காய் தண்ணீர் சரியா சேர்த்திருந்தால் நெய் கலந்த பொங்கலை விட சுவையாக இருக்கும்😍
ஆடி 1 பிறந்து அடுத்து வரும் செவ்வாயில் பண்டிகைக்கு பந்தக்கால் நட்டு, பூ போட்டு பண்டிகை தொடங்கும். ஒரு நாள் விட்டு அடுத்து வரும்
வியாழக்கிழமையன்று கம்பம் நட்டு விழா சூடு பிடிக்கும்! அதிலிருந்து அடுத்த 15ஆம் நாள், பால் குடம், கரகம் எடுத்தல், அலகு குத்துதல், பூ மிதித்தல் என்று விழா மையப்பகுதியில் குடிகொண்டிருக்கும்.
இதில் இடையில் ஆடி முதல் வெள்ளி, ஆடி 18(ஆடிப்பெருக்கு) என்று ஒவ்வொன்றாக முடிவுக்கு வரும்.
~ நீங்க நினைக்கலாம் எல்லா ஊரிலும் இது தானே நடக்கும் இதுல என்ன ஸ்பெஷல் இருக்குன்னு?!.
கிராமத்துல ஒரு சின்ன ஊருல நடக்குறதுக்கும், சிட்டில ஊரே குதூகலமாக இருக்குறதுகும் வித்தியாசம் இருக்கு.!
இதுல சேலம் பழையபேருந்து நிலையம் அருகில் இருக்குற போஸ் மைதானத்தில், பெரிய பொருட்காட்சி
அரசாங்கத்தால் நடத்தப்படும். ஆடிப்பண்டிகையை ஒட்டி, அதன் காரணமாகவே நடத்தப்படும் ஒரு பொருட்காட்சி/கண்காட்சி. திருவிழாவின் மைய நாட்களன்று பொருட்காட்சியில் entry க்கு கொடுக்குற டிக்கெட்ல கலெக்ட் ஆகுற அமௌண்ட் எவ்வளவு அப்டின்னு செய்தில பேப்பர்ல எல்லாம் வரும்! அந்த அளவுக்கு அந்த ஒரு
7 நாட்கள் கூட்டம் கூடும் சேலத்தின் மையப்பகுதியில். இதில் மையத்தில்உள்ள சேலம் கோட்டை மற்றும் குகை மாரியம்மன் கோவில் முக்கியபங்கு வகிக்கும்.
இந்த கோவிலில் திருவிழாவின் முக்கியமான மூன்றாம் நாள் வண்டிவேடிக்கை என்னும் ஒரு சிறப்பு மாலையில் ஆரம்பித்து இரவு முடியும்வரை நடக்கும்.
சுற்றுவட்டாரத்தில் 40km தொலைவில் இருந்தும் மக்கள் இந்த நிகழ்வை காண வருகைதருவார்கள். அந்த அளவிற்கு சிறப்பாக நடக்கும். அதன் ஒரு பகுதியின் யூடியூப்/வீடியோ லிங்க் கீழே.
இந்த வழியில் செல்லும் பேருந்துகள் அனைத்தும் அன்று மதியத்தில் இருந்து மறுநாள் காலைவரை
நிறுத்தப்படும். இந்த மூனு நாள் திருவிழாவுக்கு சேலத்து மக்கள் எங்க இருந்தாலும், சேலத்தை நோக்கி வருவாங்க கண்டிப்பா. அந்த அளவுக்கு சிறப்பா நடக்கும்!
இந்த மூனு நாள்ல தெரிஞ்சிடும் ஊருக்குள்ள எத்தன பொண்ணுக்கு கல்யாணம் ஆகிருக்கு, யார் யாரு ரெடியா இருக்காங்க. அப்டின்னு.
அந்த ஒரு வாரம்
பசங்க எல்லாம் யோசிக்கணும், இவ்வளவு நாள் இவளுங்க எல்லாம் எங்க தான் மறைந்திருந்தார்கள்ன்னு!
யோசிச்சி கூட பாக்க முடியாத அளவுக்கு தேவதை கணக்கா புடவைலையும் தாவனிலையும் கோவில் கோவிலா குடும்பத்தோட சுத்திட்டு இருப்பாங்க. பசங்க மனசு திருவிழா கடைல கட்டி தொங்கவிட்டிருக்குற பலூன் மாதிரி
அவங்களையே சுத்தி சுத்தி பறந்துட்டு இருக்கும். இந்த ஒரு வாரத்துல மனச தொலைத்த பசங்களும் பொண்ணுங்களும் ஏராளமாக இருப்பாங்க. 😍♥️
சேலம் சிட்டில ஏறியாவுக்கு ஒரு கோவில் இருக்கும், பண்டிகை ஆரம்பமே அந்த இரண்டு பெரிய கோவில்ல இருந்து தான் ஆரம்பிக்கும். அதனால ஊருமுழுக்க விழாக்கோலம்
பூண்டிருக்கும். மையவிழா நடக்குற 5நாள் செவ்வாய்-ஞாயிறு வரை சேலத்துல லோக்கல் ஹாலிடே இருக்கும் அரசு அறிவிப்போடு. ஸ்கூல், Govt, எல்லாமே லீவ் ல இருக்கும்!
இந்த ஒரு வாரத்துல ஊருக்குள்ள இருக்குற பெரியகை, ஆளு இருக்குறவன் எல்லாம் கிரின்ச் கூ🔥யானுங்க மாதிரி சுத்திட்டு இருப்பானுங்க. Eg.👇🏽
பக்தி மயத்துல இருக்குறவங்கலும் இருப்பாங்க.
இந்த ஒரு மாசமும் கோவில்ல கூழு ஊத்துறது பிரசாதம் குடுக்குறதுன்னு அமர்க்களமாக இருக்கும். ஊரு முழுக்க எங்க பாத்தாலும் ரேடியோல சாமி பாட்டு தான். சவுண்ட் சிஸ்டம்லாவச்சு நைட்ல பாட்டுகச்சேரி, Dance, நாடகம் பட்டி மன்றம்ன்னு, சேலம் ஜொலிக்கும்.
இதுல எதாவது ஒரு கோவில்ல விஜய்டிவி சன்டிவி பிரபலங்கள்ன்னு கூட்டிட்டு வந்து புரோகிராம் பண்ணுவாங்க. அந்த கோவில்களை தேடி தேடி போயி மக்கள் பாப்பாங்க..
ரொம்ப நாள் கழிச்சி சந்திக்கும் சொந்தங்கள், நண்பர்கள், சரக்கடிக்கிர gang, போலீஸ்கிட்ட அடிவாங்குற gang இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கும்
சொல்லிகிட்டே போகலாம்.. அவ்வளவு இருக்கும் இந்த ஒரு மாதத்தில்.. 😍🤩🎊
😔 ஆனா போன வருடம், இந்த வருடமும் கொரோனா காரணமா விழா நடக்கல. எத்தனையோ வருடத்திற்கு பிறகு விழா தடைபடுது அப்டின்னு போன வருடம் சன் செய்தில சொன்னாங்க. வருடம் மட்டும் சரியா ஞாபகம் இல்ல, ஆனால் அதிக வருடம் அது ஞாபகம்
நேற்று முன்தினம் 1கிராம்ல தங்கத்துல தோடு எடுக்க நகைக்கடைக்கு போயிருந்தேன். பாத்து செலக்ட் பண்ணது 0.930g இருக்குற கல்லுவச்ச தோடு. 1கிராம் Gold price அன்னைக்கு 4820/- ரூபா. ஆனா, அந்த .930g தோடு மொத்தமா சேதாரம், செய்கூலி மட்டும் சேர்த்து 5700/- சொன்னாங்க. GST சேர்த்தால் இன்னும்
அதிகமாகும். இது என்னடா ஒரு கிராம் கூட வர்ல இதுக்கு இவ்வளவு price ஆ அப்படின்னு வியந்து, இதுல சேதாரம் மட்டும் எவ்வளவு கிராம் வருதுன்னு கேட்டா, 0.230g சேதாரம் வருது அந்த 0.930g இருக்குற தோடுக்கு.
எதுவும் பேசல பேசிட்டு வரோம்னு சொல்லிட்டு அப்படியே எந்திரிச்சு வந்துட்டேன்.
அந்த கடை வாசல்லையே நின்னு, நண்பன் ஒருநாள் குடுத்த தங்கம் செய்ற ஆசாரி ஒருத்தரோட ஞாபகம் வந்தது நம்பர் mobile ல இருந்தது,. சரின்னு அவருக்கு போன் அடிச்சு, என்ன அறிமுகப்படுத்திகிட்டு, தோடு எடுக்கணும்னு சொல்லி அவருகிட்ட இடம் எங்கனு கேக்க, அந்த Jewelleryக்கு பின்பக்க வீதில
ரொம்ப எதிர்பார்த்த படம். ஆனா, எதிர்பார்ப்பை முழுமையா பூர்த்தி பண்ணல.! போலீஸ் டிரெய்னிங் எப்படி இருக்கும்னு காட்ட முற்பட்டு மிஸ் பண்ணிட்டாங்க. இயக்குனர் வெற்றிமாறன் and தமிழ் இவங்க சொல்ற விசயம் போலீஸ்'ஸ எப்போவும் நான் என் படத்துல நல்லவனா காட்டமாட்டேன்.
இந்த படத்துல தமிழ் அந்த ஒரு விசயத்தை மட்டுமே mind ல வச்சிகிட்டு எடுத்த மாதிரி இருக்கு.
படத்துல கட்டுறதே 7, 8 main போலீஸ் கேரக்டர் தான். அதுல எல்லாரும் தப்பு பண்றான் அது அவங்க ஒருத்தனுக்கு ஒருத்தன் தெரிஞ்சிருக்கு. டிரெய்னிங் குடுக்குறது செலக்ட் பண்றது போட்டி வக்கிறதுன்னு எல்லாமே
அவங்களுக்குள்ளையே நடக்குறதால தட்டி கேக்குற அளவுக்கு பெரிய ஆபிசியல்ஸ் யாரும் இல்லாத மாதிரி ஒரு ஃபீல் குடுக்குது.
திரைக்கதை சரியா அமையல. ஒரு சின்ன இடத்துக்குள்ள நடக்குற டிராமா மாதிரி தான் படம் இருக்கு.
பயிற்சி எடுக்குற போலீஸ், ட்ரைனிங் குடுக்குற போலீஸ் இதுல இருந்த ஆளுங்களோட
ஆனா, சில நிறை குறை ரெண்டுலையும் உண்டு. அதனால நீங்க தான் சூதானமா முடிவு எடுக்கணும். முக்கியமா வீட்ல உக்காந்து கலந்து பேசுங்க, அது தான் ரொம்ப முக்கியம்.
நிலம் வாங்குறதுக்கு கண்டிப்பா கைல இருந்து தான் காசு போட்டாகணும், இல்லையா பெர்சனல் லோன் எடுக்கணும். இது உங்கள் விருப்பம்.
வீடுகட்ட ஹோம்லோன் வாங்குறது கொஞ்சம் process அதிகம், அதுவே கட்டுன வீடு வாங்க ஹோம்லோன் போடுறது அதை விட பெரிய process. இதுக்கு தனியா யாராவது thread போட்டா நல்லா
பலருக்கு உப்புமா'ன்னாலே ஏன்தான் மூஞ்சி அப்படி போகுதோ தெரியல..😏 உப்புமா புடிக்காதவங்க எல்லாரும் இன்னும் டேஸ்டியா உப்புமா சாப்டதில்லனு தான் எனக்கு தோணுது.
ரவா உப்புமா, சேமியா உப்புமா, அவல் உப்புமா, இது மூனும் ஒரே ரகம் தான். செய்ற விதத்துல செஞ்சா மனுசகறியே நல்லா இருக்கும்.! இதுல
உப்புமாவ செய்ற விதத்துல செஞ்சா அத அடிச்சிக்க ஆளே கிடையாது morning breakfast ல! இட்லி தோசை பூரி பொங்கல் கூட ஒரு மாதிரி மந்தமா இருக்கும், தூக்கம் வரவைக்கும். ஆனா உப்புமா பிரிஸ்க்கா இருக்கா வைக்கும். என்னோட experience ல.!
என்னோட அம்மா அருமையா
உப்புமா செய்வாங்க. என்னதான் டேஸ்ட்டா செஞ்சாலும் அவங்க கூட தொட்டுக்க சுகர் வச்சிட்டு தான் சாப்பிடுவாங்க. ஆனா நான் வீட்ல side dish இல்லாமலே சாப்பிடுவேன்.
சுகர் மாதிரி உப்புமாக்கு நான் சாப்பிட்ட பலவிதமான side dish இருக்கு 🤤. என்னென்ன உப்மா க்கு சைட் டிஷ் ஆ வச்சி சாப்பிடலாம்.!👇🏼
Bajaj Finance ல எப்படி எல்லாம் EMI ல எடுக்கும்போது ஏமாத்துவாங்க அப்டின்னு ஆல்ரெடி ஒரு thread போட்டேன் (Pinned tweet ல இருக்கு படிக்காதவங்க போயி படிக்கவும்). அதே வரிசைல மொபைல் ஷோரூம்ல எப்படி நடுத்தர மக்களை EMIன்ற பேருல ஏமாத்துறாங்கன்னு
இங்க எல்லாரும் தெரிஞ்சிக்க வேண்டிய ஒரு விசயம். Document charge அப்டின்றது, பெரிய கம்ப சூத்திரமோ காம சூத்திரமோ கிடையாது.
வாங்குற பொருளுக்கு உங்களால மாசா மாசம் சரியா EMI கட்ட முடியுமான்னு பாத்து எதாவது ஒரு அடையாள அட்டைய வாங்கி ரிஜிஸ்டர் பண்ணி, ஒரு பேப்பர்/கார்ட்
ல தருவாங்க அவ்வளவு தான். மிஞ்சி போனால் ஒரு 10ரூபா செலவு.
இது bike அப்படின்னா 2k, 3kகுள்ள வாங்குறாங்க இதுவே அதிகம் தான். ஆனா 8k, 10k, 15k மதிப்புள்ள உள்ள மொபைல்க்கு 1100 ரூபா document charge வாங்குறாங்க @Poorvika_Mobile ல. ஒப்பெனா சொல்லப்போனா கொள்ளை அடிக்கிறாங்க வேற ஒன்னும் இல்ல.
ஒரு நட்சத்திர ஹோட்டலில் இரவு முழுக்கக் குடித்து, கும்மாளமிட்டு நிலைதடுமாறி இரண்டு பேர் துணையுடன் தவழ்ந்து காரில் ஏறிப்போகிற மனிதர், மறுநாள் காலை டாஸ்மாக் வாசலில் கால் இரண்டையும் பரப்பிக்கொண்டு தலைதொங்கி, போதையில் கிடக்கும் ஒருவரைப் பார்த்து
'நாஸ்ட்டி பீப்பிள்’ என்கிறார். நேற்றுஇரவு அவரும் 'நாஸ்ட்டி பீப்பிள்’ ஆகத்தான் இருந்தார்!
சவாரிக்காக அல்லாடி நிற்கும் ஆட்டோ மீது சர்ரென்று லத்தியை வீசி, 'எடு வண்டியை’ என்றுஅதட்டும் போலீஸ்காரர், சிக்னல் முனை ஷாப்பிங் மால் வாசலில் காரை நிறுத்திவிட்டுப் போனவரிடம், 'ஏன் சார் இப்படிப்
பண்றீங்க?’ என்று குசலம் விசாரித்து, சலாம் அடித்து அனுப்பிவைக்கிறார். லத்தியால் ஆட்டோவில் அடித்ததைப் போல கார் டிக்கியில் அடிக்க அவருக்கு மனம் வருவது இல்லை.
'போன மாசம் வரை 550 ரூபாய்தான் டிக்கெட். இப்போ 750 ரூபாய் ஆக்கிட்டானுவலே!’ என்ற அங்கலாய்ப்புடன் ஏ.சி. பேருந்தில் ஏறுகிறவர்கள்