தோழர் திருமுருகன் காந்தி என்பவர் கதை சொல்லி சீமான் அல்ல. எனவே ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தி, அரசின் மீது குற்றச்சாட்டுகளை வைக்கும் முன், குறைந்தபட்சம் தரவுகளை சரிபார்த்து இருக்க வேண்டும்.
ஒருவேளை குடந்தையரசன் மேல் உள்ள நம்பிக்கையில் தெரிவித்து விட்டார் போல.!
1 தனி பட்ஜெட் கோரிக்கை வரவேற்க வேண்டிய ஒன்று தான். அதில் மாற்று கருத்து இல்லை.
ஆனால் தெலுங்கானா தனிபட்ஜெட் வைத்து அள்ளி கொடுப்பது போலவும், தமிழ்நாடு வஞ்சிப்பது போலவும் சொல்வது தவறு.
தெலுங்கானா அரசின் ஆதிதிராவிட பங்குடியினர் நலத்துறை நிதி ஒதுக்கீடு 21,306 கோடி
திமுக அரசு பொறுப்பேற்ற பின் இந்த நிதியாண்டில் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை மட்டும் 16,000 கோடி ரூபாய்
இது தவிர தாட்கோ மூலம் 4,140 கோடி ரூபாய் அவர்களின் பொருளாதார மேம்பாட்டு தொழில் முனைவோருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
தாட்கோ குறித்து பேசும் அவர், திமுக அரசு ஒதுக்கியுள்ள தொகை குறித்து எதுவும் சொல்லவில்லை.
கடந்த அதிமுக ஆட்சியில் 2020-21 ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறைக்கு ஒதுக்கப்பட்ட தொகை 4,100 கோடி மட்டுமே என்பதையும், தாட்கோ நிதி ஒதுக்கவில்லை என்றும் தெரிந்து கொள்ளவும்
2 Backlog Vacancies குறித்து 2007ஆம் ஆண்டு ஆய்வுக்குழு வைத்து 2010ஆம் ஆண்டு அறிக்கை பெற்றது திமுக தான். 2011ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கு பின் 10ஆண்டுகள் அதிமுக அதை நிரப்ப நடவடிக்கை எடுக்கவில்லை
ஆட்சிக்கு வந்ததும் ஜூன் மாதம் இதற்கான நடவடிக்கை தொடங்கிவிட்டது தெரியாமல் பேசுகிறார்.
3 EWS இட ஒதுக்கீடு பெற வைத்துள்ள வருமான உச்ச வரம்பையும், SC/ST உதவித்தொகை பெற நிர்ணயித்துள்ள வருமான உச்ச வரம்பையும் குழப்பி தமிழ்நாடு அரசு வஞ்சிப்பதாக சொல்கிறார்
2.5 லட்சம் வருமானம் என்ற அளவில் SC/ST இட ஒதுக்கீடு கிடையாது. அவர்களுக்கான Scholarships பெறவே என்று புரிந்து கொள்ளவும்
4 தெலுங்கானா 200 பேரை வெளிநாடு அனுப்பி படிக்க வைத்ததாகவும், இங்கு 4 மாணவர்களுக்கு மட்டுமே வழங்கி உள்ளதாக சொல்கிறார். 4 பேர் என்ற தகவலை சொன்னதே இந்த ஆண்டு பட்ஜெட்டில் தான்.
தெலுங்கானா நிதி ஒதுக்கீடு 7 கோடி, தமிழ்நாடு அரசு 5 கோடி ஒதுக்கி உள்ளது.
இதை எல்லாம் தெரிந்து கொண்டும், அரசின் துறை சார் அமைச்சரிடம் எந்தவித கோரிக்கையும் வைக்காமல், அரசின் மேல் குறை சொல்ல விரும்பும் குடந்தையரசன் போன்றோரின் குரலாய் மட்டுமே பத்திரிக்கையாளர் சந்திப்பில், திருமுருகன் காந்தி எடுத்து வைத்து இருக்கிறாரோ என்ற சந்தேகம் வருகிறது. நன்றி.
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.