#unsolvedmysteries #PCMreview "விடை தெரியா மர்மங்கள் : பாகம் 3".இன்று நாம் பார்க்க போவது 62 ஆண்டுகளாகியும் இன்னும் மர்மமாக நீடிக்கும் 9 பேர் மரணம் அடைந்த "டயட்லோவ் பாஸ்"நிகழ்வு பற்றி தான்.ஜனவரி 23,1959 அன்று Ural Polytechnic Institute கல்லூரியை சேர்ந்த 10 பேர் ரஷ்ய நாட்டில்
இருக்கும் Sverdlovsk Oblast பகுதியில் வடக்கு Ural மலை தொடர்ச்சியில் இருக்கும் kholat Syakhl என்ற மலைக்கு செல்ல முடிவெடுக்கிறார்கள்.இவர்கள் அனைவரும் மலையேறுதலில் கிரேடு 2 சான்றிதழ் பெற்றவர்கள்.கிரேடு 3 சான்றிதல் பெற 300 கிலோமீட்டர் பயணம் செய்திருக்க வேண்டும்.எனவே அச்சான்றிதலை
பெற Sverdlovsk பகுதி அதிகாரிகளிடம் அனுமதி வாங்கி மிகவும் கடினமான 10 கிலோமீட்டர் நீளமுள்ள பாதையாக இருக்கும் Oterten என்ற இடத்திற்கு செல்ல முடிவு செய்கிறார்கள். இக்குழுவிற்கு இகோர் டயட்லோவ் (23) என்ற மாணவர் தலைமை தாங்குகிறார்.ஜனவரி 25 ஆம் தேதி ரயில் மூலம் இவ்டேல் என்ற இடத்தை
அடைகிறார்கள்.அடுத்து லாரி மூலம் விசாய் என்ற இடத்தை அடைகிறார்கள்.பின்பு ஜனவரி 27ஆம் தேதி கோரா ஒட்டர்டன் என்ற இடத்திற்கு பயணத்தை ஆரம்பிக்கிறார்கள்.அடுத்த நாள் குழுவில் ஒருவரான யூரி யுடின் என்ற நபர் மூட்டு வலி காரணமாக திரும்பி செல்கிறார்.மீதமுள்ள 9 பேரும் இரண்டு நாள் பயணம் செய்து
மலையேறும் பகுதியின் விளிம்பை அடைகிறார்கள்.மோசமான வானிலை காரணமாக மேற்கு திசைக்கு திசைமாறி செல்கிறார்கள்.இன்னும் 1.5கிலோமீட்டர் பயணம் செய்தால் அடர்ந்த காட்டில் சென்று இரவு தங்கலாம்.ஆனால் அவ்வளவு தூரம் செல்ல வேண்டுமே என்று அங்கேயே டென்ட் அடித்து தங்குகிறார்கள்.உடனே தந்தி மூலம்
இவர்களின் குடும்பத்தினருக்கு பிப்ரவரி 12 ஆம் தேதிக்குள் தகவல் தெரிவிப்போம் என்று முன்கூட்டியே கூறுகிறார்கள்.மலையேறுதலில் தாமதம் தவிர்க்க இயலாது என்பதால் சிறிது தாமதம் ஆகலாம் என்றும் கூறுகிறார்கள்.அன்றைய இரவு உணவு சமைத்து சாப்பிட ஆரம்பிக்கிறார்கள்.நேரம் நடு இரவை நெருங்குகிறது.
பனிமலையில் இரவு நேரம் எங்கும் இருட்டு மட்டும் தான்.கடுமையான குளிர் காற்று வீசும் நேரம்.அந்த நேரத்தில் பக்கத்தில் யாராவது வந்தாலோ தெரியாது அல்லது பேசினாலோ கூட கேட்காது.திடீரென அனைவரும் டென்ட்டில் இருந்து வெளியே அவசர அவசரமாக வெளியேறுகிறார்கள்.இருட்டில் எந்த பக்கம் என்று தெரியாமல்
தோராயமாக ஒரு பக்கத்தை தேர்வு செய்து இந்த பயணம் இன்றோடு முடிவடைகிறது என்று தெரியாமல் செல்கிறார்கள்.இருட்டு மற்றும் மோசமான வானிலை காரணமாக இரண்டு பேர் ஒரு பக்கமும் 3 பேர் சிறிது இடைவேளையில் வேறொரு பக்கமும் மீதம் 4 நான்கு பேர் இன்னொரு பக்கமும் வழிதவறி செல்கிறார்கள்.இரவு முடிகிறது.
இவர்களின் வாழ்கையும் முடிகிறது.குறிப்பிட்ட 12ஆம் தேதி செய்தி வந்து சேராததால்,சில நாட்கள் பொறுத்திருந்து 20 ஆம் தேதி இவர்களின் பெற்றோர் கல்லூரியை அணுகி தேட சொல்கிறார்கள்.ஆசிரியர்கள்,மாணவர்கள் குழுவினர் முதலில் செல்கிறார்கள்.பிறகு போலீஸ் மற்றும் ராணுவம் செல்கிறது.சில நாட்கள்
பயணத்திற்கு பிறகு பிப்ரவரி 26ஆம் தேதி இவர்கள் தங்கிய டென்ட் யாருமில்லாமல் கிழிந்த நிலையில் இருப்பதை காண்கிறார்கள்.பயணம் செய்தவர்களின் உடமைகளும் அங்கே இருக்கிறது.சிறிது நேரம் கழித்து இவர்கள் பயணம் செய்த காலடி தடத்தை தேடுதல் குழுவினர் கண்டறிகிறார்கள்.1.5 கிலோமீட்டர் தூரம் வெறும்
காலில் இவர்கள் நடந்து சென்றது தெரிய வருகிறது.500 மீட்டருக்கு பின் காலடி தடம் பனியினால் மூடப்பட அந்த பாதையை பின்பற்றி தோராயமாக செல்கிறார்கள்.சில தூரம் கழித்து ஒரு பைன் மரத்திற்கு கீழ் நெருப்பு முட்டி குளிர் காய்ந்தது போல் விறகுகள் காணப்படுகிறது.பக்கத்தில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்
வெறும் உள்ளாடை மட்டும் அணிந்த நிலையில் பனியில் உறைந்த நிலையில் கிடக்கிறார்கள்.அந்த மரம் 5 மீட்டர் அளவிற்கு கிளைகள் முறிக்கபட்ட நிலையில் காணப்படுகிறது.எதையாவது பார்க்க யாரோ ஒருவர் மேலே எற முயற்சி செய்திருக்கலாம் என்று எண்ணுகிறார்கள்.மரத்தில் இருந்து டென்ட் நோக்கி செல்லும் வழியில்
300,480 மற்றும் 680 மீட்டர் தொலைவில் மூன்று சடலங்கள் கிடைக்கிறது.இருவர் முழு ஆடையை அணிந்திருக்க,ஒருவர் அரை நிர்வாணமாக கிடக்கிறார்.மற்ற நான்கு பேரையும் எவ்வளவு தேடியும் கிடைப்பதில்லை.முடிவாக இரண்டு மாதங்கள் கழித்து மே 4ஆம் தேதி மலையின் கீழ் செல்லும் ஒரு ஆற்றில் நால்வரும் பனிக்கு
4 மீட்டர் கீழே உறைந்த நிலையில் கிடக்கிறார்கள்.அனைவரின் உடலும் உடற்கூறாய்விற்கு உட்படுத்தபடுகிறது.ஆய்வில் பல அதிர்ச்சிகரமான முடிவுகள் கிடைக்கிறது.இவர்கள் அனைவரும் உணவு உண்டு 6 முதல் 8 மணி நேரம் கழித்து இறந்திருக்கிறார்கள்.சிலர் கிழிந்த ஆடையையும்,சிலர் அரை நிர்வாணமாகவும் டென்ட்டில்
இருந்து வெளியேறியிருக்கிறார்கள்.6 பேர் உடல் வெப்பக்குறைவு காரணமாகவும்,2 பேர் நெஞ்சுவலி காரணமாகவும்,ஒருவர் மண்டை எலும்புகள் நொறுங்கி இறந்திருக்கிரார்கள்.இது மட்டும் தான் வெளிஉலகிற்கு அரசாங்கம் கூறிய தகவல்கள்.சில மாதங்கள் கழித்து ஒரு பத்திரிக்கை நிருபருக்கு உடற்கூறாய்வு முடிவுகளின்
அறிக்கை மருத்துவர் ஒருவர் மூலம் கிடைக்கிறது.அதை அப்படியே வெளிஉலகிற்கு தெரியப்படுத்துகிறார்.இறந்ததற்கான காரணமாக அரசாங்கம் கூறியது பனிப்புயல் மற்றும் பனிச்சரிவு இவர்களை தாக்கி அதன் மூலம் உடல்சுகவீனம் அடைந்து இறந்தார்கள் என்று.ஆனால் இறந்தவர்களில் ஒருவரின் நாக்கு அறுபட்டது,இருவரின்
கண்கள் நொண்டி எடுக்கப்பட்டது,ஒருவரின் கண் இமை அகற்றப்பட்டது என்பதை அரசாங்கம் மறைத்தது.இன்னொரு அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால்,ஒருவரின் மண்டை ஓடு உடைந்து,நெஞ்சு நொறுங்கி இறந்தார் என்பது தான்.இரண்டு பேரின் உடமைகளில் கதிர்வீச்சு இருந்தது என்பது தான் இன்னொரு அதிர்ச்சிகரமான தகவல்.
இந்த தகவல்கள் எல்லாம் ஏன் அரசாங்கம் மறைத்தது என்று தெரியவில்லை.தேடுதல் குழுவினர் கூறிய தகவல்கள் பின்வருமாறு:பனிப்புயல் வந்ததற்கான தடம் எதுவும் இல்லை.அனைவரும் டென்ட் விட்டு வெளியே பொறுமையாக நடந்து சென்றிருக்கிறார்கள்.இவர்களை தவிர அங்கு யாரும் வரவில்லை.உடமைகள் எடுத்து செல்லவில்லை.
இவர்களுடன் 11வது நபர் செல்ல நினைத்து பிறகு இன்னொரு குழுவினருடன் அவர் சென்றிருக்கிறார்.அந்த குழுவினர் கூறிய சில தகவல்கள்:மலையேறும் பொது ஆரஞ்சு நிறத்தில் வானில் இரவு 2 மாதங்களுக்கு ஒரு ஒளி தெரிந்தது.மர்மமான ஒன்று வானில் அசைந்து கொண்டே இருந்தது.பனிப்புயலை நாங்கள் பார்க்கவில்லை.
தூரத்தில் ஒரு பெரிய சத்தம் கேட்டது.குளிரின் அளவு -25 முதல் -30°c வரை இருந்தது.இதற்கு ஆதாரமாக இறந்த ஒருவர் தன்னுடன் எடுத்த சென்ற கேமராவில் தூரத்தில் ஒரு பெரிய மற்றும் ஒரு சிறிய ஒளி தெரிந்ததை புகைப்படம் எடுத்திருக்கிறார்.9 பேர் இறந்ததற்கு தேடுதல் குழுவினர் எந்த காரணமும் உறுதியாக
கூறாமல் இருக்க,அரசாங்கம் பனிப்புயல் தான் காரணம் என்று கூறுகிறது.கண்கள் காணாமல் போனது, நாக்கு அறுப்பட்டது, கண் இமை காணாமல் போனது போன்றவற்றுக்கு விடையில்லை.சாதாரண ஒரு மனிதரால் ஒருவரை நெஞ்சு எலும்பு நொறுங்கி போகும் அளவிற்கு கொல்ல முடியாத போது 9 பேரில் ஒரு மண்டை ஓடு உடைந்து நெஞ்சு
எலும்பு உடைந்து இறந்தது எப்படி என்ற கேள்விக்கும் பதிலில்லை.சில ஆடைகள் கிழிந்து,சில ஆடைகளின் மீது கதிர்வீச்சு வந்தது எப்படி என்று தெரியவில்லை.இறந்தவர்களின் நினைவாக டென்ட்டில் இருந்து 500 மீட்டர் தொலைவில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.இறந்த இகோர் டயட்லோவ் பெயர் தான் இந்த பாதைக்கு
வைக்கப்பட்டுள்ளது.இகோர் டயட்லோவ் எடுத்து சென்ற டைரியில் கடைசியாக எழுதிய வாசகம்"இந்த மலை நமக்கு என்ன ஆச்சர்யத்தை அளிக்க காத்திருக்கிறதோ?".இன்னொரு கூடுதல் தகவல்.இவர்கள் சென்ற மலையின் இன்னொரு பெயர்" The Dead Mountain".விரைவில் அடுத்த விடை தெரியா மர்மம் பற்றிய தொடரில் சந்திப்போம்!👽
@Mr_Bai007 @GiriSuriya_7 @peru_vaikkala @Karthicktamil86 @karthick_45 @iam_vikram1686 @iam_DrAjju @JamesStanly @Jeganm27 @kaviminigayle @CineversalS @smithpraveen55 @Smiley_vasu__ @kovai_nazar @kovaiathipar @Karthi_Genelia @innocent_boy_sk @moviie_time @cinemapaithyam @thisaffi
@cinemapuram @MAbubakkarSith5 @iamkapilan @Tonystark_in @chithradevi_91 @TamilDelight @Soru_MukkiyamDa @vanhelsing1313 @ValluvanVazhi @thechanakkiyan @KalaiyarasanS16 @Ganae_Ramesh @tamilhollywood2 @cinemafan245 @MKT_Bhagavathar @ItsGurubaai @Dpanism @Yuvan____
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.