Prince Profile picture

Sep 15, 2021, 10 tweets

அண்ணன் சீமான் @SeemanOfficial அவர்களுக்கு, நீங்கள் சொல்வது உண்மை தான். தமிழ்நாட்டுக்கு தான் தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார் அறிஞர் அண்ணா

ஆனால் அது ஒன்றும் வெறும் பெயர் சூட்டு விழா, கிடா விருந்து என்று ஒரே நாளில் நடந்துவிடவில்லை என்பதை உங்கள் தம்பிகள் தெரிந்து கொள்ளவே இந்த பதிவு

தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்பது உட்பட 12 கோரிக்கையை வலியுறுத்தி, ஐயா சங்கரலிங்கனார் 1956 ஜூலை 27ம் தேதி முதல் 75நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து 1956 அக்டோபர் 13ம் நாள் உயிர் துறந்தார்.

அவரின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாத அன்றைய முதல்வர் ஐயா காமராஜர் தான்.

அதே காலக்கட்டத்தில், தந்தை பெரியார் 1955 அக்டோபர் 10 "தமிழ்நாட்டை விட்டு மலையாளிகள், ஆந்திரர்கள், கன்னடர்கள் பிரிந்து போன பின்பும் கூட தமிழகத்துக்கு 'தமிழ்நாடு' என்று பெயர் இருக்கக்கூடாது எனச் சிலர் சூழ்ச்சி செய்கிறார்கள்" என அறிக்கை மூலம் எச்சரிக்கை செய்தார்.

தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யவேண்டும் என்ற குரல் சட்டமன்றத்தில் ஒலித்ததே, திமுகவின் 1957ம் சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு பின் தான்.

திமுக உறுப்பினர் கொண்டு வந்த தீர்மானம் ஐயா காமராஜர் அவர்களின் காங் கட்சியால் தோற்கடிக்கப்பட்டது.

Source: Page No 15
assembly.tn.gov.in/archive/2nd_19…

மீண்டும் 1960, 1961 என இரண்டு முறை தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைத்தும், அதை ஐயா காமராஜர் தலைமையிலான அரசு அதனை நிறைவேற்றவில்லை.

Source: Page No 52
assembly.tn.gov.in/archive/2nd_19…

தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என 1964ம் ஆண்டு திமுக உறுப்பினர் ஶ்ரீ இராம அரங்கண்ணல் மீண்டும் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தார்.

ஆனால் ஐயா காமராஜரை போலவே அன்றைய முதல்வர் ஐயா பக்தவத்சலமும் நிறைவேற்றவில்லை.

Source: Page No 57
assembly.tn.gov.in/archive/3rd_19…

1967ம் ஆண்டு திமுக ஆட்சி அமைத்த உடன், ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்ற அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும்” என்கிற தீர்மானம் முதல்வர் பேரறிஞர் அண்ணாவால் நிறைவேற்றப்பட்டது.

ஒரு தீர்மானம் நிறைவேற்ற 11 ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது.

Source: Page No 5
assembly.tn.gov.in/archive/4th_19…

பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற தீர்மானத்தின் அடிப்படையில், 1968ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் 1968 நவம்பர் 23ம் தேதி, MADRAS STATE (ALTERATION OF NAME) ACT, 1968 நிறைவேற்றப்பட்டது.

Central Act 53 of 1968:
lawsisto.com/Read-Central-A…

பேரறிஞர் அண்ணா தான் தமிழ்நாட்டு அரசின் சின்னத்தில் குறிக்கோள் வாசகமாக நிலவி வந்த “சத்யமேவ ஜெயதே” என்னும் வடமொழித் தொடரை “வாய்மையே வெல்லும்” எனவும், மந்திரி என்பதை “அமைச்சர்” என்றும், கனம் என்ற சொல்லை “மாண்புமிகு” எனவும், சபாநாயகர் என்பதை “அவைத்தலைவர்” எனவும் மாற்றினார்.

பெயர் மாற்றியது பெரிய சாதனையா என்று கேட்பவர்களுக்கும், 1968 டிசம்பர் 1ம் தேதி பாலர் அரங்கில் நடந்த தமிழ்நாடு என்று அதிகாரப்பூர்வமாக பெயர் சூட்டும் விழாவில், பதில் சொல்லி உள்ளார் பேரறிஞர் அண்ணா. அன்று அவர் சொன்னது போல இன்றும் திமுக ஆட்சி தான். நன்றி

#HBDAnna113
#HBDAringarAnna

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling