அண்ணன் சீமான் @SeemanOfficial அவர்களுக்கு, நீங்கள் சொல்வது உண்மை தான். தமிழ்நாட்டுக்கு தான் தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார் அறிஞர் அண்ணா
ஆனால் அது ஒன்றும் வெறும் பெயர் சூட்டு விழா, கிடா விருந்து என்று ஒரே நாளில் நடந்துவிடவில்லை என்பதை உங்கள் தம்பிகள் தெரிந்து கொள்ளவே இந்த பதிவு
தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்பது உட்பட 12 கோரிக்கையை வலியுறுத்தி, ஐயா சங்கரலிங்கனார் 1956 ஜூலை 27ம் தேதி முதல் 75நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து 1956 அக்டோபர் 13ம் நாள் உயிர் துறந்தார்.
அவரின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாத அன்றைய முதல்வர் ஐயா காமராஜர் தான்.
அதே காலக்கட்டத்தில், தந்தை பெரியார் 1955 அக்டோபர் 10 "தமிழ்நாட்டை விட்டு மலையாளிகள், ஆந்திரர்கள், கன்னடர்கள் பிரிந்து போன பின்பும் கூட தமிழகத்துக்கு 'தமிழ்நாடு' என்று பெயர் இருக்கக்கூடாது எனச் சிலர் சூழ்ச்சி செய்கிறார்கள்" என அறிக்கை மூலம் எச்சரிக்கை செய்தார்.
தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யவேண்டும் என்ற குரல் சட்டமன்றத்தில் ஒலித்ததே, திமுகவின் 1957ம் சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு பின் தான்.
திமுக உறுப்பினர் கொண்டு வந்த தீர்மானம் ஐயா காமராஜர் அவர்களின் காங் கட்சியால் தோற்கடிக்கப்பட்டது.
மீண்டும் 1960, 1961 என இரண்டு முறை தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைத்தும், அதை ஐயா காமராஜர் தலைமையிலான அரசு அதனை நிறைவேற்றவில்லை.
1967ம் ஆண்டு திமுக ஆட்சி அமைத்த உடன், ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்ற அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும்” என்கிற தீர்மானம் முதல்வர் பேரறிஞர் அண்ணாவால் நிறைவேற்றப்பட்டது.
ஒரு தீர்மானம் நிறைவேற்ற 11 ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது.
பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற தீர்மானத்தின் அடிப்படையில், 1968ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் 1968 நவம்பர் 23ம் தேதி, MADRAS STATE (ALTERATION OF NAME) ACT, 1968 நிறைவேற்றப்பட்டது.
பேரறிஞர் அண்ணா தான் தமிழ்நாட்டு அரசின் சின்னத்தில் குறிக்கோள் வாசகமாக நிலவி வந்த “சத்யமேவ ஜெயதே” என்னும் வடமொழித் தொடரை “வாய்மையே வெல்லும்” எனவும், மந்திரி என்பதை “அமைச்சர்” என்றும், கனம் என்ற சொல்லை “மாண்புமிகு” எனவும், சபாநாயகர் என்பதை “அவைத்தலைவர்” எனவும் மாற்றினார்.
பெயர் மாற்றியது பெரிய சாதனையா என்று கேட்பவர்களுக்கும், 1968 டிசம்பர் 1ம் தேதி பாலர் அரங்கில் நடந்த தமிழ்நாடு என்று அதிகாரப்பூர்வமாக பெயர் சூட்டும் விழாவில், பதில் சொல்லி உள்ளார் பேரறிஞர் அண்ணா. அன்று அவர் சொன்னது போல இன்றும் திமுக ஆட்சி தான். நன்றி
இந்த CBSE உள்ளிட்ட பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் பயிற்சியை தமிழ்நாடு அரசு தான் கொடுக்கிறது
மொத்தம் 4,951 தமிழ் ஆசிரியர்கள் உள்ளார்கள்.
இங்கே குறிப்பிட வேண்டிய ஒன்று, தமிழ்நாட்டில் இருக்கும் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் ஒரு தமிழ் ஆசிரியர்கள் கூட ஒன்றிய அரசு நியமிக்கவில்லை.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 76.29 லட்சம். அனைவருக்கும் Texr & Note book, School Bag இலவசமாக வழங்குகிறது
CBSE உள்ளிட்ட பள்ளிகளில் பயிலும் 12.63 லட்ச மாணவர்களுக்கும் தமிழ் Text Book தமிழ்நாடு அரசே கொடுக்கிறது.
2. Chief Secretary எழுதிய கடிதம் தெளிவாக PM Shri பள்ளி பற்றி ஆராய உயர்நிலைக் குழு அமைத்துள்ளது அதன் அறிக்கையின் பின்பே 2024-25 MoU Sign செய்ய முடியும். 2023-24 கடைசி 2 தவணைகளை விடுவிக்க சொல்லி உள்ளது
அது MoE அனுப்பிய PM Shri Sub பதிலில் பணம் கேட்டதே தவிர, MoU Sign பண்ண அல்ல
2023-24 3rd & 4th கொடுத்தது. 2024-25 Fund Mr @dmk_raja MP கேள்விக்கு PM Shri School TN Gov ஏற்றுக் கொள்ளவில்லை என்றே பதில் சொல்லி இருக்கிறார்.
அரசு NEP & PM Shri கூடாது என்ற முடிவில் தான் உள்ளது.
@actorvijay தான் BJP-யை தனியாக எதிர்ப்பதை தவிர்த்து DMK-வை சேர்த்துக் கொள்கிறார்
திமுக ஆட்சியில் G.O. Ms No 324 (School Education C2 Department), dated 19.11.1999 படி, முதலில் 1 முதல் 5 வரை உள்ள Nursary and Primary School Education ல் தமிழ் கட்டாயம் என்று கொண்டு வரப்பட்டது
மாநில பாடத்திட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அமலானது.
Tamil in Secondary Education:
2006ல் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்ததும் Tamilnadu Act No 13 of 2006 மூலம் தமிழை 10ஆம் வகுப்பு வரை கட்டாய பயிற்று மொழியாக கொண்டு வந்தது.
நீதிமன்ற வழக்குகள் காரணமாக, இதுவும் மாநில பாடத்திட்ட பள்ளிகளில் மட்டுமே அமலானது.
கடந்த சில வாரங்களாக இஸ்லாமியர் என்பதால் அவர்களை விடுதலை செய்ய மறுக்கிறது திமுக என்று போகிற இடமெல்லாம் பொய் பேசி வருகிறீர்கள்.
திமுக 2006 முதல் 2011 வரை ஆட்சி காலத்தில் மட்டும் சுமார் 130 இஸ்லாமியர்களை விடுதலை செய்துள்ளது.
முதன் முதலில் சிறை தண்டனை பெற்ற கைதிகள் முன்விடுதலை 1994 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது.
அப்போது 20 ஆண்டுகள் நிறைவு செய்தவர்கள் முன்விடுதலை செய்ய பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் (Letter (FS) No.1358 Home, Dated 10.11.94) வெளியிடப்பட்டது.
அதன் அடிப்படையில் தன்னையும் விடுதலை செய்ய வேண்டும் என்று ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற திருமதி நளினி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அதை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது தனி விவாதம்.
2. ஆந்திரா - இங்கும் கலைஞர் காப்பீடு திட்டம் போன்ற மருத்துவ காப்பீடு உண்டு. ஆனால் அதற்கான பிரீமியம் பயனாளர்கள் (மக்கள்) செலுத்த வேண்டும்.
தமிழ்நாடு அரசு ஆண்டு ஒன்றுக்கு சுமார் 500 கோடி மருத்துவ காப்பீடு பிரீமியம் செலுத்தி வருகிறது.
2011 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கு பின், முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்கள், கலைஞர் காப்பீடு திட்டம் என்பதை முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் என்று பெயர் மாற்றி செயல்படுத்தினார்.
இதன் மூலம் பயன்பெறும் மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை 1.5 கோடி.