Vasavi Narayanan (Modi is My Familyman) Profile picture
Poet, Author, Writer, Samskritam Teacher, Temple Architecture and Cultural Science Researcher, and a Proud SANADHANA BHARATHY... MODI KA PARIWAR👍

Sep 17, 2021, 7 tweets

🌺மீண்டும் பிறந்தோமா மக்களே...🌺

இன்று நம் சிங்கத் தலைவன், நரேந்த்ர மோடியின் பிறந்தநாள்.

காலை முதல் காணும் இடமெல்லாம் வாழ்த்துகள் பறக்கின்றன.

கேட்கும் இடமெல்லாம் வாழ்க வாழ்கவெனும் வாழ்த்தொலிகள் விண்ணை நிறைக்கின்றன.

படிக்கும் பக்கமெலாம் பாரதப் புதல்வனின் தலைமையை மெச்சுகின்றன.

தேசியவாதிகள் ஒவ்வொருவர் மனதும் இன்று துள்ளிக் குதிக்கின்றன.

ராணுவ வீரர்கள் உள்ளங்கள் பொங்கிக் கரைமீறி இன்பத்தில் ஓடுகின்றன.

சீறிவரும் சிங்கம் கண்டதும் இளைஞர்கள் “மோடி... மோடி...” என ஆரவாரிக்கின்றனர்.

பிஞ்சுகள் கூட, “தாடி இருந்தால் மோடி தாத்தா...” என்று அடையாளம் காட்டிக் கைதட்டி, பால்பற்கள் காட்டிச் சிரிக்கின்றன.

காலை முதல் மனமெல்லாம் நெகிழ்ந்திருக்கும் தன் பிள்ளைகளைப் பார்த்து பாரத மாதாவும் மனம் குளிர்ந்து நிற்கிறாள்.

சிங்கநடை போடும் இந்த பீஷ்மனுக்கு வரும்

வாழ்த்தொலிகள் எல்லாம் அவரவர்க்கு பிறந்தநாள் வாழ்த்துக் கேட்டது போல மகிழ்ச்சி மக்கள் மனதில்.

இதுவரை சுதந்திரத்துக்குப் பின் பாரதம் கண்டிராத ஒரு விந்தையிது.

நம் பாரதன் ஒருவன் பாரினில் நம் தேசத்தை மட்டுமா உலகத் தலைவர்களையும் ஆள்கிறான். அவனடியில் குடிமக்களாய் இருப்பதே பெருமிதமடா...

நம்மை மட்டுமா...

அந்த இறைவனே ஓய்வுகொள்ள தன் தோளைத் தந்து, தான் மட்டும் அயராது பாடுபடும் இந்த மனிதனை ஒப்பிட வார்த்தை ஏது?

மனம் குளிர வாழ்த்துகிறோம்...
இன்று போல் என்றென்றும் வாழ்கவே! பல்லாயிரம் ஆண்டு பார்புகழ வாழ்கவே!!

பலகோடி நூறாயிரம் ஆண்டு உன்புகழ் வாழ்கவே!!

#HappyBdayModiji
#HappyBirthdayDaddy
#SevaSamarpan
#தேசம்_வாழ_நமோ_வாழ்க.

🍁வாஸவி நாராயணன்🍁

@threader_app compile

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling