Selva Kumar (மோடியின் குடும்பம்) Profile picture
Vice President - TN BJP, Industrial cell துணை தலைவர் - தமிழக பாஜக, தொழிற்பிரிவு | என் கடன் பணி செய்து கிடப்பதே | views are personal

Oct 6, 2021, 9 tweets

2018ம் ஆண்டு மத்திய அரசு 6 விமான நிலையங்களை தனியார்மயமாக்க முயற்சி எடுத்தது. அதல் 10 நிறுவனங்கள் பங்குபெற்றது அதில் GMR மற்றும் அதானி மட்டும்தான் 6 விமான நிலையங்களுக்கும் வாங்க முயற்சித்தது
1/9

மும்பை டெல்லி விமான நிலையத்தை போன்று வருமான பங்கீட்டு (Revenue Share) முறையிலேயே ஏலம் விட முயற்சி எடுக்க பட்டது

அதாவது ஒவ்வொரு பயணியருக்கும் எந்த நிறுவனம் அரசுக்கு அதிக கட்டணம் கொடுக்க முன்வருகிறதோ அந்த நிறுவனம் வெற்றி பெற்றதாக அறிவிக்கபடும்
2/9

26 பிப்ரவரி 2019 அன்று 6 விமான நிலையத்திற்கும் பயணியர் கட்டணம் அதிகமாக கொடுக்க முன் வந்தஅதானி நிறுவனம் வெற்றி பெற்றது

விமான நிலைய வாரியாக எந்த நிறுவனம் என்ன கட்டணம் அரசுக்கு கொடுக்க முன் வந்தார்கள் என கீழே கொடுக்க பட்டுள்ளது 👇
3/9

இந்த தனியார் மயமாக்குதல் மூலம் மத்திய அரசின் ஏர்போர்ட்ஸ் கட்டுபாட்டு நிறுவனம் (AAI) இரண்டு வகையில் வருமானம் பெறும்
🔆முன்பணமாக - ரூ 2299 கோடி
🔆வருடா வருடம் - குறைந்த பட்சம் ரூ 904 கோடி, தற்போது வெறும் ரூ530 கோடிதான் பெறுகிறது
4/9

இந்த முன்பணம் ₹2299 கோடியை மற்ற விமான நிலையங்களை மேம்படுத்த மத்திய அரசு பயன்படுத்த முடியும்

மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து கேரள அரசு, கேரள உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது
ஆனால் முறைகேட்டிற்கு எந்த ஆதாரமும் இல்லாததால் கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
5/9

கேரளா அரசு திருவனந்தபுரம் விமான நிலையம் தனியார் மயமாக்கலை எதிர்த்து தடை விதிக்க உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தது.
அதற்கு உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது
6/9

அதே போல் மங்களூர் விமான நிலையம் தனியார் மயமாக்குதலை எதிர்த்த வழக்கை கர்நாடகா தள்ளுபடி செய்துள்ளது
7/9

இப்போது வரும் செய்திகள் இந்த முன்பணம் ரூ2299 கோடிகளை பற்றி மட்டும் குறிபிட்டு மத்திய அரசு குறைவான விலைக்கு விற்றுள்ளதாக குற்றம் சாட்டுகிறது
வருடா வருடம் வரும் லாபத்தை பற்றி குறிப்பிடவில்லை. மேலும் இது ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் விவாதிக்கபட்டுள்ளது
8/9

கேரள உயர்நீதிமன்றமும் மத்திய அரசு மீது எந்த தவறும் இல்லை, விதிமுறைகள் சரியாக பின்பற்ற பட்டுள்ளது என தெரிவித்து விட்டது.

இதன் பிறகும் தொடர்ந்து மத்திய அரசின் மீது குற்ற சாட்டு வைப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சியே தவிற வேறொன்றுமில்லை
9/9

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling