ஜாதகம் என்றால் என்ன? நம்பலாமா? கூடாதா? #Thread
ஜாதகம் என்பது ஒரு குழந்தை பிறந்த நேரத்தை வைத்து, காலையில் சூரியன் எந்த நேரத்தில் உதித்தது ( உதிக்கும் நேரத்தை ஓரை என்பனர்) என்பதை அட்ச ரேகையின் அடிப்படையில் கணிக்கப்படுகிறது,
(1/n)
இந்த கணிப்பு தமிழ்நாட்டில் ஒரு நேரமும், கேரளாவில் ஒரு நேரமும் ஆந்திராவில் ஒரு நேரமும் இப்படியாக இடத்திற்கு இடம் மாறுபடும். இப்படி இந்த நேரத்தை வைத்து கணிப்பது தான் ஜாதகம். மொத்தம் 27 நட்சத்திரம்.
(2/n)
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் நான்கு பாதம் அவை அஸ்வினி, பரணி, கார்த்திகை மற்றும் ரோகினி எனப்படும். 27×4=108 நட்சத்திர பாதங்கள் . ஒவ்வொரு வீட்டிற்க்கும் 9 பாதங்கள் என , 108 நட்சத்திரக் கால்கள் -
(3/n)
12 வீட்டில் அமர்ந்திருக்கும் இந்த 12 வீடு என்பது மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிகளை குறிக்கும் .
இதில் ஒரு வினாடி மாறினால் கூட அனைத்து திசைகளும் மாறுபடும்.நிற்க,
(4/n)
குழந்தை பிறப்பதென்பது ஒரு வினாடியில் நடக்கும் நிகழ்வு அல்ல, மேலும் பிறந்த நேரம் என்பது எதை வைத்து சொல்லபடுகிறது, குழந்தையின் தலை வெளியே வந்த நேரமா? உடல் வெளியே வந்த நேரமா? கால் வெளியே வந்த நேரமா? குழந்தை அழுத நேரமா? அல்லது தொப்புள்கொடி அறுத்த நேரமா? எந்த நேரம் பிறந்த நேரம்?
(5/n)
இவை ஒன்றும் தெரியாத பட்சத்தில் அந்த குழந்தை இந்த நேரத்தில் பிறந்தது என்று அந்த மருத்துவமனையில் சொல்லப்படும் நேரம் தான் பிறந்த நேரம் ஆகிறது. அந்த பிறந்த நேரத்தை வைத்து கணிக்கும் ஜாதகம் எப்படி உண்மையாக இருக்க கூடும்.
(6/n)
அப்படியே பிறந்த நேரம் இது தான் என்று சரியாக சொல்லப்பட்டாலும் கூட, 27 நட்சத்திரங்களும் 4 பாதங்களும் என்ன என்ற புரிதல் வேண்டும். பிரஜாபதி தட்சன் மற்றும் பிரசுதி தேவி என்பவர்களுக்கு பிறந்த 27 மகள்கள் தான் இந்த 27 நட்சத்திரங்கள்,
(7/n)
அதுமட்டுமல்ல இவர்கள் அனைவரும் சந்திரனின் மனைவிகள் ஆவார் என்று புராணம் கூறுகிறது. அப்படியானால் சந்திரனின் 27 மனைவிகளின் அடிப்படையிலா ஒருவரின் ஜாதகம் கணிக்கபட வேண்டும். அதுமட்டுமல்ல அந்த 27 பெண்களின் ஜாதகம் யாரை அடிப்படையாக வைத்து கணிக்கப்பட்டது?
(8/n)
எந்த ஒரு அடிப்படையும் இல்லாத,அல்லது அறிவியலும் இல்லாத இந்த ஜாதகம் ஒருவரின் வாழ்க்கை பலனை எப்படி தீர்மானிக்கும்?
சகமனிதனை ஏய்ப்பதற்காக சிலரால் உருவாக்கப்பட்டது தான் ஜாதகம். உண்மையை உணர்ந்து அறிவார்நது சிந்தித்தால் மட்டுமே நம் சமூகம் அறிவு சமூகமாக மாறும்.
End of the thread
(9/n)
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.