Dr. Nagajothi 👩🏽‍⚕️ Profile picture
| Doctor of Pharmacy (Pharm.D) | | I am a #PharmDian | | Rationalist | | Student of Periyar, Dr. B.R. Ambedkar and Marx | |Belongs to Dravidian Stock| 🌈

Oct 30, 2021, 18 tweets

#Thread

சங்க இலக்கியத்தில் சொல்லப்பட்டுள்ள "நடுகல்"லினை கொண்டு ஏற்படுத்தப்பட்ட புரட்டுகள்..

தொல்காப்பியர் காட்டும் நடுகல் என்பது "சீர்த்தகு மரபு"
காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல்
சீர்த்தகு மரபில பெரும்படை வாழ்த்தல் (தொல். புறத்திணை)

(1/n)

இந்த நடுகல், பார்ப்பதற்கு… இன்றைய லிங்கம்  போல் இருந்தமையால், சில ஆய்வாளர்கள், லிங்கம் என்று பிழையாக எண்ணி விட்டார்கள் ஆனால், அன்றைய தமிழில் "ல" என்று வார்த்தை துவங்காது
எடுத்துக்காட்டாக,
லக்ஷ்மி= இலக்குமி; லிங்கம்= இலிங்கம்.

(2/n)

லிங்கம் என்பது வடமொழி அதை தமிழில் எழுதும் போது  இலிங்கம்.
அப்புறம் எப்படி நடுகல் லிங்கம் ஆகும்?
தொன்மவியல் ஆய்விலும், ஆய்வாளரின் சைவப் பற்றும் மதம் எனும் பேயும் வந்து ஊடாடினால் இது தான் கதி.

(3/n)

இன்று கூட சென்னைக்கு அருகே திருப்போரூர் எனும் இடத்தில் இது போன்ற பழமையான முருகன் கோட்டங்களில், இன்றைக்கும் நடுகல்லைப் பார்க்கலாம், உருவமோ முகமோ இருக்காது ஆனால் முகம் போல் எழுதி, அலங்காரத்தில் மறைத்திருப்பார்கள்.

(4/n)

இப்படியான தொடர் திருபுகளால், இயற்கை வழிபாடை கொண்ட  தமிழ் சமூகம் இறை வழிபாடு கொண்டது என நம்ப வைக்கப் பட்டுள்ளது.

(5/n)

மேலும் சைவம்/ வைணவம் என்ற பெயரே சங்கத் தமிழில் கிடையாது மத அமைப்பு இல்லவேயில்லை, இன்னும் சொல்லப் போனால் சங்கத் தமிழில், இறை என்பது இயற்கை வழிபாடே! மேலும் இயற்கைக்கு மாறான இறைக் கொள்கை, முதல் மற்றும்  இடைச்சங்கத் தமிழில் இல்லவே இல்லை.

(6/n)

திருபுகள் வலுப்பெற்றது எப்படி?

அவர்களின் கூற்றுக்கள் தமிழ் சமூகத்தில் மேலோங்க மற்றொரு காரணம், அரசர்களின் அதிகாரம் மூலமா தமிழ் மண்ணில் நுழைந்து கொண்டது தான் .மதம் என்கிற சக்தி வாய்ந்த போர்வை போர்த்தி வந்திருந்ததால், அதை எதிர்த்து பேச அன்று யாரும் எண்ணவில்லை.

(7/n)

எடுத்துக் காட்டாக , "உன் பித்ரு-முன்னோர்கள், மேல் லோகத்தில்.. வைரவதி என்னும் நெருப்பு ஆற்றிலே, பசி பசி என்று அலறுவார்கள்; ஆகவே தர்ப்பணம் கொடு"

என்று உணர்ச்சிவயப்படுவது போல் சொன்னால்,அது உண்மை என்று அவர்கள் சொல்வதை செய்வீர்கள் தானே?

(8/n)

பண்டைத் தமிழ் மன்னர்களின் மற உணர்ச்சி அதாவது பாவம்,  பாவத்தை ஈடு கட்ட புண்ணியம் , ஸ்வர்க்கம், நரகம், ஹோமம், யாகம் போன்ற இந்த வித்து (மாயை) தூவப்பட்டு விட்டது.  இவை அனைத்தும் நடந்தது கடைச்சங்க காலத்தில் தான், ஆம்,மதமில்லாத் தமிழ்ச் சமூகத்துக்கு, மதம் ஜாதி இவை பிடித்தது.
(9/n)

அதன் தொடர்ச்சியாக ஆரியர்கள் தங்கள் வேதக் கடவுள்களான.. சோமன், அக்னி, இந்திரன், அஸ்வின், மித்ரன்..இவர்களையெல்லாம் சற்றே தள்ளிவைத்து, தமிழ் மரபு சார்ந்த வாழ்வியலை அடிப்படையாக கொண்டு புதிய புராணக் கடவுள்களையும், அது சார்ந்த கதைகளையும்  உருவாக்கம் செய்தனர்.

(10/n)

இந்த திரிபு தொல்காப்பியத்தில் மட்டுமல்ல மற்று பல சங்க இலக்கியங்களிலும் அவர்கள் செய்திருகின்றனர்.

பரிபாடலில் மாயோன் என்பதை திருமாலுக்குப் பெயராக புழங்கியிருக்கின்றார்கள் என்று கூறுகின்றனர். மேலும் பரிபாடலில் மதுரையைப் பற்றிச் சொல்லும் போது,

(11/n)

"மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
பூவொடு புரையும் சீரூர், பூவின்
இதழகத்(து) அனைய தெருவம்; இதழகத்(து)
அரும்பொகுட்(டு) அனைத்தே அண்ணல் கோயில்
தாதின் அனையர் தண்டமிழ்க் குடிகள்
தாதுண், பறவை அனையர் பரிசில் வாழ்நர்
பூவினுட் பிறந்தோன் நாவினுட் பிறந்த

(12/n)

நான்மறைக் கேள்வி நவில்குரல் எடுப்ப
ஏம வின்றுயில் எழுதல் அல்லதை
வாழிய வஞ்சியும் கோழியும் போலக்
கோழியின் எழாதெம் பேரூர் துயிலே."
(- ஏழாம் பாடல், பரிபாடல் )

(13/n)

இதன் பொருள் மதுரைநகரம் திருமாலின் உந்தியின்மலர்ந்த தாமரை மலரை ஒக்கும்; அந் நகரத்துள்ள தெருக்கள் அம் மலரின் இதழ்களை ஒக்கும்; பாண்டியன் அரண்மனை அம்மலரகத்துள்ள பொகுட்டை ஒக்கும்; அந் நகரில்வாழும் தமிழராகிய குடிமக்கள் அம் மலரின் தாதுக்களை ஒப்பர்;

(14/n)

அந் நகர்க்கு வரும் இரவலர் தாதுண்ண வரும் வண்டுகளை
ஒப்பர். மதுரையிலுள்ள மாந்தர் வேதமுழக்கத்தாலே நாள்தோறும்
துயிலெழுவரேயன்றி வஞ்சி நகரத்தாரும் உறையூராரும் போலக் கோழி
கூவுதலாலே துயிலெழுதலில்லை..

என்று கூறுகின்றனர்.

(15/n)

இந்த பரிபாடலின் பொருளில் நம்மால் கவனிக்க முடிகிறது மாயோனாகிய திருமாலின் உந்தியிலமைந்த தாமரை மலரையொத்து அமைந்திருந்ததாம் மதுரை என குறிப்பிடுகின்றனர். வயிற்றுடன் உள்ள தாமரையை புத்தருடனும் இணைத்தும் எழுதலாம், அப்படியானால்  தாமரை என வந்தால் திருமால் என எண்ணுவது எப்படிச் சரி?

(16/n)

இது தான் மாயோன் என்பவன் கண்ணன்/ திருமால்  என்பவனே என்று திரித்து கூறப்படும்  இன்னொரு திரிபு.

சங்க இலக்கியங்களில் சொல்லப்பட்டுள்ள தமிழர் வாழ்வியலை திரித்து தங்களுக்கு ஏற்றார் போல் கடவுள் புராணங்களை இயற்றி, தமிழர்க்கு மதம் பிடிக்க வைத்தது தவிர இவர்கள் செய்த நன்மை என்ன?

End♥️

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling