#Thread
*வனப்பாதுகாப்பு சட்ட திருத்தம்*
சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான ஒன்றிய அரசின் அமைச்சகம், 1980- ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்தியாவின் வனப்பாதுகாப்பு சட்டத்தை திருத்த முன்மொழிவுகள் உள்ள ஆவணத்தை அக்டோபர் 2 ஆம் தேதி வெளியிட்டுள்ளது.
(1/n)
காடு எனும் வரையறைக்குள் வரும் பகுதிகளில், காடு சாராத திட்டமான நெடுஞ்சாலை, சுரங்கங்கள் அமைப்பது, அணைகள் கட்டுவது போன்ற நடவடிக்கைகளில், தேவைக்கு அதிகமாகவோ, தேவையில்லாமலோ காடுகள் அழிக்கப்படுவதை தடுக்க உருவாக்கப்பட்டது தான் வனப்பாதுக்காப்பு சட்டம்.
(2/n)
இந்த சட்டத்தில் சில திருத்தங்கள் செய்ய ஒன்றிய அரசு முயற்சிக்கிறது, அதில் 14 திருத்தங்களை/ சட்ட விலக்குகள் குறித்த முழுமையல்லாத ஒரு ஆவணத்தை தற்போது வெளியிட்டு, அதன்மீது கருத்துக்களை கோரியுள்ளது.
(3/n)
காடுகளை பாதிக்கும் பல அம்சங்கள் நிறைந்த இந்த ஆவணத்தை, அனைத்து தரப்பு மக்களும் படித்து கருத்து சொல்லும் வகையில் இல்லாமல் அமைத்திருப்பது முதல் தவறு.
வனப்பாதுகாப்பு சட்டம் 1980 - இல் திருத்தம் கொண்டு வருவது, காடுகளில் அல்லது காடுகளை ஒட்டி வாழக்கூடிய
(4/n)
பழங்குடியினரையும், இதர பிரிவு மக்களையும் பாதிக்கும் ஒன்றாகும்.
அப்படிப் பட்ட முக்கியமான சட்டத் திருத்த ஆவணத்தை அரசியலமைப்பு சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளிலும் கொண்டு வராமல், ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிட்டது ஒன்றிய அரசு.
(5/n)
கடும் எதிர்பிற்கு பின் 12 மொழிகளில் வெளியிட்டது, அதிலும் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டது.
வரைவு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை 2020 ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே வெளியிட்டபோது, பல மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு,
(6/n)
பின் DRAFTEIA2020, 22 மொழிகளிலும் வெளியிடப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது, அது போல வனப்பாதுகாப்பு சட்ட திருத்த ஆவணத்திற்கும் தொடர வேண்டும்.
இதில் இருக்கும் இன்னொரு சிக்கல், கருத்து தெரிவிக்க வெறும் 15 நாட்கள் மட்டுமே அவகாசம் தொடக்கத்தில் வழங்கப்பட்டது.
(7/n)
அதற்கும் எதிர்ப்பு கிளம்ப மேலும் 15 நாட்கள் கொடுக்கப்பட்டது. அதிலும் இந்த அறிவிப்பு அக்டோபர் 2 ஆம் சனிக்கிழமை ( பொதுவிடுமுறை) அன்று வெளியிடப்பட்டது. இது முற்றிலும் தவறான நடவடிக்கை.
(8/n)
இந்தியா முழுவதுமுள்ள காடு மற்றும் காடு சார்ந்து வாழும் மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த சட்ட திருத்த ஆவணத்தின் மீது கருத்து சொல்ல குறைந்த பட்சம் 2 மாதங்களாவது அவகாசம் வேண்டும். எனவே இந்த ஆவணத்தை தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளிலும் மொழி பெயர்த்து,
(9/n)
கருத்து தெரிவிக்க போதுமான கால அவகாசம் வழங்க வேண்டும்.
இந்த ஆவணத்தில் உள்ள திருத்தங்கள் எவை என பார்க்கலாம்.
1. தேச முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் நாட்டின் பாதுகாப்பு மற்றும் ராணுவம் சார்ந்த திட்டங்களுக்கு ( Strategic and Security projects of National Importance)
(10/n)
வனப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அனுமதி பெறுவதிலிருந்து விலகளிப்பது.
இதில் என்ன சிக்கல் எனில், இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக சொல்லப்படும் அண்டை நாடுகளின் எல்லைகளை பகிர்ந்து கொள்ளும் மாநிலங்களில் உள்ள காடுகளில் மட்டும்,
(11/n)
எதிரிகளின் ஊடுருவலை தடுக்கவும் கண்காணிக்கவும் தேவையான கட்டமைப்பு வசதிகளை உண்டாக்கினால் அத்தகைய திட்டங்களுக்கு இப்படியான விலக்களிப்பது குறித்து விவாதிக்கலாம். ஆனால், ஒன்றிய அரசு வணிக லாபத்திற்காக சாகர்மாலா திட்டத்தின் கீழ் பல்வேறு துறைமுகங்கள் அமைப்பது,
(12/n)
பரியோஜனா திட்டத்தின் கீழ் நெடுஞ்சாலை அமைப்பது உள்ளிட்ட திட்டங்களை கூட Strategic and Security projects of National Importance எனும் வரையறைக்குள் கொண்டு வருகிறது.
தேனி மாவட்டத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள நியூட்ரினோ ஆய்வகத்தை தேச முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக,
(13/n)
அறிவித்தது தான், மாநில அரசால் சுற்றுச்சூழல் அனுமதி மறுக்கப்பட்ட பின்னரும் கூட ஒன்றிய அரசால் அதற்கான சுற்றுசூழல் அனுமதி வழங்கப்பட்டது. இப்படியான திட்டங்களை தேச முக்கியத்துவம் என்கிற பெயரில் செயல்படுத்துவது காடுகள் பெருமளவில் அழிக்க காரணமாகும்.
(14/n)
2. இந்தியாவில் அரசுக் கட்டுப்பாட்டில் இருக்கும் காடுகள் தவிர, தனியாருக்குச் சொந்தமான காடுகளும் உள்ளன, தமிழ் நாட்டில் இது போன்ற காடுகள் Tamilnadu Preservation of Private Forest Act 1949 என்பதன் கீழ் மேலாண்மை செய்யப்படுகிறது.
(15/n)
இந்தப் பகுதிகளில் காடுகள் பாதுகாப்பு சாராத திட்டங்களை செயல்படுத்த முடியாது, இந்த வனப்பகுதியில் பயிர் செய்வதற்கும் வேறு பல கட்டுமானங்கள் மேற்கொள்ளவும் வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் விளக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாக இந்த ஆவணம் கூறுகிறது.
(16/n)
தமிழ்நாட்டில் உள்ள காப்புக் காடுகள் மற்றும் புலிகள் யானைகள் போன்ற சரணாலயங்களில், பல ஹெக்டேர் பரப்பளவில் தனியாருக்குச் சொந்தமான காடுகள் உள்ளன இவற்றை வனப் பாதுகாப்பு சட்டத்தில் இருந்து விலக்கினால் வணிக நோக்கில் இந்த இடங்களில் பணப்பயிர்கள் விதைக்கப்பட்டு மரங்கள் வெட்டப்படும்.
(17/n)
இப்படி மரங்கள் வெட்டப்பட்டால் அங்கு பெரிய அளவில் மண் அரிப்பு ஏற்படும், மழைக்காலங்களில் இந்த மண் அரிப்பினால் காப்புக் காடுகளில் சூழல் தன்மை பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.
வன பாதுகாப்பு சட்டம் 1980 அமலுக்கு வருவதற்கு முன்பாக நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே போன்ற அரசு துறைகளால்,
(18/n)
கையகப்படுத்தப்பட்ட வனப்பகுதிகளில் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு இச்சட்டத்தின் விதிகளில் இருந்து விலக்களிக்கவும் ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.
இதனால் புதிய சாலைகளும் ரயில்வே பாதைகளும் காப்புக் காடுகளில் அமைக்கப்பட்டால் பெரிய அளவிலான காடுகள் சிறு சிறு துண்டுகளாகும்,
(19/n)
விலங்குகளின் வாழ்விடங்கள் இதனால் சுருக்கப்படும் மேலும் மனித விலங்கு மோதல் சம்பவங்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
இந்தியாவில் சில வனப்பகுதி நிலங்கள் வருவாய்த்துறை மற்றும் வனத்துறை ஆகிய இரண்டு துறைகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
(20/n)
எனவே 12.12.1996- க்கு பின் இப்படியான நிலங்களை வருவாய்த்துறை ஆவணங்களின் அடிப்படையிலேயே கணக்கிலெடுத்துக் கொண்டு, அங்கு வேளாண் காடுகள் வளர்ப்புக்கு ஊக்குவிக்கப்பட வேண்டும் என ஒன்றிய அரசு கூறுகிறது இதன் மூலமும் எந்த வரையறையும் இல்லாமல்,
(21/n)
வணிக நோக்கில் அந்த நிலங்களில் மரங்கள் வளர்க்கப்பட்டு வெட்டப்படும் இதுவும் தனியாருக்கு பயனளிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட திருத்தமாக தெரிகிறது.
3. அடுத்ததாக Extended Reach Drilling எனும் தொழில்நுட்பத்திற்கான அனுமதி குறித்து இந்த ஆவணத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.
(22/n)
காடுகளுக்கு அடியில் பல ஆயிரம் அடி ஆழத்தில் இருக்கும், இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் வளங்களை காடு என்பதற்கான சட்ட வரையறைக்குள் வராத ஒரு இடத்திலிருந்து துளையிட்டு சென்று அவளை எடுப்பது தான் இந்த தொழில்நுட்பத்தின் அடிப்படை.
(23/n)
இந்த தொழில்நுட்பத்தால் காட்டின் இயற்கையான இயங்கியல் தன்மை முற்றிலுமாக பாதிக்கப்படும்.
காடு என்பது சில மரங்களும் அது ஒன்று இருக்கும் மண் பரப்பும் அதற்கு அடியில் இருக்கும் வேறு மட்டும் கிடையாது பல ஆண்டுகாலமாக நிலத்திற்கு அடியில் பல அடி ஆழத்தில் சேர்ந்த வளங்களை
(24/n)
வெளியிலிருந்து உறிஞ்சி எடுத்து விட்டால் மேற்பரப்பு காட்டில் எதுவும் மிஞ்சாது.
தனியார் காடுகளாக வரையறுக்கப்பட்டுள்ள பகுதிகளில் 250 சதுர மீட்டர் அளவில் கட்டிடங்களை எழுப்பி கொள்ள நில உரிமையாளருக்கு ஒரே ஒருமுறை மட்டும் அனுமதி வழங்குவது குறித்து ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.
(25/n)
இதன் நோக்கம் வணிக நோக்கில் தோட்டப் பயிர் உற்பத்தியை ஊக்குவிப்பது தாண்டி வேறெதுவும் இல்லை இது கூடுதலாக காட்டின் நிலைத்தன்மை சீர்குலைய காரணமாகும்.
4. வன உயிரியல் பூங்காக்கள் விழாக்கள் போன்றவற்றை காடு பாதுகாப்பு சார்ந்த திட்டங்களாக கருத ஒன்றிய அரசு முடிவு செய்து இருக்கிறது.
(26/n)
இதுவும் தனியார் நிறுவனங்களின் வணிக வெற்றிக்காக காடுகளை இரையாக்கும் நடவடிக்கைதான்.
5. வணிகத்தை ஊக்குவிக்க சாலை மற்றும் ரயில் பாதை பகுதியில் உள்ள 0.05 ஹெக்டேர் வரையிலான நீர் வளங்களை அழிக்க அனுமதி.
(27/n)
6. காடுகளில் ஆராய்ச்சி மற்றும் கணக்கெடுப்பு செய்ய முன் அனுமதி தேவையில்லை.
7. வனங்களில் மேற்கொள்ளப்படும் காடு சாரா நடவடிக்கைகளுக்கு இழப்பீட்டு வரிக் குறைப்பு
8. காடுகளில் குவாரி அமைக்க எண்ணெய் இயற்கை எரிவாயு எடுக்க வழிமுறைகளை எளிதாக்குதல்.
(28/n)
காலநிலை மாற்றத்தின் தாக்கத்தில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்காமல், காட்டை அழிப்பதற்கு வித்திடும் வகையில் சட்ட திருத்தங்களை கொண்டுவர ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.
(29/n)
இந்த ஆவணத்தின் மீது உங்கள் குரலை பதிவு செய்ய கீழ்க்கண்ட இணைப்பில் சென்று மின்னஞ்சல் வாயிலாக கருத்துக்களை பதிவு செய்யலாம். உங்கள் குரலை பதிவு செய்ய கடைசி நாள் நவம்பர் 1, 2021.
act.jhatkaa.org/campaigns/fore…
End ♥️
@Csk31890091 @The_69_Percent @esemarr3 @lineardood @thil_sek @theekameeka @TamilSpaces @yuva_uthvar @vpselva @TamilSpaceViz @MaduraiStark @YEM_AAR @RamyaMervin @ShaliniJKA @thisisRaj_ @simpleton_set @Vpayyal @yuva_uthvar @RamyaMervin @RamyaDpalani @karuneelamalar
@muthugm2 @kr56_Vel @bharath_kiddo @karuneelamalar @Nali2K20 @sudharsan_619 @mark_ram_bilal @boopa_thee @just_ajit @soulthamizh @SmkrishnaveniS1 @Tiger_chinmayi @Nethili1 @PRADEEP260790 @blackiscooll @goldfish_officl @iamtitanoboa @dark98rises @NakkeeranJ2 @ireaum @aliyarbilal
@Kaush_Sings @Bacteria_Offl @kuthiraioffcial @LionOfficel @Avatarkutti @boopa_thee @ArthiPichaiya @1RecordingSpace @NotCarryingRam1 @mayilravi @skthandesh @manipaiyanmp @koothanpkm @NaanYaar08 @VJViyan @retwitt_kumar @iamamupraj @Himeros2712 @SwathiKarthika @Siddoffcial @p765512
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.