🚩Visakan Pandu🚩 Profile picture
வந்தால் உன்னோட வராவிட்டால் தனியாக வழிமறித்தால் உன்னையும் மீறி.. இந்து தர்மமே இதய துடிப்பு #சைவசமயம் #சிவயநம #சனாதனன் #அனாதியன் #சிவவிந்து

Nov 9, 2021, 13 tweets

#முருகனின்_திருவுருவங்கள்:
1.சக்திதரர்
2. கந்த சுவாமி
3. தேவசேனாதிபதி
4. சுப்பிரமணியர்
5. கஜவாகனர்
6. சரவணபவர்
7. கார்த்திகேயர்
8. குமாரசுவாமி
9. சண்முகர்
10.தாரகாரி
11. சேனாபதி
12. பிரமசாத்தர்
13. வள்ளி கல்யாண சுந்தரர்
14. பாலசுவாமி
15. கிரவுஞ்ச பேதனர்
16. சிகிவாகனர் எனப்படும்.

முருகன் அழித்த ஆறு பகைவர்கள்ஆணவம்,
கன்மம், குரோதம், லோபம், மதம், மாற்சர்யம்.
மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள திருவிடைக்கழி. இங்கு முருகக்குப்பின்புறம் லிங்கம் உள்ளது.(குராமரத்தடியில் முருகன் பூஜித்தது) அது போல் திருவேற்காட்டில் வேலமரத்தடியில் முருகனுக்கு முன்புறமாக லிங்கம் உள்ளது.

முருகப்பெருமான் போர் புரிந்து அசுரர்களை
அழித்த இடம் மூன்றாகும்.

சூரபத்மனை வதம் செய்தது-திருச்செந்தூர்,

தாரகாசுரனை வதம் செய்தது-
திருப்பரங்குன்றம்,

இந்த இருவரின் சகோதரனான சிங்க
முகாசுரனை வதம் செய்தது போரூர் ஆகும்.

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில்
மூலவரின் நெஞ்சில் சிறிய பள்ளம்
இருக்கின்றது. சூரனை வதம் செய்யும் போது
அவனோடு மோதியதால் ஏற்பட்டது.
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள்
அதிகாலையில் குளித்து முடித்துத்
தூய்மையுடன் ஸ்ரீஸ்ரீசுப்பிரமண்ய அஷ்டகம்
ஓத வேண்டும். இதனால் தோஷம் விலகி
நன்மை உண்டாகும்

முருகப்பெருமானின் வலப்புறம் உள்ள ஆறு
கரங்களில் அபயகரம், கோழிக்கொடி, வச்சிரம்,
அங்குசம், அம்பு, வேல் என்ற ஆறு
ஆயுதங்களும், இடப்புறம் உள்ள ஆறு
கரங்களில் வரமளிக்கும் கை, தாமரை, மணி,
மழு, தண்டாயுதம், வில் போன்றவையும்
இருக்கும்.

ஈரோடு அருகே வெண்ணைமலை உள்ளது.
அங்கு முருகன் யார் துணையும் இல்லாமல்
தன்னந்தனியாகத் தண்டாயுதபாணியாகக்
காட்சியளிக்கிறார். வெண்ணெய் மலையை
வலம் வருபவர்கள் கயிலையை வலம் வந்த
பலனைப் பெறுவார்கள்.

முருகன் இறைபணிச் செல்வர்கள்:
அகத்தியர்,
அருணகிரி நாதர்,
ஒளவையார்,
பாம்பன் சுவாமிகள்,
அப்பர் அடிகளார்,
நக்கீரர்,
முசுகுந்தர்,
சிகண்டி முனிவர்,
குணசீலர்,
முருகம்மையார்,
திருமுருககிருபானந்த வாரியார்,
வள்ளிமலைச் சுவாமிகள்,
ஆகியோர் ஆவார்கள்.

பிரமசரிய-கிருகஸ்த-சந்நியாசக்
கோலங்களில் முருகனை மட்டுமே காண
முடியும். பிற கடவுள்களுக்கு இல்லாத
சிறப்பு இது.

தமிழகத்தில் முருகனுக்குக்குடவரைக்
கோயில்கள் உள்ள இடங்கள் கழுகுமலை,
திருக்கழுக்குன்றம், குன்றக்குடி,
குடுமியான்மலை, சித்தன்னவாசல், வள்ளிக்
கோயில், மாமல்லபுரம்.

முருகப் பெருமானுக்கு உகந்த மலர்கள்
முல்லை, சாமந்தி, ரோஜா, காந்தன்
முதலியவை ஆகும்.
முருகனை ஒரு முறையே வலம் வருதல்
வேண்டும்.
முருகனைப் போன்று கருப்பை வாசம்
செய்யாத வேறு தெய்வம் வீரபத்திரர்.
தமிழ்நாட்டில் முதல் தங்கத்தேர் பழனி
முருகன் கோவிலில் 1957-ல் இழுக்கப்பட்டது.

முருகனுக்கு உருவமில்லாத கோவில்
விருத்தா சலத்தில் உள்ளது. பெயர்
கொளஞ்சியப்பர். அருவுருவ தலம் என்று கூறுவார்கள்.
கந்த சஷ்டி கவசத்தை எழுதியவர்
தேவராயன் ஆவார்.
முருக வழிபாடு என்பது ஷண்மம் என்று
சொல்லப்படுகின்றது.
கோபுரத்து இளையனார் என்கிற முருகன்
சந்நிதி திருவண்ணாமலையில் உள்ளது

முருகன் வீற்றிருக்கும் மிக நீண்ட மலை
திருத்தணி பள்ளிப்பட்டு நெடியமலை ஆகும்.

முருகன் சிறிது காலம் நான்முகனுக்குப்
பதில் படைப்புத் தொழிலையும்
செய்திருக்கிறார். இதனை உணர்த்தும்
வகையில் திண்டுக்கல் சின்னாளப்பட்டியில்
நான்கு தலையுள்ள முருகன் ஆலயம்
அமைந்துள்ளது.

கந்தனுக்குரிய விரதங்கள்:
1. வார விரதம்,
2. நட்சத்திர விரதம்,
3. திதி விரதம்.

முருகனின் மூலமந்திரம் ஓம் சரவணபவாய
நம என்பதாகும்.

வேலும் மயிலும் இல்லாத வேலவன்
ஆண்டார் குப்பத்தில் உள்ளார்.

முருகப் பெருமான் தோன்றிய இடம்
சரவணப் பொய்கை.

#சரவணபவ #சிவயநம

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling