★அருண்மொழிசோழன்★
முதலாம் இராசராசன்
(கி.பி 985-1014)
தாய்: வானவன் மாதேவி
தந்தை: சுந்தர சோழனாகிய இரண்டாம் பராந்தகன்
சேர நாட்டு திருநந்திக்கரை என்னும் ஊரில் உள்ள சிவன் கோவிலுக்கு தான் பிறந்த நாளாகிய ஐப்பசி மாதச் சதயநாளில் திருவிழா..
#தமிழர்களின்_பெருமைக்குரியவர்_இராசராசசோழன்
நடந்ததற்காக கொடையாக முட்டம் என்னும் ஊரை அளித்ததற்கான கல்வெட்டு சான்று அக்கோவிலில் உண்டு அதனைக் கொண்டு அவரின் பிறந்த நாள் ஐப்பசித்திங்கள் சதயநாள் என்பது தெளிவாகிறது...!
திருவாலங்காட்டு செப்பேடுகளும் இதனை பறைசாற்றுகிறது..
#இழை
#தமிழர்களின்_பெருமைக்குரியவர்_இராசராசசோழன்
இராசராசன் கிபி 985 சூன் திங்கள் 25ம் நாள் முடிசூட்டிக் கொண்டார் என்பது கல்வெட்டு ஆய்வாளர்களின் ஆய்வு முடிவு..!
இவனது ஆட்சியில் ஓவியம், சிற்பம், நாடகம், நடனம், இசை, இலக்கியம் இன்ன பிறவும் நன்கு செழித்தோங்கின...!
இவரது காலத்தில் தான் தேவார திருமுறைகள் நாடெங்கும் பரவின..!
#இழை
சைவ சமய வெள்ளம் நாடெங்கும் பரந்து மக்கள் உள்ளத்தை உருகச் செய்தது...!
பிற அரச மரபுகளை போலல்லாமல் தான் ஆட்சியில் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் கல்வெட்டுகளில் பதிந்து புத்தொளி வீசியவன்.. அதுதான் சோழர்களின் வரலாறுகளையும் மீட்டெடுக்க பேருதவி புரிந்தன...!
#இழை
இராசராசன் பட்டம் பெற்ற காலத்தில் சோழ அரசு வடக்கில் தொண்டைநாடு வரையும் தெற்கில் பாண்டியநாட்டு வட எல்லை வரையுமே பரவி இருந்தது..
இவன் சேரநாட்டின் மீது படையெடுத்த ஆண்டு கிபி 989. இந்த படைக்கு தலைமை பூண்டவன் 'பஞ்சவன் மாராயன்' என்னும் பெயர்கொண்ட தனது மகனான இராசேந்திர சோழனே..
#இழை
இப்படையெடுப்பு காந்தளூர் போர் என்று அழைக்கப்படுகிறது.. இப்போரில் சேர மன்னனான பாஸ்கர ரவிவர்மனையும் பாண்டியன் அமரபுசங்கனையும் வென்று இரு நாடுகளையும் கைப்பற்றி ஆட்சிசெய்தான்..!
'தென்னபராக்கிரமன்' என்ற பட்டமும் பாண்டிய நாட்டில் பற்பல கோயில்களில் இவரது பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மற்றும் பாண்டிய மண்டலமானது இராசராச மண்டலம் என்று அழைக்கப்பட்டதும் இதற்கான சான்றுகளாகும்...!!
குடகுமலைநாட்டின் உதகை மீது 18 காடுகளை கடந்து போர்த்தொடுத்து மீனிசா என்னும் அரசனை வென்று புலிக்கொடியை நிலைநாட்டினான்..! கிபி 1008க்கு சிறிது முன்.
#இழை
இராசராசன் மற்றும் அவரது மகன் இராசேந்திரனும் கொல்லத்தின் மீது சென்று கொல்லம்,கொடுங்கோளுர் முதலிய பகுதிகளில் உள்ள சிற்றரசுகளை வென்று மேலைக்கடற்கரை நாட்டையும் கைப்பற்றி புலிக்கொடி பறக்கசெய்தான்...! இதன்பின் 'கீர்த்தி பராக்கிரம சோழன்' என்ற விருதுப் பெயரையும் பெற்றான்..
#இழை 2/1
கங்கபாடி தற்போதைய மைசூரின் பெரும்பகுதி.. பல்லவர்களை எதிர்த்து போர்த்தொடுத்து தடிகைபாடி மற்றும் கங்கபாடியையும் கைப்பற்றினான்..!
நுளம்பாடி என்பது மைசூரை சேர்ந்த தும்கூர்,சித்தல்,துர்க்ககோட்டம், பெங்களூர், கோலார்,பெல்லாரிக் கோட்டங்களும் சேர்ந்த நிலப்பரப்பாகும்..!
#இழை 2/2
அதனையும் வென்று அதற்கு நுளும்பப் பல்லவரை சிற்றரசராகவும் அரசியல் அலுவலராகவும் இருக்கச் செய்தார்...!
கன்னரசன் என்பவனை தடிகைபாடியின் சிற்றரசராகவும் இருக்கசெய்தார்..!
#இழை 2/3
தொண்டை நாட்டிற்கு வடக்கே கீழைச் சாளுக்கியர் ஆட்சி நெல்லூர் வரை பரவி இருந்தது. கிருஷ்ணா ஆறு முதல் வடபெண்ணையாறுவரை இருந்த நாடு சிட்புலிநாடு,பாகிநாடு என்று பெயர் பெற்றிருந்தது..!
அங்கு காருகுடியை சேர்ந்த பழபாடியார் என்னும் மும்முடிச்சோழன் என்ற சேனைத்தலைவனை அனுப்பினான்..!
#இழை 2/4
பீமன் என்ற அரசனை வென்று அப்பகுதிகள் அனைத்தையும் சோழப்பேரரசுடன் இணைத்தான்..!
கீழைச்சாளுக்கிய அரசனான சக்திவர்மனுக்கு அடைக்கலம் தந்து அவனது எதிரிகளை வென்று சக்திவர்மனை சிற்றரசனாக்கி கீழைச் சாளுக்கிய நாட்டையும் சோழர்களுக்கு கீழ் கொண்டு வந்தான்..!
#இழை 2/5
சக்திவர்மனின் மகனான விமலாதித்தனுக்கு இராசராசன் தனது மகளான குந்தவையை மணமுடித்து கொடுத்து நல்லுறவு பாராட்டினான்..! கிபி 999
கலிங்க நாட்டிலுள்ள குலூத நாட்டு அரசனான விமலாதித்தனை (இவன் வேறு) வென்று அங்குள்ள மகேந்திர மலையில் வெற்றித்தூன் ஒன்றை நிறுவினான்..!
#இழை 2/6
#இராசராசசோழன்
கிபி 993ல் வெளிவந்த கல்வெட்டுகளின்படி இலங்கையின் மீது பாலம் அமைத்து போர்த்தொடுத்த ராமனை விட மரக்கலம் கொண்டு இலங்கையை வென்ற இராசரானே சிறந்தவன் என்று திருவாலங்காட்டு பட்டயமும் தெரிவிக்கின்றது..!
'இராமனை விட சிறந்தவன் இராசராசசோழன்'
#இழை 2/7
இலங்கையில் அரசன் சிங்களவன் ஐந்தாம் மகிந்தன் மீது இராசராசசோழன் போர்த்தொடுத்த போது அச்சமுற்று இலங்கையின் தென்கிழக்கில் உள்ள ரோஹணம் என்னும் இடத்திற்கு ஓடி ஒளிந்தான் மகிந்தன்...!
அப்போது வட இலங்கையை கைப்பற்றி அதற்கு 'மும்முடிச் சோழ மண்டலம்' என்னும் பெயரிட்டான்..!
#இழை 2/8
இப்படையெடுப்பால் அனுராதபுரம் அழிவுற்றது..
போலநருவா சோழர் தலைநகரம் ஆனது அது ஜனநாதமங்கலம் என்றும் பெயர் மாற்றப்பட்டது..! அங்கு சிவன் கோவிலையும் கட்டினான் இராசராசன்..!
இது இன்றும் எழிலுடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.
#இழை 2/9
இரட்டபாடி என்பது இராட்டிரகூடர் அரசாண்ட நிலப்பகுதி. இதன் அரசனான சத்யாஸ்ராயனுடன் இராசராசன் போரிட்டு வெற்றி பெற்றான்..
அங்கு கிடைத்த செல்வங்களை தஞ்சை பெருவுடையார் கோயில் கட்ட செலவழித்தான் என்று கல்வெட்டுகள் கூறுகிறது..!
தெலுங்கு மன்னர்களை புறமுதுகு காட்டி ஓடச்செய்தவனிவன்.#இழை2/10
வடக்கே கிருஷ்ணையாறு முதல் வடமேற்கே துங்கபத்திரையாறு முதல் தெற்கே குமரிமுனை வரை கிழக்கிலும் மேற்கிலும் கடலை எல்லைகளாகக் கொண்டு தென்னிந்தியா முழுவதையும் சோழதேசமாக உருவாக்கிய முதல் தமிழரசன் இராசராசசோழன்..!
#இழை 3/1
இராசராசன் அயல்கடல் நடுவில் பலகலம் செலுத்தி முந்நீர்ப்பழந்தீவு, போன்ற பல தீவுகளை கைப்பற்றி சோழப்பேரரசுடன் இணைத்தான்..!
சென்ற இடமெல்லாம் வெற்றி பெற்றதால் சயங்கொண்டான் என்ற பெயர்ப்பெற்றான் அருண்மொழிச்சோழன். அதுமுதல் தொண்டை மண்டலம் சயங்கொண்ட சோழ மண்டலம்' எனப்பட்டது..!
#இழை 3/2
பழுவேட்டரையர் கந்தமறவன் என்பவன் ஒரு சிற்றரசன். அவன் கீழ்ப்பழுவூர்,மேலப்பழுவூர்களை ஆண்டுவந்தவர்..!
இவருடைய மரபில் தான் முதல் பராந்தகன் பெண் எடுத்தான். எனவே சோழர்களின் மதிப்பிற்குரிய மரபானது பழுவேட்டரையர் மரபு. மிகச்சிறந்த சிவபக்தன் மேலப்பழுவூர் திருத்தோட்டத்தில் சிவனுக்கு #இழை33
கோயில் எழுப்பினான்.
இராசராச சோழனின் சிற்றரசர்கள் இலாமராயர் வட ஆற்காடு, உடையார் இலாடராயர்,சளுக்கிவீமன், மறவன் நர்சிம்மவர்மன் என்னும் பாணர் குடியைச்சேர்ந்த சிற்றரசன் தென் ஆர்க்காடு சம்பை என்னுமிடத்தையும் ஆண்டு வந்தான் ஒரு ஏரியையும் வெட்டுவித்தான்.
#இழை 3/4
சேனாதிபதி குரவன் உலகளந்தான் என்பவனை இராசராசன் சோழப்பேரரசு முழுதும் அளந்து கணக்கெழுத நியமித்த அளவையாளன்..! மிகச்சிறந்த அரசியல் அறிஞன்..!
இதிலிருந்தே விளங்கும் இராசராசன் குடிகளுக்கிடையே சமரசம் பாராட்டிய நன்னெறியாளனென்று..!
#இழை 3/5
ராம ஈராயிரவன், பருத்தி குடையான் வேளான் மதுராந்தக மூவேந்தன் என்பவர்கள் அமைச்சர்களாக இருந்தனர்..!
பாண்டிய நாட்டு பழைய வட்டெழுத்து கல்வெட்டுகள் இராசராசன் காலத்தில் புதிய தமிழில் மாற்றி எழுதப்பட்டன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது..! நமது வரலாற்றை அறிவதற்கு மிகவும் உதவியதிது..#இழை 3/6
அரசியல் வரி நிர்வாகத்தை தற்போது உள்ளதை விட திறம்பட பல்வேறு தனித்தனி அதிகாரிகளைக்கொண்டு சீர்செய்து செம்மையுடன் ஆட்சிபுரிந்தவன் இராசராசன்..!
இராசராசன் காலத்தில் சிறந்த புகழ்பெற்ற கப்பல் படைகள் எழும்பியது.. நாடு முழுவதையும் அளந்து நிலங்களை வகைப்படுத்தி சீர்செய்தவனும் இவனே.#இழை3/7
சமயகொள்கை
இராசராசன் சிறந்த சிவசித்தரின் பக்தன். இவன் கட்டிய பெரிய கோவிலும் பல்வேறு சிவன் கோவில்களுமே இதற்கு சான்று..!
தமிழுலகத்திலிருந்து பிரித்து பார்க்க முடியாத அளவிற்கு தமிழகத்தோடு சிவனை பிணைத்தவன் இராசராசன் இந்நிலை என்றும் மாறாது..!
இது சிவசித்தனின் மண்...!
#இழை 3/8
எனினும் இவன் எல்லா சமயங்களையும் சமமாக மதித்து நடந்தான்..!
பெரிய கோவில் சுவர்களில் உள்ள சிற்பங்களும் மைசூரில் இவன்கட்டிய திருமால் கோயில்களும் மற்றும் திருமால் கோவில்களுக்கு இவன் அளித்த கொடைகளுமே இதற்கான தக்க சான்றுகள்..!
#இழை 3/9
நாகப்பட்டினத்தில் புத்த விகாரம் கட்டுவதற்கு பொருளுதவி தந்த உத்தமன் இராசராசன்..!
தனது குடிகள் விரும்பும் சமயத்தை பின்பற்ற அனுமதி வழங்கியவன் இருப்பினும் இவனுடைய சிவசமய அருள் வெள்ளம் மாற்றானையும் தன்பால் இழுத்துக்கொண்டது என்பதே வரலாற்று உண்மை..! #இழை 3/10
தஞ்சை பெருவுடையார் கோயிலை பற்றி தனியொரு இழையே எழுதலாம் என்பதால் அதை எழுத பிறகு எழுத முயல்கிறேன்..!
இராசராசன் கடல் வாணிகத்தைப் பெருக்கினான். கிபி 1015ல் முத்துக்கள் முதலிய பல உயர்ந்த பொருட்களை கையுறைகளாக தந்து தூதுக்குழு ஒன்றை சீனத்துக்கு அனுப்பினான்..!
#சீனா
#இழை 4/1
இவர்கள் சென்றபோது சீனாவில் விழாக்காலமாக இருந்தது.. சீன அரசர்க்கு பல்வேறு பரிசுப்பொருட்களை கொடுத்ததாகவும் அதன் பிறகு இரு நாடுகளுக்கிடையே வாணிகம் சிறப்பாக நடைபெற தொடங்கியதாம்..!
இக்குறிப்பு சீனர்களின் நூல்களிலும் காணப்படுகின்றது..!
#இழை 4/2
விருதுப்பெயர்கள்:
#மும்முடிச்சோழன் #சோழேந்திரசிம்மன் #சிவபாதசேகரன் #போர்க்குடிமாணிக்கஜனநாதன் #நிகரிலிசோழன் #சோழமார்த்தாண்டன் #இராசச்சரயன்_இராசமார்த்தாண்டன் #நித்தியவிநோதன்பாண்டிய_குலாசனி_கேரளாந்தகன் "#சிங்களாந்தகன்" #கதிரவகுலமாணிக்கம்
"#தெலுங்கு_குல_காலன்"
#இழை 4/3
இராசராசனின் மனைவிமார்கள்
உலகமகா தேவியார், அபிமானவல்லியார்,திடைப்பிரான் மகள் சோழமாதேவியார், திரைலோக்கிய மாதேவியார், பஞ்சவன் மாதேவியார், பிருதிவி மாதேவியார், இலாட மாதேவியார், மீனவன் மாதேவியார்,நக்கன்தில்லை அழகியார் காடன் தொங்கியார், கூத்தன் வீராணியார், இளங்கோவன் பிச்சியார்.#இழை 44
வானவன் மாதேவியார்க்கும் இராராசனுக்கும் பிறந்த ஒரே மகன் இராசேந்திர சோழன்...! (மிகச்சிறந்த சோழ பேரரசன்) அருள்மொழி
இராசராசனின் தமக்கை குந்தவையாரின் கணவன் வல்லவரையன் வாண்டிய தேவன்(கல்வெட்டு சான்றுகளின்படி) இவரது மகளான இளங்கோன் பிச்சியாரை இராசராசன் மணந்து கொண்டார்..!
#இழை 4/5
இராசராசனுக்கு மூன்று மகள்கள் குந்தவை என்ற மகளை சாளுக்கிய இளவரசன் விமலாதித்தனுக்கு மணமுடித்து கொடுத்தான். மாதேவழகி நடுவிற்பெண் என்று திருவலஞ்சுழி கல்வெட்டு குறிப்பிடுகிறது..! இன்னொரு மகளின் விபரமறிவதற்கு போதுமான சான்றுகள் இல்லை..!
#இழை 4/6
நாம் இன்று தேவாரம் என்று அறியும் தேவாரப்பாடல்கள் இராசராசன் காலத்திற்கு முன்பே பலகோயில்களில் பாடப்பட்டு அங்குமிங்குமாக தொகுப்பின்றி சிதறிக்கிடந்தன..!
சிவாலயங்களில் தமிழில் மறைபாட வேண்டும் என்ற உயரிய எண்ணத்தை மனதில் கொண்டு சிதறுண்டிருந்த தேவாரத்தை தொகுக்க உளங்கொண்டான்..!
#இழை4/7
தேவாரப் திருமுறைகளை மீட்டெடுக்க உதவி செய்ய தக்கவர் திருநாரையூரில் வாழ்ந்த அந்தணப் பெரியாரான நம்பியாண்டார் நம்பி என்ற செய்தியறிந்து திருநாரையூர் சென்றான் இராசராசன்..!
நம்பியாண்டார் நம்பி தமிழ்சித்தசமயத்தின் இறையான பொல்லாப்பிள்ளையாரின் தீவிர பக்தர்..!
#இழை 4/8
அவரிடம் இராசராசன் தனது எண்ணத்தை எடுத்துக்கூறினார்..
நம்பியாண்டார் நம்பி தேவார பாடல்கள் சிதம்பரத்தில் பொன்னம்பலத்தின் மேற்றிசையில் தேவார மூவர் கையிலச்சினை பெற்ற காப்பினையுடைய அறையில் இருப்பதை பொல்லாப்பிள்ளையார் கனவில் உணர்த்தினார் என்பதை இராசராசனிடம் எடுத்தியம்பினார்..!
#இழை 4/9
உடனே அரசன் அவருடன் பொன்னம்பலம் சென்று தில்லைவாழ் அந்தணர் கூறியபடி அப்பர் சுந்தரர் சம்பந்தர் படிமங்களை ஊர்வலமாக வரச்செய்து அரண்மிக்க அறையில் இருந்த தேவார ஏடுகளை எடுத்தான். சில ஏடுகள் புற்றினால் அழிந்து கிடந்தன..!
கிடைத்த பதிகங்களை தேவார திருமுறைகளாக தொகுக்க வழிசெய்தான்.
#இழை410
தேவாரப் பாடல்களை நாடெங்கும் பரவச்செய்ய பெருமுயற்சி செய்தான் சிவபாதசேகரனான இராசராசன்..!
கோயில்கள்தோறும் ஓதுவார்களை நியமித்தான்..
தஞ்சை பெரிய கோவிலில் 48 ஓதுவார்கள் இராசராசனால் நியமிக்கப்பட்டனர்..! திருமுறைகளை முறைப்படுத்தியவன் இராசராசன்..!
#இழை 5/1
சிவ சமய தொண்டில் அழியா புகழ்பெற்றான் அருண்மொழிச்சோழன்..!
திருமுறைகள் உள்ளவரை இவனிசை அழியாது..!
தமிழ் திருமு(ம)றை தொகுத்த திருவாளன் இராசராசன்..! தமிழ்வளர்த்த தமிழன்..
தமிழர்களின் பெருமைக்குரிய முதலாம் இராசராசன் என்னும் அருண்மொழிச்சோழன் புகழ் போற்றி போற்றி!!! 🙏
#இழை 5/2
அன்றும் இன்றும் 'தெலுங்கு குல காலன்' இராசராசன் புகழ் ஓங்குக!!!
பிராமண அசடர்களின் பொன்னியின் செல்வன் (நாவல்) போன்ற பொய் புனைவில்லாமல் முடிந்தவரை உண்மை வரலாற்றை சுருக்கமாக பதிவிட்டுள்ளேன்..!
நன்றி வணக்கம் 🙏
#தமிழர்களின்_பெருமைக்குரியவர்_இராசராசசோழன்
#அருண்மொழிச்சோழன்
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.