தென் கைலாயம்:-
சிவபெருமானின் இருப்பிடமான கைலாயம் வடக்கே உள்ளது என நம் அனைவருக்கும் தெரியும்.
ஆனால்,
தென் கைலாயம் எங்கு உள்ளது
என நம்மில் நிறைய பேருக்கு தெரிய வாய்ப்பில்லை,
தெரிந்துகொள்வோம் தொடர்ந்து படியுங்கள்.
#இராஜராஜசோழன்
#ஐப்பசி_சதயம்
#சதயவிழா
தஞ்சைப் பெரியகோவிலுக்கு தென் கைலாயம் என்று ஒரு பெயரும் உண்டு.
கைலையாக் காட்சிகளை பெருவுடையார் கோவில் ஸ்ரீவிமானத்தில் சிற்பமாக எம்பெருமான் இராஜராஜசோழன் மிகவும் நேர்த்தியாக அமைத்துள்ளார்.
இதை தட்சிணமேரு என்று கல்வெட்டுகள் குறிப்பிடுகிறது.
தஞ்சை பெரியகோவில் 216 அடி உயர ஸ்ரீவிமானத்தில் கீழ்த்திசை சிகரத்தில் கைலாயக் காட்சி அமைந்துள்ளது.
உயர்ந்த மலைபோன்ற அமைப்பில் நான்கு பக்கமும் சற்று பிதுங்கியவாறு கைலாயம்.
கைலாயத்தின் நடுநாயகமாக உமையும்சிவனும். வலப்புறம் கணபதி இடப்புறம் வள்ளி தெய்வானை சகிதமாய் முருகன்.
சற்றுக்கீழே பிரம்மன் மற்றும் திருமால்.
நந்தி கணங்கள் தேவர்கள் புடைசூழ கைலையாக் காட்சி.
சிற்பமாக உள்ள இதே கைலாயக் காட்சியை செப்புத்திருமேனியாகவும் இராஜராஜர் எடுத்தார்.
இத்திருமேனியை தட்சிணமேரு விடங்கர் என்று கல்வெட்டு பதிவு செய்கிறது..
ஸ்ரீவிமானத்தின் மையத்தில் அமைந்துள்ள இந்த தென்கைலாய சிற்பத்தொகுதிக்கு..
இராஜராஜர் பிறந்த ஐப்பசி சதயத்திருநாள் அன்று பூ மாலை சாத்தப்பட்டது..
சிவனுக்கு உகந்த வில்வ மாலை...
80 அடி நீளம் மற்றும் முக்கால் அடி அகலம் மற்றும் அரளி,
60 முழம் மல்லிகை.
80 அடி நீளமுள்ள மாலை.
படத்தில் பார்க்கும்போது ஏதோ
5 முழம் போல் தோன்றும்
காரணம்,
216 அடி உயர ஸ்ரீவிமானத்தில்,
90 அடி உயரத்தில்,
60 அடி உயரம் கொண்ட கைலாயக்காட்சி இது..
இதுவே
ராஜேராஜேஷ்வரத்தின் மிக பெரிய பிரம்மாண்டம்..
இந்த கைங்கரியத்தைச் செய்தவர்.
திருவாளர்
கோவை ஸ்ரீகுமார்
அவர்கள். 🙏🙏🙏
கோவை ஸ்ரீ குமார் அவர்களுக்கு
#நோக்கம்சிவமயம் டேக் நண்பர்கள் சார்பாகவும் மற்றும்
#திருவிரிஞ்சை #வழித்துணைநாதர்சிவனடியார்_திருகூட்டம் சார்பாக பாதம் பணிந்த நன்றி கலந்த வணக்கங்கள் 🙏🙏
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.