#goofymovies
Churuli (2021/Malayalam)
OTT : SonyLIV
Lijo Jose Pellissery இன் அட்டகாசமான படைப்பு. இந்த படம் வித்தியாசமான ஒரு அனுபவத்தை கொடுத்திச்சு, முக்கியமா அந்த காடும் மலையும் அதன் சத்தங்களும் பின்னணி இசையும் கூடவே பயணித்த உணர்வை கொடுத்திச்சு. கூடவே பல குறியீடுகளும்🚶.
முன் கதை :
"உனக்கு பெருமாடன் யாரென்று தெரியுமா சாஜிவா? , அவன் எல்லோரையும் வழி தவற வைக்கும் மாயை" என்று கதை சொல்ல ஆரம்பிக்கும் பெண், பெருமாடனை பிடிக்க காட்டிற்குள் சென்ற திருமேனியையும் அவர் பெருமாடனால் வழி தவறி காட்டிற்குள் சுற்றுவதை பற்றியும் கூறுகிறாள்.
நிகழ்காலம் : அந்தோனி, சாஜிவன் என்னும் புனை பெயருடன் இரண்டு போலீஸ்காரர்கள் ஜோய் என்பவனை பிடிப்பதற்காக 'சுருளி' என்ற இடத்திற்கு செல்கின்றனர். அங்கு அவர்கள் அனுபவிக்கும் அமானுஷ்யங்களும், இறுதியில் ஜோயை கைதுசெய்தார்களா? என்பதுதான் கதை. ரொம்ப சிம்பிளான கதைதான் என்றாலும் making அதகளம்.
இனி படத்துல வரும் detailing பற்றி சொல்லபோறேன். படம் பார்க்காதவங்க இந்த பக்கம் வராதீங்க.
Spoilers Alert.
ஜோயை தேடி செல்லும் போலீஸ்காரர்களுடன் சகஜமாக பேசிவந்த ஊர்க்காரர்கள் இந்த பாலத்தை கடந்ததும் வேறொரு பரிமாணத்துக்கு செல்கின்றனர். உடல்மொழி, பேச்சு அனைத்திலும் வித்தியாசம். சுருளி வேறோர் உலகு.
முன்கதை தொடக்கம் படம் முழுக்க ஒரு 'சுருள்' symbol நிறைய இடத்துல வரும்.
1. Hohokam Spiral
Hohokam என்றால் மறைந்துபோனவர்கள்/முன்தோன்றியவர்கள் என்று பொருள்படும். இந்த spiral இறப்பின் பின்னரான முடிவில்லா வாழ்கையையும் (eternity) & emergenceஐ குறிக்கிறது
இந்த சுருளி, தற்போதைய அரிசோனா மாகாணத்தில் வாழ்ந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எங்கே சென்றார்கள் என்பதே தெரியாமல் காணாமல் போன மிகவும் நாகரீக வளர்ச்சியடைந்த கூட்டத்தினால் வரையப்பட்டது.
முன்கதையில் சுருளி.
நிகழ் கதையில் சுருளி.
இந்த படத்தை பார்கிறப்போ உங்களுக்கு என்ன தோன்றுது?
சுருளி & Extraterrestrial
Joy = பெருமாடன் = வேற்றுக்கிரகவாசி
முன் கதையில் வரும் பெருமாடன் தான் Joy, அப்படியானால் அவன் வயது என்ன? எப்படி அவனால் நீண்டகாலம் உயிர் வாழ முடிகிறது?
இந்த காட்சியில் கண்களை மூடி எல்லோரும் தியான நிலையில் செல்லும் பொழுது Joy அவர்களை அதட்டி அந்த மோன நிலையை கலைக்கிறான்.
ஜோய் பின்னர் போலீசுடன் செல்கிறான். அப்பொழுது திருமேனி மாடன் கதை தெரியுமா என்கிறான்? பின்னர் வேறொரு கதை சொல்வதாக சொல்லி, தன்னை பிடிக்க வந்த ஒரு போலீஸ் கதை என்கிறான், அதற்கும் முன்னர் வந்த இன்னொரு போலீஸ் கதை, அதிலும் முன்பு வந்த மற்றொரு கதை என்கிறான்.
இது ஒரு சுழல்/சுருளி
"பின்னர் திருமேனி இல்லையில்லை போலீஸ் என்னை பிடிக்க முயன்றது" என்கிறான்.
அப்படியானால் Joy=பெருமாடன்
ஊர்மக்கள் பெருமாடனின் மாயையால் வழிதவறிய போலீஸ்காரர்களா? (ஒருவருக்கு பல பெயர்கள்/ யாருக்கும் யாரையும் பற்றி முழுமையாக தெரியாது)
அமானுஷ்யங்கள்.
பெருமாடன் - திருமேனி கதை ஓவியங்கள்.
Shajivan to Joy transformation.
படம் ஆரம்பத்தில் இருந்தே Shajiக்குள்ள மாற்றம் நடந்திட்டு இருக்கும்.
கடைசி படத்தை பார்த்தா புரியும். ஆரம்பத்தில், முன் சீட்டில் இருந்த Shaji இடத்தில் Joy உம், பின் சீட்டில் Joy இருந்த இடத்தில் Shajiv உம் மாறி இருப்பார்கள்.
படத்தின் ஆரம்ப காட்சியில் பத்திரிகை வாசிப்பவர் ஒருவர் சொல்வார், "இரண்டு அமெரிக்கர்களை, ஏலியன் அதன் வாகனத்தில் ஏற்றிகொண்டு சென்றது"
Climax.
Churuli : Eternity and Emergence
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.