நினைத்துப் பார்க்கின்றேன்!
ஒரு துப்பாக்கி கூட அறியாத தமிழனை, வேலோடும் வில்லோடும் களமாடிய கதைகளே வரலாறாக கொண்ட தமிழர் பரம்பரையை, உயிரை ஆயுதமாய் ஊதிவிடும் தியாகத்தை உலகுக்கு தந்த தலைமையை,
இலக்கை நோக்கிச் செல்ல தடைகளை உடை அல்லது அதை தாண்டி பாய் அல்லது இன்னொரு பாதையை பார் என எப்போதுமே ஓயாமல் சுழலும் அர்ப்பணிப்பை,
என்குடும்பம் என்பதும் எங்கள் மக்கள் என்பதும் ஒன்றே என தனது பிள்ளைகள் இருவரை களத்திலே எதிரியை பொருதவிட்ட ஒப்பற்ற மாவீரத்தை,
சலுகைகள் என்பதும் உரிமைகள் என்பதும் வேறுபட்டவை என எடுத்துக் காட்டியும், எங்கள் மண்ணில் எமக்கான சுதந்திரம் இல்லாத விடுதலை என்பது விலைபோதல் என்பதே என இறுக்கமாய் சொல்லி எல்லோரையும் ஒரு அணியில் இழுத்த ஒருங்கிணைப்பை,
எதிரிகள் எத்தனை சேர்ந்தாலும் வீழ்த்தமுடியாது என்பதை எடுத்துக்காட்டி,
தோள் தட்டி வளர்த்த துரோகிகளிடம் கூட "அவசரப்பட வேண்டாம்" கதைத்துப் பார்ப்போம் என்று கடைசிவரை முயலும் பெருந்தன்மையை,
ஒருமுறை தந்தையாய் ஒருமுறை மகனாய் ஒரு முறை அண்ணனாய் ஒருமுறை தலைவனாய் என எத்தனை வடிவம் எடுத்தாலும், அத்தனையின் முடிவிலும் விடுதலை ஒன்றே என்ற அவர் மூச்சினை,
தத்துவம் பேசும் வித்தகர்கள் மத்தியில், தத்துவங்கள் என சிக்கி சிதறாமல், ஒவ்வொரு வாழ்வின் எழுகையும் விழுகையும் தரும் அனுபவங்களை தத்துவ ஆசிரியனாக ஏற்கும் பெரும்பணிவை,
ஒவ்வொன்றாய் இனங்கண்டு, ஒவ்வொரு துறைகளை உருவாக்கி ஒரு நாடாய் வளர்த்துவிட்ட தலைமகனை,
நினைத்துப் பார்க்கின்றேன்!
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.