நினைத்துப் பார்க்கின்றேன்!
ஒரு துப்பாக்கி கூட அறியாத தமிழனை, வேலோடும் வில்லோடும் களமாடிய கதைகளே வரலாறாக கொண்ட தமிழர் பரம்பரையை, உயிரை ஆயுதமாய் ஊதிவிடும் தியாகத்தை உலகுக்கு தந்த தலைமையை,
இலக்கை நோக்கிச் செல்ல தடைகளை உடை அல்லது அதை தாண்டி பாய் அல்லது இன்னொரு பாதையை பார் என எப்போதுமே ஓயாமல் சுழலும் அர்ப்பணிப்பை,
என்குடும்பம் என்பதும் எங்கள் மக்கள் என்பதும் ஒன்றே என தனது பிள்ளைகள் இருவரை களத்திலே எதிரியை பொருதவிட்ட ஒப்பற்ற மாவீரத்தை,
சலுகைகள் என்பதும் உரிமைகள் என்பதும் வேறுபட்டவை என எடுத்துக் காட்டியும், எங்கள் மண்ணில் எமக்கான சுதந்திரம் இல்லாத விடுதலை என்பது விலைபோதல் என்பதே என இறுக்கமாய் சொல்லி எல்லோரையும் ஒரு அணியில் இழுத்த ஒருங்கிணைப்பை,
எதிரிகள் எத்தனை சேர்ந்தாலும் வீழ்த்தமுடியாது என்பதை எடுத்துக்காட்டி,
தோள் தட்டி வளர்த்த துரோகிகளிடம் கூட "அவசரப்பட வேண்டாம்" கதைத்துப் பார்ப்போம் என்று கடைசிவரை முயலும் பெருந்தன்மையை,
ஒருமுறை தந்தையாய் ஒருமுறை மகனாய் ஒரு முறை அண்ணனாய் ஒருமுறை தலைவனாய் என எத்தனை வடிவம் எடுத்தாலும், அத்தனையின் முடிவிலும் விடுதலை ஒன்றே என்ற அவர் மூச்சினை,
தத்துவம் பேசும் வித்தகர்கள் மத்தியில், தத்துவங்கள் என சிக்கி சிதறாமல், ஒவ்வொரு வாழ்வின் எழுகையும் விழுகையும் தரும் அனுபவங்களை தத்துவ ஆசிரியனாக ஏற்கும் பெரும்பணிவை,
ஒவ்வொன்றாய் இனங்கண்டு, ஒவ்வொரு துறைகளை உருவாக்கி ஒரு நாடாய் வளர்த்துவிட்ட தலைமகனை,
நினைத்துப் பார்க்கின்றேன்!
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சிறிலங்கா அரசிற்கு இன்று உலகநாடுகளின் கடனஉதவித்திட்டங்கள், சர்வதேச நாணயநிதியத்தின் உதவிகள் என அனைத்தும் கிடைத்தே பெரும் பொருளாதார நெருக்கடியில் அங்குள்ள மக்கள் உண்ண உணவின்றி வாடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் புலிகளோ உலகநாடுகளின் எந்த உதவியுமின்றி தம் சொந்தக்காலில் தமது பெரும்
பொருளாதரத்தை வளர்த்து தமது மக்களை வாழவைத்தார்கள்.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் இயங்கியவை: 01. இராணுவம் 02. கடற்புலிகள் 03. வான்புலிகள் 04. கரும்புலிகள் 05. அரசியற்துறை (அரசியல் தொடர்பு, மக்கள் தொடர்பு, பரப்புரை, கொள்கை முன்னெடுப்புப் பிரிவு)
06. புலனாய்வுத்துறை (வெளியகப் புலனாய்வுப் பிரிவு, உள்ளகப் புலனாய்வுப் பிரிவு) 07. படையப் புலனாய்வுப் பிரிவு 08. தமிழீழப் படைத்துறைப் பள்ளி 09. படைய தொடக்க பயிற்சிக் கல்லூரி, விசேட பயிற்சிக் கல்லூரி, படைய அறிவியல் கல்லூரி (MO), இராணுவ ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி,