Sathiya Sothanai Profile picture
Belongs to the Dravidian stock 🖤❤ || ~~ All is Well ~~

Dec 8, 2021, 5 tweets

திக கூட்டத்தில் பொதுமக்களிடையே பேசிக் கொண்டிருந்த தந்தை #பெரியார் மீது ஒரு பார்ப்பான் மலத்தை வீசியபோது,

தனது தொண்டர்களை கட்டுப்படுத்தி,
அந்த பார்ப்பானை பாதுகாப்பாக அனுப்பிவைத்து,
தன்னை சுத்தம் செய்துகொண்டு,

உரையை நிறைவுசெய்த பெரியாரை விடவா நாம் நாகரீக அரசியல் செய்கிறோம் 😏

1/5

அறிஞர் #அண்ணா அவர்கள் வீட்டின் எதிரே அவர் அன்னையை வேசி என எதிர்கட்சி பேனர் கட்டிய அவதூறு செய்த போது,

தனது தொண்டர்களை கட்டுப்படுத்தி,
அந்த பேனருக்கு வெளிச்சம் போட்டு அந்த எதிர்கட்சியின் தரத்தை மக்களுக்கு அம்பலப்படுத்திய

அறிஞர் அண்ணாவை விடவா நாம் நாகரீக அரசியல் செய்கிறோம் 😏
2/5

கலைஞர் #கருணாநிதி அவர்கள் தம் சிலையை எதிர்கட்சிகாரன் இடித்தபோது,

'அந்த சின்னத்தம்பி என் முதுகில் குத்தவில்லை, நெஞ்சில் தான் குத்துகிறான்' என்று கூறி

அந்த கலவர சூழலில் தனது தொண்டர்களை கட்டுப்படுத்தி,

நிலைமையை சுமூகப் படுத்திய கலைஞரை விடவா நாம் நாகரீக அரசியல் செய்கிறோம் 😏

3/5

தலைவர் கலைஞரின் இறுதி விருப்பமான அறிஞர் அண்ணா நினைவிடம் அருகே ஓய்விட விசயத்தில் அதிமுக கொத்தடிமைகள் குள்ளநரித்தனம் செய்தபோது,

உயிரையும் கொடுக்க இருந்த தொண்டர்களை கட்டுப்படுத்தி,

சட்டபூர்வமாக கலைஞரின் விருப்பத்தை நிறைவேற்றிய, தலைவர் @mkstalin செய்ததும் நாகரீக அரசியல் தான்

4/5

ஜனநாயக நாட்டில் அரசியல் செய்ய அனைத்து கட்சிகளுக்கும் உரிமை உண்டு.

நமது வழி ஜனநாயகமா இல்லை சர்வாதிகாரமா என்பது அவற்றை எதிர்கொள்வதில் தான் தெரியும்.

கடமை
கண்ணியம்
கட்டுப்பாடு

என வாழ்ந்த நம்மை
# போதும்_நாகரிக_அரசியல் என பதிவிட வைத்தது

BJPன் வெற்றியா,
இல்லை நமது .. 🤔

5/5

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling