H.A.L. 9000 Profile picture
Movies & Series Review & Updates | Deals & Discounts | Amazon/Purchase links shared can earn commissions | Daily Deals @DealDazzleX

Dec 10, 2021, 17 tweets

நான் பார்த்த முதல் கொரியன் படம்
The Wailing .

படம் பார்த்து முடித்த பின் ஒன்னுமே புரியல. முக்கியமான கேள்வி யாருதான்டா இதுல பேய்.

அப்ப Quora la விளையாட்டா கீழ உள்ள கேள்வியை கேட்டேன். அதுக்கு ஒரு நண்பர் கொடுத்த ரிப்ளேயை கீழே காப்பி பேஸ்ட் செய்துள்ளேன்.

படம் பார்த்தவர்களுக்கான போஸ்ட் இது. படம் பார்த்து விட்டு புரியல என்பவர்கள் மேலே படியுங்கள்.

கொரிய இயக்குனர்களின் திறமைக்கு இது ஒரு சாம்பிள்.

சமீபத்தில் கொரியன் திரைப்படமான தி‌ வெய்லிங் (The Wailing) பார்த்தேன், ஆனால் கடைசியில் யார் பேய் என்று தெளிவாக தெரியவில்லை. யாராவது விளக்கம் தர முடியுமா?

கொரியன் திரைப்படங்களில் தி வெய்லிங் சற்று வித்தியாசமான திரைப்படமே…மூன்று ஜெனரை மிக்ஸ் செய்து ஒரு படம் எடுத்திருப்பார்கள்,

இதனால் புதுமையாகவும் வித்தியாசமாகவும் இருக்கும்.

இயக்குநர் Na Hong-jin எடுத்த மூன்றாவது படம் The Wailing, அவர் எடுத்த The Chaser, The Yellow படங்களும் அருமையாக இருக்கும்.

சரி படத்திற்கு வருவோம்…

ஒரு கிராமத்தில் தொடர்ந்து நடக்கும் மர்மமான உயிரிழப்புகள், கொடிய கிருமி மூலம்

தாக்கப்பட்டடு, ஒருவரால் குடும்பத்தில் அனைவரும் தாக்கப்பட்டு உயிரிழப்பார்கள். இதனை கண்டறியும் கதாநாயகன் போலிஸ், அவரின் மகளும் பாதிக்கப்பட்டு குடும்ப நபர்களை கொன்று விடுவார், அத்துடம் படம் முடியும்.

இதற்கெல்லாம் யார் தான் காரணம் என்று ஆராய்வது தான் படம்,

மூன்று முக்கிய கதாபாத்திரங்கள்

மர்மமான ஜப்பானியர்.

ஜப்பானிலிருந்து ஒரு நபர் கிராமத்திற்கு வந்த பின்னர் தான் இந்த கொலையெல்லாம் நடக்குது என்று அவரை பற்றி ஆராய்வார்கள்

மர்மமான பெண்

பெயர் தெரியாத இந்த பெண் அவ்வப்போது தோன்றி போலிஸிடம் சில கூறிவிட்டு செல்வார்

பேய் ஓட்டும் ஷாமன்

போலிஸின் மகளை காப்பாற்ற சில விசேஷ பூஜைகளை செய்யும் நபர். இவர் அந்த மர்மமான பெண்தான் எல்லா உயிரிழப்பிற்கும் காரணம் என சொல்வார். அவள் ஒரு பேய் என சொல்வார்.

இந்த மூன்று பேரில் யார் பேய் எனக் கண்டறிவது ஆடியன்ஸ் ஜாப்..

உண்மையில் யார் பேய்? என்ன கதை?
மர்மமான ஜப்பானியர்தான் பேய், அவரை கட்டுப்படுத்தி/செயல்படுத்தி பணம் சம்பாதிப்பவர் அந்த ஷாமன். இவர்கள் இருவரும் இணைந்து செயல்படுகிறார்கள். மர்மமான பெண் ஒரு தூய ஆவி அதாவது கடவுளுக்கு நிகரானவர். இதனை தடுக்கவே அவள் முயற்சிக்கிறார் போலிஸுக்கு உதவுகிறார்

இதனை மறைமுகமாக கூறும் விடயங்கள்.
-1-
ஆரம்ப காட்சி
அழுகிய நிலையில் பூ தொங்கும்..இதனை கிளைமாக்ஸ் காட்சியிலும் காணலாம்(3 rd Picture)

இந்த பூக்களை கட்டி விடுவது தான் அந்த மர்மமான பெண்ணின் வேலை. இந்த பூக்கள் அழுகி விட்டால் அந்த குடும்பத்தில் அனைவரும் இறந்து விட்டதாக அர்த்தம்.

-2-
புகைப்படங்கள்

ஆரம்பத்தில் போலிஸ் ஜப்பானியர் வீட்டில் சோதனை செய்யும்போது இறந்தவர்களின் புகைப்படம் கிடைக்கும், இதனால் மர்ம கொலைக்கும் காரணம் ஜப்பானியர் என கூறுவார்.

ஷாமன் கிளைமாக்ஸ் ல் போலிஸ் வீட்டில் புகைப்படத்தை எடுத்து விட்டு கிளம்பும்போது தற்செயலாக சில புகைப்படங்கள் கீழே விழும்,அதில் ஜாப் எடுத்த பழைய புகைப்படங்கள் இருக்கும். அழிந்து விட்டதாக கூறிய அந்த புகைப்படங்கள் ஷாமனிடம் இருக்க காரணம். ஜப்பானியரும் ஷாமனும் இணைந்து செயல்படுவதால் தான்

3.கனவுகள்
போலிஸாக வரும் கதாநாயகனுக்கு அவ்வப்போது சில கொடூரமான கனவுகள் வரும். அதில் வரும் ஜப்பானியர் கோமனம் கட்டியிருப்பார்.ஷாமன் பூஜைக்கு முன்னர் உடை மாற்றும்போது அவரும் கோமனம் கட்டியிருப்பார். இது அவர்கள் இருவரும் ஒரே கொள்கையை மற்றும் சேர்ந்து செயல்படுகிறார்கள் என்பதை உணர்த்தும்

4.ஷாமன் பூஜை செய்யும் காட்சி மற்றும் ஹாஸ்பிடலில் போலிஸ் மகள் அழும் காட்சியை சற்று கவனித்து பார்த்தால் தெரியும். ஷாமன் கட்டுப்பாட்டில் தான் ஜப்பானியர் செயல்படுகிறார் என்பதனை உணரலாம்.

5.வசனங்கள்

மர்மமான பெண்ணாக வருபவர் பேசும் வசனங்கள் பைபிள் மற்றும் புத்தர் பேசியவற்றை கூறுவார். இது அவள் பேய் இல்லை, கடவுளுக்கு நிகரான தூய ஆவி என்பதனை குறிக்கும்.

6.ஆடைகள்

ஆடைகளின் வண்ணத்திலும் (கருப்பு மற்றும் வெள்ளை) நல்லவர், கெட்டவர் என்பதனை கண்டறியலாம்.

இப்பொழுது குழப்பம் தீர்ந்திருக்கும் என நம்புகிறேன்.

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling