H.A.L. 9000 Profile picture
Movies & Series Review & Updates | Recommendations Based On My Personal Opinion
Kanagarajan Profile picture 1 subscribed
Sep 30, 2023 19 tweets 3 min read
ஸ்ரீவில்லிபுத்தூர் என்றாலே பால்கோவா என்ற ஒரு பெயர் உள்ளது.

சொல்லப்போனால் இந்த பால்கோவா மற்ற அனைத்தையும் மறைத்து விட்டது எனலாம்.

இதை மாற்றும் விதமாக மற்ற திண்பண்டங்கள் மற்றும் ஹோட்டல்களை பற்றிய பதிவு இது‌ 🏃🏃

கொஞ்சம் நீளமான பதிவு....

Image
Image
Image
மதுரையில் இருந்து வரும் போது ராமகிருஷ்ணாபுரம் பஸ் ஸ்டாப்பில் இறங்கினால் எதிர்ப் பக்கம் "சுந்தரம் கடை" (ஆனால் ஃபோர்டு இருக்காது) அங்க
மெதுவடை , காரா வடை, இனிப்பு அப்பம் தரமா இருக்கும்.

அப்படியே முன்னாடி வந்தா "மகாலட்சுமி ஸ்வீட்ஸ்" .
May 19, 2023 9 tweets 2 min read
Tatkal Booking in Mobile App - Tips

Before Booking:

1. முதலில் IRCTC App update ஆகி லேட்டஸ்ட் வெர்ஷன்ல இருக்கானு பாருங்க (Login Problem வந்தா இதுவும் ஒரு ரீசன்)

2. Login பண்ணதுக்கு அப்புறம் Bio Metric Authentication "ON" பண்ணுங்க.

👇 3. Master List ல Passenger details சேருங்கள் .

4. IRCTC Wallet ல் தேவையான அளவு பணத்தை லோட் பண்ணி வைச்சுக்கோங்க.

5. Logout - பண்ணிட்டு Finger Print வைச்சு லாகின் பண்ணி எல்லாம் சரியா இருக்கானு பார்த்துக் கொள்ளுங்கள்.

👇
May 17, 2023 4 tweets 1 min read
நேத்து டிரெயின்ல ஒருத்தர் கூட வந்தாரு 45 - 50 வயது இருக்கும். துரைப்பாக்கம் போகனும் அப்படினு சொன்னார்

என் கூட வாங்க பஸ் ஏத்தி விடுறேனு சொன்னேன். வந்தவரு திடீர்னு நான் ஆட்டோல போறேன்னு சொன்னாரு. வேண்டாம்யா அவனுக அமௌன்ட் கூட கேப்பானுக நேரா பஸ் இருக்கு அதுல போனு சொன்னாலும் கேட்குற மாதிரி இல்ல. நீங்க பேசி கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க அப்படினு சொன்னார். இவனுக கிட்ட எல்லாம் பேரம் பேச பிடிக்காம தான் நானே பஸ்ல போறேன் வேணும்னா நீங்களே பேசிக்கோங்கனு அனுப்பி விட்டேன்.

போறப்பவே ஒரு ஆட்டோ ஓட்டுநர் வந்து வழிய மறுச்சுட்டார்.. நான் மெதுவாக நடந்து போய்ட்டு
Apr 4, 2023 21 tweets 6 min read
Day Trading - Basics

⚠️ long Thread ⚠️

இந்த போஸ்ட் Day Trading பண்ணுங்கனு சொல்றதுக்கு இல்ல. சில பேர் புதுசா டே டிரேட் பண்ணலாம்னு நெனப்பாங்க ஆன அத பத்தி எங்க படிக்கிறதுனு தெரியாம இருப்பாங்க.

ஆர்வத்துல காசு தொலைக்கவும் வாய்ப்பு இருக்கு.

#trading இத படிச்சுட்டு போய் காசு தொலைச்சாலும் அளவோட தொலைக்கலாம்..ஏதோ கத்துக்கிட்டோம்னு திருப்தி இருக்கும்.. அத சரி பண்ண வாய்ப்பு இருக்கு.

It's not day trading recommendation post ☺️ just for awareness and learning.
Apr 2, 2023 4 tweets 2 min read
Mutual Funds Investing

நேரடியா இன்வெஸ்ட்மென்ட்ல இறங்க கூடாது. முதலில் கொஞ்சம் அடிப்படைகளை படித்து தெரிந்து கொள்ளுங்கள். மார்க்கெட், Stock market, பொருளாதாரம் என அடிப்படைகளை படிங்க.

@ZerodhaVarsity - ஒரு அருமையான தகவல் தரும் தளம்‌.
zerodha.com/varsity/ MF ல ரிஸ்க் இருக்கு. இது ஒரு awareness post.. நீங்களும் படிச்சுக்கோங்க.

நானும் Financial Advisor எல்லாம் இல்ல நானே படித்து சாதக பாதகங்களை தெரிந்து முதலீடு செய்கிறேன் அவ்வளவு தான்.

நீங்க ஒரு ஃபண்டு சொல்லி இது வாங்கலாமா என்று கேட்டால் அதுக்கு பதில் சொல்ல மாட்டேன் ☺️
Mar 28, 2023 11 tweets 3 min read
MLM/Ponzi விழிப்புணர்வு பதிவு - Repost

இந்த டாபிக் பத்தி நேத்து பேச்சுகள் வந்தது. இதுல இன்வெஸ்ட் பண்ணிருக்கேன் ரிட்டர்ன்ஸ் வந்ததுனு வேற சிலர் சொன்னார்கள்.

அதுனால இது எப்படி செயல்படுகிறது என்று பாக்கலாம்.

இது ஒரு வகையான மக்களை ஆசை காட்டி ஏமாற்றும் வழி

#mlm #ponzischeme இந்த பேரை பெரும்பாலும் கேள்விப்பட்டு இருப்பீர்கள். அப்படி இல்லனா Pyramid Scheme, MLM Scheme னு ஏதாச்சும் ஒரு பேருல சுத்திக்கிட்டு இருக்கும்.

இந்த Ponzi அப்படினு எப்படி பேர் வந்துச்சு ?
இது இன்னிக்கு நேத்து ஆரம்பித்தது இல்லை.1869 களிலேயே ஜெர்மனியில் இந்த மாதிரி ஸ்கீம் நடத்தி
Mar 27, 2023 6 tweets 2 min read
Online Rummy - ஏன் இதுல லாபம் பாக்க முடியாது? ஏன் இவ்வளவு உயிரிழப்புகள்?

என் நண்பன் எனக்கு கூறிய விளக்கம். அவன் ரொம்ப வருஷமா விளையாண்டான். இப்ப நிறுத்திட்டான்.

ரெண்டு பேர் மட்டும் விளையாடுறாங்கனு (1 Vs 1) வைச்சுக்கோங்க.

ஒரு பக்கம் விளையாடுபவரை மட்டும் வச்சு பார்ப்போம். 👇 உதாரணமாக மொத்தம் 3 கேம், ஒரு கேம் ஜெயிச்சா 42.5 ரூபாய் கெடைக்கும், 7.5 ரூபாய் ரம்மி கம்பெனிக்கு

1st Game - 25
Won - 42.50
Rummy Provider - 7.50

2nd Game - 25
Won - 42.50
Rummy Provider - 7.50

3rd Game - 25
Lost - 25
Rummy Provider - 7.50
Nov 19, 2022 15 tweets 10 min read
1899 - Netflix Series

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளிவந்த சீரிஸ் இது. முடிந்த வரை ஸ்பாய்லர் இல்லாமல் ரிவ்யூ கொடுக்க முயற்சி பண்றேன். 

In Short: Worth Watching 👍. Not for everyone.

🟡Long Thread...👇

#1899Netflix #1899series ImageImageImageImage ரிவ்யூக்கு முன்னாடி இதுவரைக்கும் எக்கச்சக்க கேள்விகள்‌ வந்தது. முதலில் அதற்கு பதில்களை சொல்லிட்டு ரிவ்யூ போகலாம்.

ஏன் இந்த சீரிஸ்க்கு இவ்வளவு பில்டப்? 

Dark னு ஒரு சீரிஸ் இருக்கு. இதுவரை வெளிவந்த Sci-Fi சீரிஸகளில் ரொம்பவே தனித்துவமானது மற்றும் பார்ப்பவர்களை ரொம்பவே
Nov 19, 2022 9 tweets 11 min read
Best of Anya Taylor-Joy - Recommendations

எதுக்குமே Tamil dub ❌

1. Last Night in Soho
கிராமத்தில் வளரந்த பெண் நகரத்திற்கு படிக்க போகிறார். அங்கு தங்கும் ஒரு ரூமில் நடக்கும் அமானுஷ்ய விஷயங்கள் தான் படம்.

IMDb 7.1 🟢 | RT 76% 🟢

Available in #PrimeVideo

👇 Image படம் 1960 & இப்ப‌ நடக்கும் சம்பவங்கள் என மாறி மாறி வரும்.

1960 ல Anya வருவார். செம் ரோல் இந்த படத்துல.

Full Review: tamilhollywoodreviews.com/2021/11/last-n…
👇
Aug 21, 2022 5 tweets 1 min read
Non IT -> IT - Change

இன்னிக்கு நிறைய கேள்விகள் இது தான்.

ஒவ்வொருத்தருக்கா பதில் சொல்ல முடியல அதுனால இந்த த்ரெட்.

1. Programming Language - Java, Python, JavaScript, Reactjs, Angular, HTML , web development னு படிக்கலாம்.

2. சும்மா எடுத்தோம் கவுத்தோம்னு படிக்க கூடாது ‌. 3. இல்ல Programming எனக்கு ரொம்ப வராது அப்படினா Selenium போலாம்.

4. சுத்தமா Programming வரவே வராது என்றால் System Administrator, Network Administration போகலாம்.

5. Shell Script, Cloud , Devops கான்செப்ட் எல்லாம் தெரிஞ்சு வச்சுக்கிட்டு Trainee, Intern மாதிரி கெடச்சா லக்கி.
Jun 1, 2022 4 tweets 1 min read
Devops - இந்த வார்த்தை அப்படியே காந்தம் மாதிரி இழுக்குது நம்ம IT மக்களை.

Devops - ஐ நம்ம ஊர் கம்பெனிகள் யாரும் முழுவதுமாக உபயோகித்து பார்த்தது இல்ல.

முதலில் DevOps என்பது ஒரு டெக்னாலஜியே கிடையாது. அது ஒரு Process. அதுனால வந்தோமா ஒரு கோர்ஸ் படிச்சோமா DevOps ஆனோம் என்கிற கதை இங்க கிடையாது.

Devops ஐ புரிந்து கொள்ள SDLC, release , Agile என எல்லாவற்றிலும் புரிதல் அவசியம்.

அதுக்கு அப்புறம் Linux, Git, Cloud என இந்த லிஸ்ட் நீளும்.

டெவலப்பர்களுடைய பிரச்சினை என்ன என்பதை புரிந்து கொள்ளாமல் Devops ஆக முடியாது.
Jun 1, 2022 9 tweets 9 min read
The Nightingale - 2018

1825 களில் பிரிட்டிஷ் ஆதிக்க ஆஸ்திரேலியாவில் நடக்கும் ஒரு பழிவாங்கும் கதை.

#IMDb 7.3

#Tamil dub ❌

Violent Content

தனது கணவன் மற்றும் குழந்தையை கொன்றவர்களை பழிவாங்க அடர்ந்த காட்டுக்குள் பயணம் செய்யும் பெண்ணின் கதையை சொல்லும் படம். Irish பெண்ணான Clare குற்றம் சாட்டப்பட்டு விடுவிக்க பட்டவர். கணவன் மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார்.

இவர் சுதந்திரமாக நடமாட வேண்டும் என்றால் அவளுடைய அதிகாரி விடுதலை லெட்டர் தர வேண்டும். ஆனால் அந்த கடிதத்தை கொடுக்காமல் பாலியல் ரீதியாக துன்புறுத்துகிறான்
May 30, 2022 9 tweets 10 min read
Stranger Things - Season -4 -2022

மிகப்பிரபலமான இந்த தொடரின் 4வது சீசன் வெளியாகி உள்ளது. இந்த முறை தமிழ் டப்பிங் உடன் வந்து உள்ளது .

#IMDb 8.7

Season 4, 7 Episodes

Available @NetflixIndia

இந்த தொடரை பத்தி விரிவாக எழுதுவது ரொம்பவே கஷ்டம் ‌
#StrangerThings4 #StrangerThings Image ஏனென்றால் இந்த தொடரின் கான்செப்ட் அப்படி மற்றும் ஸ்பாய்லர் ஆகிவிடும்.

சுருக்கமாக சொல்வது என்றால் Parallel Universe கான்செப்ட் இந்த தொடரில் முக்கியமான ஒன்று.

வேறு உலகத்தில் இருந்து கொடூரமான மிருகம் ஒரு பாதையை உருவாக்கி நாம் வாழும் உலகத்திற்கு வந்தால் என்ன ஆகும் ?
May 23, 2022 8 tweets 9 min read
Frailty - 2001

செமயான ஒரு சைக்காலஜிகல் திரில்லர்.

#IMDb 7.2
#Tamil dub ❌
#OTT

FBI பரபரப்பா ஒரு சீரியல் கில்லரை தேடுறாங்க . ஒருத்தன் சரண்டர் ஆகி என் தம்பி தான் அந்த கில்லர்னு சொல்றான்.‌ எதன் அடிப்படையில் தம்பி தான் குற்றவாளி என்பதை தன் சிறுவயது கதை மூலம் சொல்ல ஆரம்பிக்கிறான்.

ஃப்ளாஷ் பேக்கில் அம்மா இல்லாமல் அப்பாவால் பாசமாக வளர்க்கப்படும் சகோதரர்கள் (10 &8 வயது) . ஒரு நாள் அப்பா, கடவுள் என்கிட்ட வந்து பேசுனாரு கெட்ட சக்திகளை அழிக்க சொல்லி லிஸ்ட் கொடுத்தாருனு சொல்லி மனிதர்களை கொல்ல ஆரம்பிக்கிறார்.
May 22, 2022 9 tweets 9 min read
Dark Waters - 2019

சுற்றுச்சூழலுக்கு கொடூரமான பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு கெமிக்கல் கம்பெனிக்கு எதிராக ஒரு கார்ப்பரேட் வக்கீல் நடத்தும் ஒரு சட்டப் போராட்டம் பற்றிய படம் இது‌

உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம்.

#IMDb ‌‌7.6
#Tamil dub ❌
Available @SonyLIV கெமிக்கல் கம்பெனிகளுக்காக வாதாடும் வக்கீல் தான் ஹீரோ (Rob) . ஒரு நாள் அவரது பாட்டி அனுப்பி வைத்தார்கள் என சொல்லி விவசாயி ஒருவர் வருகிறார். அவரது மாடுகள் தொடர்ந்து இறந்து வருவதாகவும் , மனிதர்களுக்கும் நிறைய பிரச்சினைகள் வருவதாகவும் இதற்கு காரணம் DuPont என்ற கெமிக்கல்
May 21, 2022 13 tweets 12 min read
Love, Death & Robots - Season 3 - 2022

இது ஒரு அடல்ட் அனிமேசன் சீரிஸ் . எல்லாமே தனி தனி கதைகள் நிறைய Genre ல இருக்கும். 

9 Episodes
#IMDb Rating - 8.4
#Tamil dub ❌
Available @NetflixIndia

ஒவ்வொரு எபிசோடும் 5 - 20 நிமிஷம் வரைக்கும் ஓடும். 

#lovedeathrobots3 #LoveDeathRobots Image Three Robots: Exit Strategies - 
உலகம் அழிந்து போன பின்பு.. 3 Robot என்ன நடந்து இருக்கும்னு ஆராய்ச்சி பண்ண வர்றத பற்றியது.
கடைசில Elon Musk னு நினைச்சியானு சொல்றது சூப்பர் . 
Decent one 👍 Image
Apr 22, 2022 4 tweets 9 min read
இந்த மாதிரி ஃபீல் குட் படஙகளை எல்லாம் அப்ப அப்ப TL ல சுத்த விட்டுட்டே இருக்கணும். Mind க்கு நல்லது 🤗

Peanut Butter Falcon - 2019 (7.6⭐)
Wonder - 2017 (7.9⭐)
CODA - 2021 (8.0⭐)
Amelie - 2001 (8.1⭐)

DM for download link

இந்த படங்களை பற்றிய மேலும் விபரங்களுக்கு 👇 ImageImageImageImage Peanut Butter Falcon -
tamilhollywoodreviews.com/2021/06/the-pe…

Wonder -
tamilhollywoodreviews.com/2021/09/wonder…

CODA -
tamilhollywoodreviews.com/2022/01/coda-c…

Amelie -
tamilhollywoodreviews.com/2020/07/amelie…
Apr 11, 2022 10 tweets 10 min read
5 நிமிடத்தில் Free Blog ரெடி பண்ணுவது எப்படி ?

ரொம்ப நாளைக்கு முன்னாடி ரிவ்யூ எழுதுறவங்க Blog லயும் போடுங்கனு சொன்னேன். அத பத்தி த்ரெட் போட சொன்னாங்க. இப்ப தான் ஞாபகம் வந்தது. அதுக்கான த்ரெட் தான் இது.

ரொம்பவே சிம்பிள்..அதுவும் Free Free Free 😁😁 1. Blogger னு Google ல சர்ச் பண்ணி Google account வச்சு லாகின் பண்ணி "Create New Blog " லிங்க் க்ளிக் பண்ணா கீழ் உள்ள பேஜ் வரும்.

இதுல உங்கள் Blog க்கான தலைப்பை தேர்ந்தெடுங்கள்.
Apr 7, 2022 6 tweets 8 min read
One Cut Of the Dead - 2017

இது ஒரு ஜப்பானிய low budget ஜாம்பி ஹாரர் + காமெடி படம்

IMDb 7.6
#Tamil dub ❌
#OTT

ஜாம்பி பட ஷீட்டிங் எடுக்க பாழடைந்த பங்களாக்கு போகும் குரூப் உண்மையான ஜாம்பிகள்கிட்ட சிக்குற கதை.

என்னடா பழைய கதையா இருக்குனு நினைக்காம பாருங்க செம படம்+ ட்விஸ்ட் பாழடைந்த பில்டிங்கு சூட்டிங் போறாங்க ஒரு குரூப். அங்க போனப்பறம் தான் தெரியுது அது மனிதர்களை வச்சு கொடூரமான ஆராய்ச்சி பண்ணிய பழைய கட்டடம் என்று .

கூட வந்த குழுவில் உள்ளவர்கள் ஒவ்வொருத்தராக ஜாம்பியாக மாற கடைசியில் ஹீரோயின் தப்பிப்பது தான் படம்.
Apr 6, 2022 8 tweets 9 min read
2001: A Space Odyssey - 1968

பிரபல இயக்குநர் Stanley Kubrick இயக்கத்தில் 1968 ல் வெளிவந்த ஒரு Sci Fi , Adventure படம் இது.

படத்தோட தரமான மேக்கிங்காகவே படத்தை பார்க்கலாம்.

#IMDb 8.3
#Tamil dub ❌
OTT ❌

#imdb 91 of Top 250 movies

படத்தின் கதை மூன்று லேயர்களாக உள்ளது. படம் ஆப்பிரிக்காவில் ஒரு வறண்ட பிரதேசத்தில் ஆரம்பிக்கிறது. அங்குள்ள மனித குரங்குகள் கூட்டத்தின் வாழ்க்கையை காட்டுகிறது. அங்கு திடீரென ஒரு கருப்பு பலகை மண்ணுக்குள் இருந்து வருது. அதை இந்த குரங்கு கூட்டம் ஆச்சர்யமாக தொட்டுப் பார்க்கிறது.
Mar 15, 2022 10 tweets 9 min read
Black Sea - 2014

இது ஒரு பிரிட்டிஷ் திரைப்படம் . இது ஒரு வகையில் Heist படம் தான். என்ன இதில் கொஞ்சம் வித்தியாசமாக உலகப்போர் சமயத்தில் மூழ்கிப் போன ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பலில் உள்ள தங்க கட்டிகளை கொள்ளை அடிக்க செல்கின்றனர்.

IMDb 6.4
Available @PrimeVideoIN
#Tamil dub ❌ முன்னாள் நீர்மூழ்கிக் கப்பல் கேப்டனான படத்தின் ஹீரோ Robinson ( Jude Law) ஒரு தனியார் கம்பெனியில் நீர்மூழ்கிக் கப்பலில் வேலை பார்த்து வருகிறார். சமீபத்தில் விவாகரத்து ஆகி மகனும் அவருடன் இல்லாததால் தனிமையில் வசித்து வருகிறார்.