படம் பார்த்து முடித்த பின் ஒன்னுமே புரியல. முக்கியமான கேள்வி யாருதான்டா இதுல பேய்.
அப்ப Quora la விளையாட்டா கீழ உள்ள கேள்வியை கேட்டேன். அதுக்கு ஒரு நண்பர் கொடுத்த ரிப்ளேயை கீழே காப்பி பேஸ்ட் செய்துள்ளேன்.
படம் பார்த்தவர்களுக்கான போஸ்ட் இது. படம் பார்த்து விட்டு புரியல என்பவர்கள் மேலே படியுங்கள்.
கொரிய இயக்குனர்களின் திறமைக்கு இது ஒரு சாம்பிள்.
சமீபத்தில் கொரியன் திரைப்படமான தி வெய்லிங் (The Wailing) பார்த்தேன், ஆனால் கடைசியில் யார் பேய் என்று தெளிவாக தெரியவில்லை. யாராவது விளக்கம் தர முடியுமா?
கொரியன் திரைப்படங்களில் தி வெய்லிங் சற்று வித்தியாசமான திரைப்படமே…மூன்று ஜெனரை மிக்ஸ் செய்து ஒரு படம் எடுத்திருப்பார்கள்,
இதனால் புதுமையாகவும் வித்தியாசமாகவும் இருக்கும்.
இயக்குநர் Na Hong-jin எடுத்த மூன்றாவது படம் The Wailing, அவர் எடுத்த The Chaser, The Yellow படங்களும் அருமையாக இருக்கும்.
சரி படத்திற்கு வருவோம்…
ஒரு கிராமத்தில் தொடர்ந்து நடக்கும் மர்மமான உயிரிழப்புகள், கொடிய கிருமி மூலம்
தாக்கப்பட்டடு, ஒருவரால் குடும்பத்தில் அனைவரும் தாக்கப்பட்டு உயிரிழப்பார்கள். இதனை கண்டறியும் கதாநாயகன் போலிஸ், அவரின் மகளும் பாதிக்கப்பட்டு குடும்ப நபர்களை கொன்று விடுவார், அத்துடம் படம் முடியும்.
இதற்கெல்லாம் யார் தான் காரணம் என்று ஆராய்வது தான் படம்,
மூன்று முக்கிய கதாபாத்திரங்கள்
மர்மமான ஜப்பானியர்.
ஜப்பானிலிருந்து ஒரு நபர் கிராமத்திற்கு வந்த பின்னர் தான் இந்த கொலையெல்லாம் நடக்குது என்று அவரை பற்றி ஆராய்வார்கள்
மர்மமான பெண்
பெயர் தெரியாத இந்த பெண் அவ்வப்போது தோன்றி போலிஸிடம் சில கூறிவிட்டு செல்வார்
பேய் ஓட்டும் ஷாமன்
போலிஸின் மகளை காப்பாற்ற சில விசேஷ பூஜைகளை செய்யும் நபர். இவர் அந்த மர்மமான பெண்தான் எல்லா உயிரிழப்பிற்கும் காரணம் என சொல்வார். அவள் ஒரு பேய் என சொல்வார்.
இந்த மூன்று பேரில் யார் பேய் எனக் கண்டறிவது ஆடியன்ஸ் ஜாப்..
உண்மையில் யார் பேய்? என்ன கதை?
மர்மமான ஜப்பானியர்தான் பேய், அவரை கட்டுப்படுத்தி/செயல்படுத்தி பணம் சம்பாதிப்பவர் அந்த ஷாமன். இவர்கள் இருவரும் இணைந்து செயல்படுகிறார்கள். மர்மமான பெண் ஒரு தூய ஆவி அதாவது கடவுளுக்கு நிகரானவர். இதனை தடுக்கவே அவள் முயற்சிக்கிறார் போலிஸுக்கு உதவுகிறார்
இதனை மறைமுகமாக கூறும் விடயங்கள்.
-1-
ஆரம்ப காட்சி
அழுகிய நிலையில் பூ தொங்கும்..இதனை கிளைமாக்ஸ் காட்சியிலும் காணலாம்(3 rd Picture)
இந்த பூக்களை கட்டி விடுவது தான் அந்த மர்மமான பெண்ணின் வேலை. இந்த பூக்கள் அழுகி விட்டால் அந்த குடும்பத்தில் அனைவரும் இறந்து விட்டதாக அர்த்தம்.
-2-
புகைப்படங்கள்
ஆரம்பத்தில் போலிஸ் ஜப்பானியர் வீட்டில் சோதனை செய்யும்போது இறந்தவர்களின் புகைப்படம் கிடைக்கும், இதனால் மர்ம கொலைக்கும் காரணம் ஜப்பானியர் என கூறுவார்.
ஷாமன் கிளைமாக்ஸ் ல் போலிஸ் வீட்டில் புகைப்படத்தை எடுத்து விட்டு கிளம்பும்போது தற்செயலாக சில புகைப்படங்கள் கீழே விழும்,அதில் ஜாப் எடுத்த பழைய புகைப்படங்கள் இருக்கும். அழிந்து விட்டதாக கூறிய அந்த புகைப்படங்கள் ஷாமனிடம் இருக்க காரணம். ஜப்பானியரும் ஷாமனும் இணைந்து செயல்படுவதால் தான்
3.கனவுகள்
போலிஸாக வரும் கதாநாயகனுக்கு அவ்வப்போது சில கொடூரமான கனவுகள் வரும். அதில் வரும் ஜப்பானியர் கோமனம் கட்டியிருப்பார்.ஷாமன் பூஜைக்கு முன்னர் உடை மாற்றும்போது அவரும் கோமனம் கட்டியிருப்பார். இது அவர்கள் இருவரும் ஒரே கொள்கையை மற்றும் சேர்ந்து செயல்படுகிறார்கள் என்பதை உணர்த்தும்
4.ஷாமன் பூஜை செய்யும் காட்சி மற்றும் ஹாஸ்பிடலில் போலிஸ் மகள் அழும் காட்சியை சற்று கவனித்து பார்த்தால் தெரியும். ஷாமன் கட்டுப்பாட்டில் தான் ஜப்பானியர் செயல்படுகிறார் என்பதனை உணரலாம்.
5.வசனங்கள்
மர்மமான பெண்ணாக வருபவர் பேசும் வசனங்கள் பைபிள் மற்றும் புத்தர் பேசியவற்றை கூறுவார். இது அவள் பேய் இல்லை, கடவுளுக்கு நிகரான தூய ஆவி என்பதனை குறிக்கும்.
6.ஆடைகள்
ஆடைகளின் வண்ணத்திலும் (கருப்பு மற்றும் வெள்ளை) நல்லவர், கெட்டவர் என்பதனை கண்டறியலாம்.
இப்பொழுது குழப்பம் தீர்ந்திருக்கும் என நம்புகிறேன்.
ஸ்ரீவில்லிபுத்தூர் என்றாலே பால்கோவா என்ற ஒரு பெயர் உள்ளது.
சொல்லப்போனால் இந்த பால்கோவா மற்ற அனைத்தையும் மறைத்து விட்டது எனலாம்.
இதை மாற்றும் விதமாக மற்ற திண்பண்டங்கள் மற்றும் ஹோட்டல்களை பற்றிய பதிவு இது 🏃🏃
கொஞ்சம் நீளமான பதிவு....
மதுரையில் இருந்து வரும் போது ராமகிருஷ்ணாபுரம் பஸ் ஸ்டாப்பில் இறங்கினால் எதிர்ப் பக்கம் "சுந்தரம் கடை" (ஆனால் ஃபோர்டு இருக்காது) அங்க
மெதுவடை , காரா வடை, இனிப்பு அப்பம் தரமா இருக்கும்.
அப்படியே முன்னாடி வந்தா "மகாலட்சுமி ஸ்வீட்ஸ்" .
இங்கு அல்வா, பால்கோவா, பால் அல்வா, கேரட் அல்வா என அனைத்தும் ப்ரஷ்ஷா கிடைக்கும். இதைவிட இவனுக ஸ்பெஷல் என்ன வென்றால் ஏதாவது ஒரு அல்வா எக்ஸ்பெரிமென்ட் பண்ணிட்டே இருப்பாங்க. இளநீர் அல்வா, கருப்பட்டி அல்வா, நொங்கு அல்வா, மாதுளை அல்வா, பூசணி அல்வா etc., என சீசனுக்கு ஏற்ற மாதிரி.
நேத்து டிரெயின்ல ஒருத்தர் கூட வந்தாரு 45 - 50 வயது இருக்கும். துரைப்பாக்கம் போகனும் அப்படினு சொன்னார்
என் கூட வாங்க பஸ் ஏத்தி விடுறேனு சொன்னேன். வந்தவரு திடீர்னு நான் ஆட்டோல போறேன்னு சொன்னாரு. வேண்டாம்யா அவனுக அமௌன்ட் கூட கேப்பானுக நேரா பஸ் இருக்கு அதுல போனு சொன்னாலும்
கேட்குற மாதிரி இல்ல. நீங்க பேசி கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க அப்படினு சொன்னார். இவனுக கிட்ட எல்லாம் பேரம் பேச பிடிக்காம தான் நானே பஸ்ல போறேன் வேணும்னா நீங்களே பேசிக்கோங்கனு அனுப்பி விட்டேன்.
போறப்பவே ஒரு ஆட்டோ ஓட்டுநர் வந்து வழிய மறுச்சுட்டார்.. நான் மெதுவாக நடந்து போய்ட்டு
இருந்தேன். 2 நிமிஷம் கழிச்சு திரும்பி பார்த்தா அவரு வேக வேகமா நடந்து வந்துட்டு இருந்தாரு.
என்னிடம் வந்து பஸ் எங்க சார் நிக்கும் என்றார். ஆட்டோல போலயா என்றேன். அவரு 850 ரூபாய் கேட்குறாரு, 700 ரூபாய்க்கு வருவாராம் என்றார்.
இத படிச்சுட்டு போய் காசு தொலைச்சாலும் அளவோட தொலைக்கலாம்..ஏதோ கத்துக்கிட்டோம்னு திருப்தி இருக்கும்.. அத சரி பண்ண வாய்ப்பு இருக்கு.
It's not day trading recommendation post ☺️ just for awareness and learning.
முக்கியமான விஷயம் நான் ட்ரேடிங் விட்டு வெளிய வந்து 2 வருஷத்துக்கு மேல ஆச்சு. இப்ப முதலீடு பண்றதோட சரி
ட்ரேட் பண்ண சமயத்தில் பெருத்த நஷ்டம் இல்ல அது போல பெரிய லாபமும் சம்பாதிக்கவில்லை. போதுமான நேரம் ஒதுக்க முடியவில்லை மற்றும் வேலை பார்த்துக்கொண்டு ட்ரேடிங் செய்வது ரொம்பவே கஷ்டம்.
நேரடியா இன்வெஸ்ட்மென்ட்ல இறங்க கூடாது. முதலில் கொஞ்சம் அடிப்படைகளை படித்து தெரிந்து கொள்ளுங்கள். மார்க்கெட், Stock market, பொருளாதாரம் என அடிப்படைகளை படிங்க.
இந்த பேரை பெரும்பாலும் கேள்விப்பட்டு இருப்பீர்கள். அப்படி இல்லனா Pyramid Scheme, MLM Scheme னு ஏதாச்சும் ஒரு பேருல சுத்திக்கிட்டு இருக்கும்.
இந்த Ponzi அப்படினு எப்படி பேர் வந்துச்சு ?
இது இன்னிக்கு நேத்து ஆரம்பித்தது இல்லை.1869 களிலேயே ஜெர்மனியில் இந்த மாதிரி ஸ்கீம் நடத்தி
ஏமாத்துனாதா ரெக்கார்ட்ஸ் இருக்கு.
1920 களில் இத்தாலியை சேர்ந்த Charles Ponzi னு ஒருத்தர் தான் அமெரிக்காவில் பக்காவா ப்ளான் பண்ணி லம்ப்பா காச அடிச்சு மாட்டிக்கிட்டான். அவரோட ஞாபகார்த்தமாக தான் Ponzi Scheme னு செல்லமாக அழைக்கப்படுகிறது.