#கல்வி - 20
தனித்துவம் வாய்ந்த படிப்புகள்
துணை மருத்துவ படிப்புகள்
(Paramedical Courses)
கீழ்கண்ட துணை மருத்துவ படிப்புகள் அதிக வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன.
1.மெடிக்கல் ரேடியாலஜி டெக்னாலஜி
( Medical Radiology Technology)
2. ஆப்தொமெட்ரி (Optometry)
#ஒன்றியஉயிரினங்கள்
3.ஆபரேஷன் தியேட்டர் டெக்னாலஜி
(Operation Theatre Technology)
சற்று விரிவாக பார்ப்போம்
1.மெடிக்கல் ரேடியாலஜி டெக்னாலஜி
( Medical Radiology Technology)
இது கதிரியக்க தொழில்நுட்பத்தை பற்றி படிக்கும் படிப்பாகும். மனித உடல் உறுப்புகளின் அமைப்புகள் மற்றும் அதன் செயல்நிலை எவ்வாறு
உள்ளது என்பதை அறிந்து கொள்ள இந்த படிப்பு உதவுகிறது.இதில், தேர்ச்சி பெற்றவர்கள் ‘ரேடியாலஜிஸ்ட்’ என்று அழைக்கப்படுவர்.
ரேடியாலஜி படிப்பில் எக்ஸ்ரே,
சி.டி.ஸ்கேன்,
எம்.ஆர்.ஐ. தொழில்நுட்பம் போன்றவற்றை பயன்படுத்தவும் மற்றும் பரிசோதனை செய்யும் முறைகள் பற்றியும் கற்பிக்கப்படுகிறது.
மருத்துவமனைகளில் கதிர்வீச்சினை(எக்ஸ்ரே) மனித உடம்புக்குள் செலுத்தி, குறிப்பிட்ட உறுப்புக்களை படம் எடுத்து, நோய்களை கண்டறிவதும் மற்றும் காயங்கள் அல்லது எலும்பு முறிவுகளை அளவிடுவதும் ரேடியாலஜிஸ்ட்களின் பணியாகும். இதில் கீழ்கண்ட நான்கு ஆண்டுகள் பட்ட படிப்பு இரண்டும்,
இரண்டு ஆண்டுகள் டிப்ளமோ படிப்புகள் இரண்டும் உள்ளன.
1. B.Sc : Radiology & Imaging Technology
2. B.Sc : Radio Therapy Technology
3. DRDT : Diploma in Radio Diagnosis Technology
4. DRTT : Diploma in Radio Therapy Technology
2. ஆப்தொமெட்ரி - Optometry
கண்களின் அமைப்பு மற்றும் அதன் செயல்பாடுகளை பற்றி படிக்கும் படிப்பு ஆப்தொமெட்ரி எனப்படும். பார்வை குறைபாடு தொடர்பான பரிசோதனைகள், கண் நோய்களை கண்டறியம் முறைகள், கண் சிகிச்சை முறைகள் பற்றி இப்படிப்பில் கற்றுதரப்படுகிறது.
மருத்துவமனைகளில் பார்வை தொடர்பாக ஏற்படும் பிரச்சினைகளை கண்டறிந்து கிட்டப் பார்வை அல்லது தூரப் பார்வை உடையவர்கள் என்ன மாதிரியான கண்ணாடிகளை அணிய வேண்டும் என்பது போன்ற கண் தொடர்பான கோளாறுகளுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பதற்கு முன் தேவையான பரிசோதனைகளை செய்து,
அதற்கேற்ற சிகிச்சை குறிப்புகளை வழங்குபவர்கள் ‘ஆப்தொமெட்ரிஸ்ட்’ஆவர்.
மருத்துவமனைகளில் கண் மருத்துவர்களுக்கு உதவியாளர்களாக இவர்கள் செயல்படுவர். இதில் கீழ்கண்ட நான்கு ஆண்டுகள் பட்ட படிப்பு ஒன்றும்,
இரண்டு ஆண்டுகள் டிப்ளமோ படிப்பு ஒன்றும் உள்ளன.
1. B.Optom : Optometry
3. DRDT : Diploma in Optometry
3 .ஆபரேஷன் தியேட்டர் டெக்னாலஜி (Operation Theatre Technology)
இது மருத்துவ அறுவை சிகிச்சை அறையில் தேவைப்படும் மருத்துவ உபகரணங்களை கையாளுதல் பற்றிய படிப்பாகும். அறுவை சிகிச்சையின் போது மருத்துவருடன் இணைந்து தேவையான உதவிகளை செய்வது, அறுவை சிகிச்சைக்கு முன் அறுவை சிகிச்சை
அறை மற்றும் தேவைப்படும் கருவிகளை தயார்படுத்தி வைப்பது என பல்வேறு வேலைகளை ஆபரேஷன் தியேட்டர் டெக்னீஷியன்ஸ் மேற்கொள்கின்றனர்.
பெரிய மருத்துவமனைகள் மற்றும் ஆபரேஷன் தியேட்டர்களில் இவர்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளது. இதில் கீழ்கண்ட நான்கு ஆண்டுகள் பட்ட படிப்பு ஒன்றும்,
ஓராண்டு சான்றிதழ் படிப்பு ஒன்றும் உள்ளன.
1. B.Sc : Operation Theatre & Anesthesia Technology
2. Theatre Technician
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.