டேனியப்பா Profile picture
ஒன்றாய் வாழ்வோம். உரையாடுவோம். ஓரிதயம் கொண்டிருப்போம்.! -ரிக்

Dec 27, 2021, 12 tweets

1. ஆரம்பத்திலேயே சொல்லி விடுகிறேன் இது இந்தப் படத்திற்கான விமர்சனம் அல்ல.

ஒரு மனிதன் மற்றொரு நபரை கொலை செய்து விட்டால் கொலையுண்ட நபரின் வருமானம் குடும்ப சூழலை கணக்கிட்டு 'இரத்த பணம்' (பிளட் மணி) கொலை செய்த நபரிடமிருந்து வசூலிக்கப்படும். கொலை செய்யப்பட்டவரின் வாரிசுகள் மன்னித்து

2. விட்டால் கொலை செய்தவர் தண்டனையிலிருந்தும் விலக்களிக்கப் படுவார். சில சமயம் இந்தப் பணத்தை அவர்கள் மறுத்து விடுவதும் உண்டு.

இந்தக் கருவை மையமாகக் கொண்டு வந்திருக்கும் படம்தான் இந்த ப்ளட் மணி.

ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சகோதரர்கள் துபாயில் செய்யாத கொலைக்கு தண்டனையாக மாட்டிக்

3.கொள்கிறார்கள். இரத்த பணம் 30லட்சம் கொடுத்திருந்தும் தூக்கில் போட நேரம் குறிக்கப்படுகிறது. அவர்கள் விடுதலையாகி விடுவார்கள் என நம்பியிருக்கும் குடும்பம் விஷயம் தெரிந்து உதவிக்காக அழுகையில், அதைக்காணும் ஒரு தொலைக்காட்சி செய்தியாளர் அதற்கு எப்படி உதவ முயற்சிக்கிறார். அந்த ஒருநாளில்

4. அவர் ஜெயித்தாரா இல்லையா என்பதுதான் கதை.

ஒரு செய்திச் சானலுக்குள் இருக்கும் அரசியல், ஒரு செய்தியை பரபரப்பாக்க அவர்கள் செய்யும் வேலைகள், அதனால் சானலுக்கு நிகழும் லாப நஷ்டங்களை ஒரு பக்கம் பேசியபடியே, வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் கஷ்டம், அவர்கள் அங்கே மாட்டிக் கொண்டால் அந்தக்

5. குடும்பம் இங்கே என்ன கஷ்டப்படும், அவர்களைக் காப்பாற்ற இந்திய அரசு சாதாரணமாய் என்ன செய்யும், அவசரத்தில் எப்படி வேலை செய்யும் என்பதைச் சொல்லும் அதே சமயம், இலங்கைத் தமிழர்கள் வலி, இந்து முஸ்லிம் ஒற்றுமை என பல விஷயங்களை ஒன்றரை மணிநேரத்தில் பேசி விடுகிறது படம்.

படம் ஆரம்பித்த சில

6. நிமிடங்களிலேயே கதைக்கு வந்துவிடுவதால் போரடிக்கவில்லை. படம் முடியும் வரை அந்த சுவை அப்படியே இருப்பது நம்ப முடியாத கதையையும் சுவாரசியமாய் பார்க்க வைத்துவிடுகிறது.

படத்தின் நாயகி பிரியா பவானிசங்கரும் மற்ற எல்லோருமே கொடுத்த பாத்திரத்துக்கு சிறப்பாய் செய்திருந்தார்கள் என்றாலும்,

7. தண்டனை பெற்றவரின் மகளாய் நடித்திருந்த அந்தக் குட்டிப் பெண் அற்புதம்.

ஒரு ஓடிடி ரிலீஸ் படத்திற்கு என்ன வேண்டுமோ அதை ட்விஸ்ட் & டர்ன்களோடு சிறப்பாகவே அளித்திருக்கிறார் டைரக்டர் இயக்குநர் சர்ஜுன் கே.எம். இவர் ‘லக்‌ஷ்மி’, ‘மா’ உள்ளிட்ட குறும்படங்களின் மூலம் ஏறகனவே பிரபலமாகி,

8.நயன்தாரா நடித்த ‘ஐரா’ படத்தை இயக்கியிருக்கிறார்.

ஆனால் நான் சொல்ல வந்தது இதே கருணைக் கடிதத்தை கருவாய் வைத்து 2004-ல் வந்த 'பெருமழக்காலம்' மலையாளப் படம் பற்றி.

கேரளாவின் கோழிக்கோட்டில், பாலக்காட்டில் வசிக்கும் இரு பெண்களின் கணவன்மார்களில் ஒருவன் கொலை செய்யப்படுகிறான்.

9.இன்னொருவன் குற்றவாளியாகிறான். அந்த இரு குடும்பங்களும் அதன் பிறகு எப்படி நிலைகுலைகிறது, ஒருத்தி விதவையாக இன்னொருத்தி எவ்வளவு அவமானங்களை சுமக்கிறாள் என்பதையும், உறவுகளே பலமாகவும் சுமையாகவும் எப்படி மாறும் என்பதையும் அற்புதமாக காட்டியிருப்பார்கள். இதில் பாலக்காட்டில் தமிழ்ப்

10. பிராமணக் குடும்பத்துப் பெண்ணிடம், கோழிக்கோட்டில் மலையாள முஸ்லிம் குடும்பத்துப் பெண் தன் கணவனைக் காக்க மன்னிப்புக் கடிதம் கேட்டுப் போராடுவாள். கணவனை இழந்த ஒருத்தியிடம், அவனைக் கொன்ற தன் கணவனைக் காப்பாற்ற கையெழுத்து வேண்டி நிற்கும் அவலத்தை என்னவென்று சொல்வது.?

ஒரு அளவான மழை

11. என்பது எல்லோருக்கும் சுகமானதுதான். ஆனால் பெருமழை என்பது அப்படியில்லை. அது மிகப்பெரும் சேதாரங்களை விளைவிக்கும். அப்படி கருணையும் பெருமழையாய் பெய்யும்போது அது என்ன சேதாரங்களை விளைவிக்கும் என்பதை படம் மிக அற்புதமாய் சொல்லியிருக்கும். காவ்யா மாதவன், மீரா ஜாஸ்மின் இருவரும் நடித்து

12. இயக்குநர் கமல் இயக்கத்தில் வந்த இந்தப் படம் பேசும் மனிதம் இன்னும் ஒரு அற்புதம்.

என்னைப் பொறுத்தவரை ரே படங்களுக்கு கொஞ்சமும் குறைவில்லாத இந்தப் படத்தையும் நீங்கள் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

❤️

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling