அன்பெழில் Profile picture
நம்புவதை பகிர்ந்து நன்மை செய்வோம்.

Jan 2, 2022, 10 tweets

இன்று #ஹனுமத்ஜெயந்தி
மேலான குணங்கள் அனைத்திற்கும் உதாரணமாக இருக்கும் ஸ்ரீ ஆஞ்சநேயர் பிறந்தது மார்கழி மாதம் மூலம் நட்சத்திர தினம். இத்தினத்தில் அனுமனை வழிபடுவதால் ஏற்படும் பலன்கள் ஏராளம். ஸ்ரீ ஆஞ்சநேயர் வானர குல வேந்தரான கேசரி மற்றும் அஞ்சனா தேவிக்கு மைந்தனாக அவதரித்தார். அவர்

சிவபெருமானின் அம்சமானவர். தன் இளம் வயதிலிருந்தே அனைத்து வகையான கலைகளை கற்றுத் தேர்ந்தவர். அவருக்கு சுந்தரன் என்கிற பெயரும் உண்டு. அதனால் தான் இராமாயணத்தில் மிக விசேஷமான பகுதியான அனுமன் சீதையைத் தேடிக் கண்டுபிடித்து சீதை இருக்கும் இடத்தை இராமபிரானிடம் வந்து கூறும் படலத்துக்கு

சுந்தரக் காண்டம் என்று பெயர். பிரம்மச்சர்யத்திற்கு உதாரண புருஷராக, முதலமானவராக இருப்பது ஸ்ரீ ஆஞ்சநேயர் தான். அனுமனை முதன் முதலாக ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி சந்தித்த போதே அனுமனின் பிரதிபலன் கருதா பக்தி, சிறந்த ஞானம், சிங்கத்தை ஒத்த தைரியம் ஆகியவற்றை கண்டு ஸ்ரீ ராமர் கண்டு கொண்டார்.

அனுமனின் பக்திக்கு தான் அடிமை என்பதை புரிந்து கொண்டார். ராம நாமத்தை நாம் ஜபிக்க ஜபிக்க இராமனை விட அனுமன் அதிக மகிழ்ச்சி கொள்கிறார். எல்லா நலன்களையும் இவ்வுலகத்திலும் அவ்வுலகத்திலும் தர வல்லது ராம நாமம். அதை அவர் இடைவிடாது ஜபித்து வருகிறார். அந்த ராம நாமத்தின் பலத்தினால் சேதுக்

கரையில் இருந்து வானர சேனைகள் இலங்கையை அடைய கடலில் பாலத்தைக் கட்டினார். இறவா வரம் பெற்ற சிரஞ்சீவிகளில் ஆஞ்சநேயரும் ஒருவர். இன்றும் இமய மலையில் அருவமாக ராமதியானத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயர் ஈடுபட்டிருக்கிறார். மகத்தான சக்தி கொண்ட ஆஞ்சநேயரின் அவதார தினமான மார்கழி மூல நட்சத்திர தினத்தில்

அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு, உணவு நீர் ஏதும் அருந்தாமல் அருகிலுள்ள ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று வழிபட்டு ஸ்ரீ ராமர் மற்றும் ஆஞ்சநேயரின் மந்திரங்கள் துதித்த வாரே, ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றுவதற்கு வடைகள் தயாரிக்கலாம் அல்லது வெற்றிலை மாலை சாற்ற வெற்றிலைகளை

கோர்க்கலாம். மாலையில் ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று ஆஞ்சநேயருக்கு நாம் தயாரித்த வடை, வெற்றிலை மலைகளை சாற்றி வழிபடலாம். இந்த முறையில் ஆஞ்சநேயரை வழிபடுவதால் வாழ்வில் ஏற்படும் துக்கங்கள், கஷ்டங்கள் நீங்கும். பீடைகள் ஒழியும். கிரக தோஷம் குறிப்பாக சனி கிரக தோஷங்கள் நீங்கும். துஷ்ட

சக்திகள், செய்வினை மாந்திரீக பாதிப்புகள் நீங்கும். தொழில், வியாபார முடக்க நிலை நீங்கி நல்ல லாபங்கள் கிடைக்கும். திருமண பாக்கியம், குழந்தை பேறு மற்றும் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி போன்ற நன்மைகள் ஸ்ரீ ஆஞ்சநேய மூர்த்தியின் அருளால் பெறலாம். இன்று முடிந்த அளவு ராம நாமத்தை ஜபிப்போம்.

ஶ்ரீராமசந்திர மூர்த்திக்கு ஜெய். ஜெய் ஶ்ரீ ஹனுமான்!
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling