அன்பெழில் Profile picture
நம்புவதை பகிர்ந்து நன்மை செய்வோம்.

Jan 8, 2022, 9 tweets

#சுசீந்திரம் #தாணுமாலய_சுவாமி
கன்னியாகுமரி மாவட்டத்தில் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் (தாணு= சிவன், மால்= திருமால், அயன்= பிரம்மா) மும்மூர்த்திகளும் இணைந்து ஒரே வடிவமாக தத்தாதிரேயராக கொன்றை மரத்தடியில் அருள்பாலிக்கின்றனர். அத்திரி மகரிஷியின் மனைவி அனசூயயை சோதிக்க வந்த

அவர்களை தன் கற்பின் திறத்தால் குழந்தைகளாக்கி, கொன்றை மரத்தில் தொட்டில் கட்டி ஆட்டினாளாம் அனசூயை. (அத்தரி மகரிஷி, அனுசுயா ஆகியோர் வாழ்ந்த இடம் இதையடுத்து உள்ளது. இவ்வூர் இன்றும் #ஆசிரமம் என்ற பெயரிலேயே வழங்கப்படுகிறது.) இதனால் தத்தாத்ரேயர் அத்திரி மகரிஷி அனுசுயாவின் புதல்வனாகக்

கருதப்படுகிறார். தத்தாத்ரேயரை வணங்கி அனைத்து நலன்களையும் பெறுவோம்.
#தத்தாத்ரேயர் #ஸ்லோகம்.
மாலகமண்டலு தர கரபத்மயுக்மே
மத்யஸ்த பாணியுகளே டமருத்ரிசூலம்!
அத்யஸ்த ஊர்த்வ கரயோ: சுப சங்கசக்ரே
வந்தே தமத்ரிவரதம் புஜ ஷட்க யுக்தம் ||
மாலையையும், கமண்டலத்தையும் இரு கைகளிலும், உடுக்கை

மற்றும் ஈட்டியை இரு கைகளிலும், சங்கு சக்கரத்தை மேலே உள்ள இரு கைகளிலும் தாங்கியுள்ள ஆறு கைகளையுடைய அத்ரி குமாரனான தத்தாத்ரேயப் பெருமானை நான் தியானிக்கிறேன்.

அகலிகை காரணமாகச் கௌதம முனிவரிடம் சாபம் பெற்ற இந்திரன் இங்கு வந்து மும்மூர்த்திகளையும் வழிபட்டு சுத்தமடைந்தத் தலமாதலால்

இத்தலம் சுசீந்திரம் என்னும் பெயர் பெற்றது. இன்றளவும் இரவில் மனிதர்கள் கண்களுக்குத் தெரியாமல் இந்திரன் இங்கு வந்து பூஜை செய்வதாக ஐதீகம். அதனால் தான் இன்றும் அங்கே கருவறையில் பூஜை செய்யும் அர்ச்சகர்கள் "அகம் கண்டதைப் புறம் சொல்ல மாட்டேன்" என்று இறைவனின் முன் சத்தியம் செய்துவிட்டு

பூஜையை செய்ய ஆரம்பிப்பது வழக்கமாக உள்ளது. அதாவது இரவில் எந்த குருக்கள் எவ்விதத்தில் பூஜை செய்து வைத்திருக்கிறாரோ, மறுநாள் காலையில் வேறு விதமாக இருக்கும் என்பதால் அங்கே எந்த விதத்தில் தான் செய்து வைத்திருந்தேன் என்னென்ன பொருட்களை எங்கே வைத்திருந்தேன், அது எவ்வாறு மாறியது என்பதை

ஒருவருக்கு ஒருவர் பேசித் தகவலைப் பரிமாறிக் கொள்ளக் கூடாது என்பதற்காக இந்த சத்தியத்தை செய்து கடைப் பிடிக்கின்றனர். இந்திரனின் சாபம் தீர்த்த மிகவும் சக்திவாய்ந்தப் புனிதத்தலம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி ஆலயம்.

இங்கு உள்ள தூணில் பெண் உருவில் விநாயகர் காட்சித் தருகிறார். இங்கே

பெண் வடிவிலுள்ள பிள்ளையாரை விக்னேசுவரி, விநாயகி, கணேசினி, கணேஸ்வரி எனப் பெயர்களில் வழிபடுகின்றனர். இவர் பெண் அணியும் நகைகளுடன் ஒரு காலை ஊன்றி, மறுகாலை மடக்கி, புடவையோடு அற்புதமாகப் பெண் வடிவில் காட்சி தருகிறார். புதிதாகத் திருமணமான தம்பதியர் அவசியம் வந்து வழிபட வேண்டிய கோயிலிது.

நம் நாட்டில் உள்ள பழமையான கோவில்களின் தல வரலாற்றினை அறிந்து கொள்வோம். ஒவ்வொன்றும் ஆன்மீக பெட்டகம். தெய்வநம்பிக்கை, சமய நம்பிக்கை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு கோயில் வழிபாடு, பூஜை, விழாக்கள், விரதங்கள் என்பவற்றின் பயனையும் நாம் இதன் மூலம் தெரிந்து கொண்டு பயனடையலாம்.
ஓம் ஓம் ஓம்

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling