பைந்தமிழ் படையாட்சியார்▪️ Profile picture
யாமார்க்குங் குடியல்லோம் யாது மஞ்சோம்... #சிவபோற்றி #தமிழிலக்கியம் #தமிழர்வரலாறு #தமிழர்மெய்யியல் #தனித்தமிழ் ❤️

Jan 8, 2022, 8 tweets

★தமிழில் என்ன உள்ளது என்று கேட்பவர்களின் பார்வைக்கும்..
★சமய மெய்யியலில் என்ன உள்ளது என்று கேட்பவர்களின் பார்வைக்கும்...

⭐ திருவாசகம்

யானை முதலா எறும்பு ஈறாய

ஊனம் இல் யோனியின் உள்வினை பிழைத்தும்

மானிடப் பிறப்பினுள் மாதா உதரத்து

ஈனம் இல் கிருமிச் செருவினில் பிழைத்தும்

மொருமதித் தான்றியினிருமையிற் பிழைத்து

மிருமதி விளைவி னொருமையிற் பிழைத்து

மும்மதி தன்னு னம்மதம் பிழைத்து

மீரிரு திங்களிற் பேரிருள் பிழைத்து

மஞ்சு திங்களின் முஞ்சுதல் பிழைத்து

மாறு திங்களி னூறலர் பிழைத்து

மேழு திங்களிற் றாழ்புவி பிழைத்து

மெட்டுத் திங்களிற் கட்டமும் பிழைத்து

மொன்பதில் வருதரு துன்பமும் பிழைத்துக்

தக்க தசமதி தாயொடு தான்படுங்

துக்க சாகரத் துயரிடைப் பிழைத்து..

#திருவாசகம்
#தமிழ்
#சிவம்

★ பொழிவுரை

யானை முதலாக எறும்பு இறுதியாக குறைவில்லாத கருப்பைகளினின்றும் உள்ள நல்வினையால் தப்பியும்

மனிதப் பிறப்பில் தாயின் வயிற்றில் கருவுறும் பொழுது அதனை அழிப்பதற்கு செய்யும் குறைவில்லாத புழுக்களின் போருக்குத் தப்பியும்

முதல் மாதத்தில் தான்றிக்காய் அளவுள்ள கரு இரண்டாகப் பிளவுபடுவதனின்றும் தப்பியும்

இரண்டாம் மாதத்தில் விளைகின்ற விளைவினால் (கரு வளர்ச்சியடைவதால்) உருக்கெடுவதனின்று தப்பியும்

மூன்றாம் மாதத்தில் தாயின் மதநீர் பெருக்குக் தப்பியும்

நான்காம் மாதத்தில் அம்மதநீர் நிறைவினால் உண்டாகும் பெரிய இருளுக்கு தப்பியும்

ஐந்தாம் மாதத்தில் உயிர் பெறாது இறத்தலின்று தப்பியும்

ஆறாம் மாதத்தில் கருப்பையில் தினவு மிகுதியால் உண்டாகிய துன்பத்தினின்று தப்பியும்

ஏழாவது மாதத்தில் கருப்பை தாங்காமையால் பூமியில் காயாய் விழுவதனின்று தப்பியும்

எட்டாவது மாதத்தில் வளர்ச்சி நெருக்கத்தினால் உண்டாகும் துன்பத்தினின்று தப்பியும்

ஒன்பதாவது மாதத்தில் வெளிப்பட முயல்வதனால் வரும் துன்பத்தினின்று தப்பியும்

குழந்தை வெளிப்படுவதற்கு தகுதியாகிய பத்தாவது மாதத்திலே தாய் படுகின்றதனோடு தான் படுகின்ற கடல் போன்ற துன்பத்தோடும் துயரத்தினின்று தப்பியும்..

வேறு எந்த மொழியிலாவது ஒரு தாயின் வயிற்றில் குழந்தையானது மாதத்திற்குமாதம் ஏற்படும் நிகழ்வுகளையும் பாடுகளையும் உரைக்கிறதா..?
#மாணிக்கவாசகர்

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling