அன்பெழில் Profile picture
நம்புவதை பகிர்ந்து நன்மை செய்வோம்.

Jan 13, 2022, 15 tweets

பூரி ஜெகந்நாதர்
ஜரா என்ற வேடன் எய்த அம்பு பட்டு கிருஷ்ணர் மரணத்தை தழுவினார், பின்னர் அவரது உடல் ஒரு பெரிய மரக்கட்டை போல ஆனது. புரியை ஆண்டு வந்த இந்திரத்துய்மன் எனும் அரசனின் கனவில் கிருஷ்ணன் கூறியவாறு, புரி கடலில் மிதந்து வரும் ஒரு பொருளைக் கொண்டு சிலையை செதுக்குமாறு பெருமாள்

கூறினார். ஒரு அந்த பெரிய மரக்கட்டை கடலில் மிதந்து வந்தது. அரசன் அந்த மரக்கட்டைக்கு பெரிய பூஜைகள் நடத்தி தச்சர்களை அழைத்து பெருமாள் சிலை செய்யும்படி கூறினார். தச்சர்களின் தலைவர் சிலை செய்வதற்காக அந்த மரத்தில் உளியை வைத்தவுடன் உளி உடைந்துவிட்டது. அப்போது அவர் முன்பு பெருமாள் ஒரு

முதிய தச்சனைப் போல வேடமணிந்து தோன்றினார். அரசனிடம் 21 நாட்களில் இந்த வேலையை முடித்து தருவதாகவும், அதுவரை தான் வேலைசெய்யும் அறையை யாரும் திறக்கக் கூடாது என்றும் கூறினார். அதற்கு அரசனும் ஒப்புக்கொண்டார். 15 நாட்கள் அந்த அறையின் உள்ளிருந்து உளிச்சத்தம் கேட்டது. எனவே அரசன் வேலை

மும்முரமாக நடக்கிறது என எண்ணி அந்த அறைப்பக்கம் போகவில்லை. அதையடுத்து மூன்று நாட்கள் சத்தமே இல்லை. இதனால் தச்சர் தூங்கிவிட்டாரோ என எண்ணி, அரசன் அவசரப்பட்டு கதவைத் திறந்து விட்டான். உடனே தச்சர் கோபமடைந்தார். மூன்று நாட்கள் சத்தம் வரவில்லை என்றதும் எனது அறைக்கதவை திறந்துவிட்டாய்.

எனவே இந்தக் கோயிலில் நீ ஸ்தாபிக்கும் சிலைகள் அரைகுறையாகவே இருக்கும். அப்படி இருந்தாலும் பரவாயில்லை. அப்படியே பிரதிஷ்டை செய்துவிடு. இந்த கோயிலுக்கு வருபவர்கள் சிலையைப் பார்த்துவிட்டு பொறுமையை கடைபிடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செல்வார்கள் என்று அருள்பாலித்தார். அந்த அறையில் வேலை

முடியாத நிலையில் ஜெகந்நாதர், பலராமன், சுபத்திரா ஆகியோரின் சிலைகள் இருந்தன. அந்த சிலைகளையே அரசர் பிரதிஷ்டை செய்தார். இந்திரதையுமாவின் காலத்திற்கு பிறகு அவர் கட்டிய பழைய கோயில் பாழடைந்து விட்டது. அதன்பிறகும் அந்த இடத்தில் பல கோயில்கள் கட்டப்பட்டன. அவற்றையும் கடல் மூழ்கடித்துவிட்டது

தற்போதைய கோயில் 1135ல் அரசர் அனந்தவர்மனால் துவக்கப்பட்டு, 1200ம் ஆண்டில் இவரது பேரன் அனங்காபி மாதேவ் என்ற அரசனால் முடிக்கப்பட்டது. இது பாஞ்சராத்திரம் முறைப்படி அமைக்கப்பட்ட ஆலயமாகும். இவ்வாலயத்தின் மேற்கில் எட்டு உலோகக் கலவையால் செய்யப்பட்ட நீலச்சக்கரம் உள்ளது. ஆலயக் கொடிமரம்

ஏழைகளுக்கு அருள்பவன் என்னும் பொருளில் பதீதபவன் பாவனா என்று அழைக்கப்படுகிறது. இவை இரண்டையும் வணங்கினாலே ஜெகந்நாதரின் அருளைப் பூரணமாகப் பெறலாம் என்கிறார்கள். இராமாயணத்தில் இராமபிரானும், மகாபாரத்தில் பாண்டவர்களும் இங்கே வந்து வேண்டிக்கொண்டதாக புராணங்கள் கூறுகிறது. மகாபிரபு ஜகன்னாதர்

(ஸ்ரீ கிருஷ்ணர்) கலியுகத்தின் கடவுள் என்று அழைக்கப்படுகிறார்.ஜெகன்னாதர் சிலை 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றப்படும், அப்போது பூரி நகரம் முழுவதும் விளக்குகள் அணைக்கப்படுகின்றன. பிறகு கோவில் வளாகத்திற்கு சி.ஆர்.பி.எப். பாதுகாப்பு தரப்படுகிறது. யாரும் கோவிலுக்குள் போக முடியாது.

அடர்ந்த இருளில் பூஜாரி கண்மூடி, பழைய சிலையிலிருந்து "பிரம்ம திரவியத்தை" எடுத்து புதிய சிலையில் ஊற்றுகிறார். இந்த பிரம்மப் பொருள் என்னவென்று இன்றுவரை யாருக்கும் தெரியாது, யாரும் பார்த்ததில்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இது ஒரு சிலையிலிருந்து மற்றொரு சிலைக்கு மாற்றப்படுகிறது. இது

இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு பொருள். இந்த பிரம்ம பொருள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருடன் தொடர்புடையது. ஜெகநாதர் மற்றும் பிற சிலைகள் ஒரே சமயத்தில் மாற்றப் படுகின்றன. இன்றும், ஜகந்நாதர் யாத்திரையின் போது, ​​பூரியின் அரசர்தானே தங்க துடைப்பத்துடன் வீதிகளை பெருக்க வருகிறார். ஜெகநாதர் கோவிலின்

சிங்க வாயிலில் இருந்து உள்ளே முதல் அடியை எடுத்து வைத்தவுடன் கடல் அலைகளின் சத்தம் உள்ளே கேட்காது, அதே சமயம் கோயிலில் இருந்து ஒரு அடி எடுத்து வைத்தவுடன் கடலின் சத்தம் கேட்கும். பெரும்பாலான கோவில்களின் உச்சியில் பறவைகள் அமர்ந்து பறப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள், ஆனால் ஜெகநாதர்

கோவிலை எந்த பறவையும் கடந்து செல்லாது, கொடி எப்போதும் காற்றின் எதிர் திசையில் பறக்கிறது. 45 மாடிகள் கொண்ட ஜெகநாதர் கோவிலில் உள்ள கொடியை தினமும் மாற்றுவார்கள், ஒரு நாள் கொடியை மாற்றவில்லை என்றால், 18 ஆண்டுகள் கோவில் மூடப்படும் என்பது நம்பிக்கை! ஜகன்னாதர் கோயிலின் உச்சியில் ஒரு

சுதர்சன சக்கரம் உள்ளது, இது எந்த திசையிலிருந்தும் பார்த்தாலும் ​​​நம்மை நோக்கியபடி தெரியும்! ஜெகநாதர் கோவிலின் சமையலறையில், பிரசாதம் 7 மண் பானைகள் ஒன்றன் மேல் ஒன்றாக வைக்கப்பட்டு, விறகு நெருப்பால் சமைக்கப்படும். ஆச்சரியகரமாக மேல் பாத்திரம் முதலில் சமைக்கப் பட்டிருக்கும். ஜெகநாதர்

கோவிலில் தினமும் செய்யப்படும் பிரசாதம் பக்தர்கள் எண்ணிக்கை எவ்வளவாக இருந்தாலும் குறைவதில்லை. ஆனால் கோவிலின் கதவுகள் மூடப்பட்டவுடன், பிரசாதமும் தீர்ந்துபோய் விடும்.
பூரி ஜகன்னாதருக்கு ஜெய்
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling