அன்பெழில் Profile picture
Jan 13, 2022 15 tweets 4 min read Read on X
பூரி ஜெகந்நாதர்
ஜரா என்ற வேடன் எய்த அம்பு பட்டு கிருஷ்ணர் மரணத்தை தழுவினார், பின்னர் அவரது உடல் ஒரு பெரிய மரக்கட்டை போல ஆனது. புரியை ஆண்டு வந்த இந்திரத்துய்மன் எனும் அரசனின் கனவில் கிருஷ்ணன் கூறியவாறு, புரி கடலில் மிதந்து வரும் ஒரு பொருளைக் கொண்டு சிலையை செதுக்குமாறு பெருமாள்
கூறினார். ஒரு அந்த பெரிய மரக்கட்டை கடலில் மிதந்து வந்தது. அரசன் அந்த மரக்கட்டைக்கு பெரிய பூஜைகள் நடத்தி தச்சர்களை அழைத்து பெருமாள் சிலை செய்யும்படி கூறினார். தச்சர்களின் தலைவர் சிலை செய்வதற்காக அந்த மரத்தில் உளியை வைத்தவுடன் உளி உடைந்துவிட்டது. அப்போது அவர் முன்பு பெருமாள் ஒரு
முதிய தச்சனைப் போல வேடமணிந்து தோன்றினார். அரசனிடம் 21 நாட்களில் இந்த வேலையை முடித்து தருவதாகவும், அதுவரை தான் வேலைசெய்யும் அறையை யாரும் திறக்கக் கூடாது என்றும் கூறினார். அதற்கு அரசனும் ஒப்புக்கொண்டார். 15 நாட்கள் அந்த அறையின் உள்ளிருந்து உளிச்சத்தம் கேட்டது. எனவே அரசன் வேலை
மும்முரமாக நடக்கிறது என எண்ணி அந்த அறைப்பக்கம் போகவில்லை. அதையடுத்து மூன்று நாட்கள் சத்தமே இல்லை. இதனால் தச்சர் தூங்கிவிட்டாரோ என எண்ணி, அரசன் அவசரப்பட்டு கதவைத் திறந்து விட்டான். உடனே தச்சர் கோபமடைந்தார். மூன்று நாட்கள் சத்தம் வரவில்லை என்றதும் எனது அறைக்கதவை திறந்துவிட்டாய்.
எனவே இந்தக் கோயிலில் நீ ஸ்தாபிக்கும் சிலைகள் அரைகுறையாகவே இருக்கும். அப்படி இருந்தாலும் பரவாயில்லை. அப்படியே பிரதிஷ்டை செய்துவிடு. இந்த கோயிலுக்கு வருபவர்கள் சிலையைப் பார்த்துவிட்டு பொறுமையை கடைபிடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செல்வார்கள் என்று அருள்பாலித்தார். அந்த அறையில் வேலை
முடியாத நிலையில் ஜெகந்நாதர், பலராமன், சுபத்திரா ஆகியோரின் சிலைகள் இருந்தன. அந்த சிலைகளையே அரசர் பிரதிஷ்டை செய்தார். இந்திரதையுமாவின் காலத்திற்கு பிறகு அவர் கட்டிய பழைய கோயில் பாழடைந்து விட்டது. அதன்பிறகும் அந்த இடத்தில் பல கோயில்கள் கட்டப்பட்டன. அவற்றையும் கடல் மூழ்கடித்துவிட்டது
தற்போதைய கோயில் 1135ல் அரசர் அனந்தவர்மனால் துவக்கப்பட்டு, 1200ம் ஆண்டில் இவரது பேரன் அனங்காபி மாதேவ் என்ற அரசனால் முடிக்கப்பட்டது. இது பாஞ்சராத்திரம் முறைப்படி அமைக்கப்பட்ட ஆலயமாகும். இவ்வாலயத்தின் மேற்கில் எட்டு உலோகக் கலவையால் செய்யப்பட்ட நீலச்சக்கரம் உள்ளது. ஆலயக் கொடிமரம்
ஏழைகளுக்கு அருள்பவன் என்னும் பொருளில் பதீதபவன் பாவனா என்று அழைக்கப்படுகிறது. இவை இரண்டையும் வணங்கினாலே ஜெகந்நாதரின் அருளைப் பூரணமாகப் பெறலாம் என்கிறார்கள். இராமாயணத்தில் இராமபிரானும், மகாபாரத்தில் பாண்டவர்களும் இங்கே வந்து வேண்டிக்கொண்டதாக புராணங்கள் கூறுகிறது. மகாபிரபு ஜகன்னாதர்
(ஸ்ரீ கிருஷ்ணர்) கலியுகத்தின் கடவுள் என்று அழைக்கப்படுகிறார்.ஜெகன்னாதர் சிலை 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றப்படும், அப்போது பூரி நகரம் முழுவதும் விளக்குகள் அணைக்கப்படுகின்றன. பிறகு கோவில் வளாகத்திற்கு சி.ஆர்.பி.எப். பாதுகாப்பு தரப்படுகிறது. யாரும் கோவிலுக்குள் போக முடியாது.
அடர்ந்த இருளில் பூஜாரி கண்மூடி, பழைய சிலையிலிருந்து "பிரம்ம திரவியத்தை" எடுத்து புதிய சிலையில் ஊற்றுகிறார். இந்த பிரம்மப் பொருள் என்னவென்று இன்றுவரை யாருக்கும் தெரியாது, யாரும் பார்த்ததில்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இது ஒரு சிலையிலிருந்து மற்றொரு சிலைக்கு மாற்றப்படுகிறது. இது
இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு பொருள். இந்த பிரம்ம பொருள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருடன் தொடர்புடையது. ஜெகநாதர் மற்றும் பிற சிலைகள் ஒரே சமயத்தில் மாற்றப் படுகின்றன. இன்றும், ஜகந்நாதர் யாத்திரையின் போது, ​​பூரியின் அரசர்தானே தங்க துடைப்பத்துடன் வீதிகளை பெருக்க வருகிறார். ஜெகநாதர் கோவிலின்
சிங்க வாயிலில் இருந்து உள்ளே முதல் அடியை எடுத்து வைத்தவுடன் கடல் அலைகளின் சத்தம் உள்ளே கேட்காது, அதே சமயம் கோயிலில் இருந்து ஒரு அடி எடுத்து வைத்தவுடன் கடலின் சத்தம் கேட்கும். பெரும்பாலான கோவில்களின் உச்சியில் பறவைகள் அமர்ந்து பறப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள், ஆனால் ஜெகநாதர்
கோவிலை எந்த பறவையும் கடந்து செல்லாது, கொடி எப்போதும் காற்றின் எதிர் திசையில் பறக்கிறது. 45 மாடிகள் கொண்ட ஜெகநாதர் கோவிலில் உள்ள கொடியை தினமும் மாற்றுவார்கள், ஒரு நாள் கொடியை மாற்றவில்லை என்றால், 18 ஆண்டுகள் கோவில் மூடப்படும் என்பது நம்பிக்கை! ஜகன்னாதர் கோயிலின் உச்சியில் ஒரு
சுதர்சன சக்கரம் உள்ளது, இது எந்த திசையிலிருந்தும் பார்த்தாலும் ​​​நம்மை நோக்கியபடி தெரியும்! ஜெகநாதர் கோவிலின் சமையலறையில், பிரசாதம் 7 மண் பானைகள் ஒன்றன் மேல் ஒன்றாக வைக்கப்பட்டு, விறகு நெருப்பால் சமைக்கப்படும். ஆச்சரியகரமாக மேல் பாத்திரம் முதலில் சமைக்கப் பட்டிருக்கும். ஜெகநாதர்
கோவிலில் தினமும் செய்யப்படும் பிரசாதம் பக்தர்கள் எண்ணிக்கை எவ்வளவாக இருந்தாலும் குறைவதில்லை. ஆனால் கோவிலின் கதவுகள் மூடப்பட்டவுடன், பிரசாதமும் தீர்ந்துபோய் விடும்.
பூரி ஜகன்னாதருக்கு ஜெய்
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Jul 6
#பூரி_ஜெகன்னாதர்_கோவில்_மகாபிரசாதம்
பூரி ஜகன்னாதர் ரத யாத்திரை 7 ஜூலை 2024

ஒடிசாவில் அமைந்துள்ள பூரி ஜெகந்நாதர் கோவிலில் வீற்றிருக்கும் விஷ்ணு பகவான் தினம் காலையில் ராமேஸ்வரம் சென்று மதியம் பூரி திரும்புவதாக ஒரு ஐதீகம் எனவே இங்கு மதிய உணவு மிகவும் தடபுடலான விருந்தாகசமைக்கப் Image
படும். இங்கு சமைக்கும் முறையே வித்தியாசமானது. பூரி ஜெகநாதர் கோவிலின் சமையலறை உலகிலேயே மிகப்பெரியது. அத்துடன் பாரம்பரியம் மிக்கது. கோயிலின் சமையலறை ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பக்தர்களுக்கு சமைக்கும் அளவுக்கு திறன் பெற்றது. இங்கு 56 வகையான சைவ உணவுகள் சமைக்கப் படுகின்றன. கங்கா, யமுனா Image
எனப்படும் சமையலறைக்கு அருகில் உள்ள இரண்டு கிணறுகளிலிருந்து நீர் எடுக்கப்பட்டு அதைக் கொண்டு மண் பானைகளில் சமையல் செய்யப்படுகிறது. இங்கு விறகு அடுப்பில் உணவு சமைக்கப்படுகிறது கோவிலின் சமையலறையில் ஒன்றின் மேல் ஒன்றாக 7 மண் பாத்திரங்கள் அடுக்கப்பட்டு சமைக்கப்படுகிறது. அப்படி Image
Read 11 tweets
Jul 5
#திருவேட்களம் #பாசுபதேஸ்வரர்
பாரதப் போர் நடைபெற்ற சமயம் அபிமன்யூவை சயந்திரன் எனும் மன்னன் கொன்றான். இதனால் கோபம் கொண்ட அர்ச்சுனன் என் மகனைக் கொன்றவனை நாளை மாலைக்குள் வீழ்த்துவேன் அல்லவெனில் உயிர் மாய்ப்பேன் என சபதம் செய்தான். அப்போது தேரோட்டியும், தோழனுமான கண்ணன் அவனைத் தனியாக
Image
Image
அழைத்துச் சென்று தேற்றினான். பின் அர்ச்சுனன் பசியாற கனிகளைப் பறித்து கொடுத்தான். அவனும் நான் தினமும் சிவபெருமானை பூஜிக்காமல் உண்ண மாட்டேன் என்றான். அர்ச்சுனா இன்று என்னையே சிவனாக எண்ணி பூஜிப்பாயாக என்ற கண்ணன், அர்ச்சுனனும் அவ்வாறே பூஜித்து பசியாறினான். பின் சிறிது கண் அயர்ந்தான் Image
அவனது கனவில் கண்ணன் வந்தான், வந்து மைத்துனா! சிந்து மன்னனை அழிக்க நாம் கயிலை சென்று சிவனை வணங்கி சூரிய உதயத்திற்கு முன் வந்து விட வேண்டும் என்றான். இருவரும் கயிலை சென்றனர். சிவபெருமான் பார்வதியை வணங்கி தாங்கள் வந்த விவரத்தைக் கூறினர். சிவபெருமான் அருகே அர்ச்சுனன் அர்ச்சித்த
Read 10 tweets
Jul 4
#திருவானைக்காவல்
புகழ் பெற்ற ஜம்புகேஸ்வரர் திருக்கோவில் பஞ்ச பூதத் திருத்தலங்களில், நீருக்குரிய தலமாக போற்றப்படுகிறது. இந்த ஆலயம் அம்பிகை, ஈசனிடம் உபதேசம் பெற்ற இடமாகும். ஜம்பு முனிவர் என்பவர் வழிபட்ட திருத்தலம் என்பதால், இது ஜம்புவனம், ஜம்புகேஸ்வரம், ஜம்புவீச்வரம் போன்ற Image
பெயர்களால் அழைக்கப்படுகிறது. இறைவனின் பெயரும் #ஜம்புகேஸ்வரர் என்றானது. யானை வழிபட்ட காரணத்தால், திருவானைக்காவல் என்றும் பெயர் பெற்றது. இறைவியின் திருநாமம், #அகிலாண்டேஸ்வரி.
இக்கோவில் 51 சக்தி பீடங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. அம்மனின் சன்னிதி, தண்டநாத பீடம் என்னும் வராஹி பீடமாகImage
விளங்குகிறது. ஆதிசங்கரர் இத்தல அம்மனுக்கு, சிவ சக்கரம், ஸ்ரீசக்கரம் என்னும் இரண்டு தாடங்கங்களை காதில் குண்டலங்களாக பிரதிஷ்டை செய்துள்ளார். சிவபெருமானின் கட்டளைப்படி, அம்பாள் பூலோகத்தில் மானிடப் பெண்ணாகப் பிறந்தாள். கடும் தவத்தின் மூலமாக மீண்டும் கயிலாயம் செல்லும் வகையில் ஈசனை
Read 9 tweets
Jul 4
#பூரி_ஜகன்னாத் #அனாபஸார_ஜகந்நாதன்
( ஜூலை 7 2024 புரி ரதயாத்திரை)
புரி க்ஷேத்திரத்தில், ஜ்யேஷ்ட பூர்ணிமா (சாந்திர மாஸ ஆனி மாத பௌர்ணமி) அன்று வேப்பமரத்தினால் ஆன ஜகந்நாத், பலராம், சுபத்திரா ஆகியோர்108 குட தங்கக் கிணறு ஜலத்தினால் திருமஞ்சனம் கண்டருளுவர். அதன்பின் அவர்கள் மூவரையும் Image
குழந்தையாக பாவிப்பதால், அவர்களுக்கு ஜுரம், ஜலதோஷம் ஆகியவை வருவதால், 2வாரங்கள் அவர்களை அனவஸார க்ருஹம் என்று தனியறையில் இருக்கவைத்து கஷாயம், பழச்சாறு போன்றவை நிவேதனம் செய்யப் படும். அந்த சமயத்தில் கோயிலில் பக்தர்களுக்கு தரிசனத்திற்கு அனுமதி இல்லை. நித்யம் செய்ய வேண்டிய பூஜா
முறைகளும் அனவஸார காலத்திற்கு விசேஷ பூஜையாக மாற்றப்படும். இந்த 15நாட்கள் விசேஷ பூஜைக்காகவே அனவஸார பட்டி பகவான் தயாராவார். துணியில் வரையப்படும் தெய்வ உருவங்களை அனபஸார பட்டி பகவான் என்று அழைப்பர். பலராமனை அனந்தவாஸுதேவனாக 4 திருக்கைகளில், சங்கம் சக்கரம், ஏர்கலப்பை, உலக்கையோடும்
Read 8 tweets
Jul 3
#சேதுபந்தன_சரித்திரம்
லங்காபுரிக்கு சென்று அசோகவனத்தில் திரிசடை என்கிற அரக்கியின் பாதுகாப்பில் இருந்த சீதாப்பிராட்டியை கண்டு, அனுமான் கணையாழியை பெற்றுக்கொண்டு, கண்டேன் சீதையை, என்று இராமரிடம் சொன்ன போதே, இராவணன் அந்திமம் தீர்மானிக்கப்பட்டது. அடுத்து, இலங்கைக்குச் செல்ல சேது Image
சமுத்திரத்தில் சேதுபந்தனம் என்கிற பாலம் கட்டப்பட வேண்டும். அது வழியாகத் தான் இலங்கைக்கு செல்ல முடியும். இராமருக்கு சொந்தமாக சைனிகஸேனகள் இல்லை! தற்போது எந்த தேஸத்திற்கும் ராஜனும் இல்லை. சொந்தம் என்று சொல்லிகொள்ள சகோதரன் இலக்ஷ்மணன் மற்றும் அனுமன், சுக்ரீவனும் வாலியின் புத்திரனும்,Image
கரடிகளின் தலைவன் ஜாம்பவான் ஆகியோர் தான் இருந்நதார்கள். எல்லோரும் ஒன்று கூடி சேதுபாலம் பணி தீர்மானிக்கப்பட்டது. பாலம் பணியை தொடங்க சமுத்திரராஜனிடம் அனுமதி கேட்டு, அதற்காக 3 நாட்கள் மௌன விரதமும் உண்ணா நோன்ம்பும் அனுஷ்டித்தார். கடற்கரையில் தர்ப்பைப் புல்லை பரப்பி பத்மாசனத்தில்
Read 12 tweets
Jul 2
#நற்சிந்தனை
#அதர்மத்திற்குத்_துணைபோனால்_துயரமே_மிஞ்சும்_கர்ணனின்_வாழ்வே_சான்று.
மகாபாரதத்தில், கர்ணன் கிருஷ்ணரைக் கேட்டான் - என் தாயார் நான் பிறந்த நேரத்தில் என்னை ஆற்றில் விட்டுவிட்டார். தந்தை பெயரை அறியாதவன், தேரோட்டியின் வளர்ப்பு மகன் என்றார்கள் உலகக்தார். இது என் தவறா? இது Image
அரச குமாரர்கள் மட்டுமே கற்குமிடம் என்று கூறி துரோணாச்சாரியார் எனக்கு வில் வித்தையைக் கற்றுத் தரவில்லை. இது என் தவறா? ஷத்ரியனுக்கு இனி வில் வித்தையைக் கற்பிக்க மாட்டேன் என்று தன் சீடன் பீஷ்மரிடம் சபதம் செய்த பரசுராமரை ஏமாற்றி நான் அந்தணன் என்று கூறி வில் வித்தையைக் கற்றேன்.
இந்திரனால் நான் அந்தணன் இல்லை, சத்திரியன் என்பதைப் பரசுராமர் அறிந்துவிட்டார். எனவே குரு பரசுராமர் எனக்கு சாபமிட்டார். முக்கிய தருணத்தில் நீ கற்ற வித்தை அனைத்தும் மறந்து போகும் என்று என்னைச் சபித்து விட்டார். குருவிடம் பொய் சொன்ன தவற்றை நான் வேண்டுமெனாறே செய்யவில்லை. எனது Image
Read 23 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(