'மின்சாரத்தின் தந்தை’ என்று அழைக்கப்படும் மைக்கேல் பாரடே (Micheal Faraday)
பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு வேதியியலாளரும், இயற்பியலாளரும் ஆவார். இவர் மின்காந்தவியல், மின்வேதியியல் ஆகிய துறைகளுக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார்.
மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்ட ஃபாரடே தனது கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமம் பெறவோ அவற்றை கொண்டு பணம் சம்பாதிக்கவோ முயலவில்லை. தன் ஏழ்மையான இளமை காலத்தை மறக்காத ஃபாரடே தன்னைப் போன்ற ஏழைச் சிறுவர்களும் அறிவியலில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக
லண்டன் ராயல் கழகத்தில் 1825-ல் “கிறிஸ்துமஸ் விரிவுரைகள்” என்ற தொடரை ஆரம்பித்து வைத்து விரிவுரை வழங்கத் தொடங்கினார். அன்று அவர் தொடங்கியது “ஃபாரடே விரிவுரைகள்” என்று இப்போதும் தொடர்ந்து நடைபெறுகிறது.
1848ல் ஒரு மெழுகுவர்த்தியின் வேதியியல் வரலாறு என்ற தலைப்பில் ஆறுவிரிவுரைகளை வழங்கினார்.
அறிவியலை எளிய மனிதனுக்கும் புரிகிற வகையில் எப்படி சொல்ல வேண்டும் என்பதற்கு அவரது ‘மெழுகுவர்த்தியின் வேதியியல் வரலாறு’ புத்தகம் சிறந்த எடுத்துக்காட்டு.
மைக்கேல் ஃபாரடேயின் கிறிஸ்துமஸ் தின சொற்பொழிவுகளால் கவரப்பட்டு, அதே போன்றதொரு 'பொங்கல் அறிவியல் கொண்டாட்டத்தை' உங்களுக்கு வழங்க விரும்புகிறோம். பொங்கலின் மூன்று நாட்களுக்கு (14-16) ட்விட்டர் மூலம் அறிவியல் அமர்வுகளை நடத்த உள்ளோம். அனைவரையும் வரவேற்கிறோம்.
முதல் நாள் : 14/01/2022
நேரம் : 5.30 pm IST
🕯️மெழுகுவர்த்தியின் அறிவியல் 🕯️
🎙️@PremNTU
🎙️@gmuruganandi
🎙️@bharath_kiddo
🎙️@sri_mugundan
⚓@SpacesScience
Spaces link: shorturl.at/vEKX8
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.