Athma Profile picture
தாழ்வெனும் தன்மையோடும் சைவமாம் சமயம் சாரும் ஊழ் பெறல் அரிது சால உயர் சிவஞானத்தாலே போழிள மதியினானைப் போற்றுவார் அருள்பெற்றாரே !!!

Jan 15, 2022, 18 tweets

ஜோதிட குறிப்புகள்

மொத்த நக்ஷத்திரங்கள் = 27
மொத்த ராசிகள் = 12

#ஜோதிடம்

பஞ்சாங்கம் என்றால் என்ன ? பஞ்ச + அங்கம் = பஞ்சாங்கம்
ஐந்து அங்கங்களை கொண்டது பஞ்சாங்கம்.
1. திதி
2. வாரம்
3. யோகம்
4. நக்ஷத்திரம்
5. கரணம்
#ஜோதிடம் #ஜோதிடம்அறிவோம்

1. திதி - சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே ஏற்பட்ட தூரத்தின் பெயராகும்.
#ஜோதிடம் #ஜோதிடம்அறிவோம்

மொத்த திதிகள்-30
A.அமாவாசை - ஒருவருடைய ஜாதகத்தில் அமாவாசை அன்று சூரியனும் சந்திரனும் சேர்ந்து இருக்கும்.
B.பவுர்ணமி -ஒருவருடைய ஜாதகத்தில் பவுர்ணமி அன்று சூரியனும் சந்திரனும் ஒருவருக்கு ஒருவர் (7ம் இடத்தில் -180 degree தூரத்தில்) பார்த்துக் கொள்ளும்.
#ஜோதிடம் #ஜோதிடம்அறிவோம்

C.வளர்பிறை திதிகள் (அமாவாசைக்கு அடுத்த நாள் முதல்)14 ஆகும்.அமாவாசையில் இருந்து சந்திரன் வளர்வதால்,இந்த திதிகளுக்கு வளர்பிறை திதிகள் என்று பெயர்
D.தேய்பிறை திதிகள் (பவுர்ணமிக்கு அடுத்த நாள் முதல்)14ஆகும்.பவுர்ணமியில் இருந்து சந்திரன் தேய்வதால்,இந்த திதிகளுக்கு தேய்பிறை என்று பெயர்

2. வாரம் என்பது தினசரி நாட்கள்.ராகு மற்றும் கேது பகவான்களுக்கு தனியாக நாட்கள் கிடையாது.அதனால் ஒவ்வரு நாட்களிலும் , அவர்களுக்கு என்று 1-1/2 hours (90 நிமிடங்கள்) அவர்கள் கட்டுப் பாடுகளில் செயல்படும். எந்த நேரங்கள் என்பதை இங்கே பார்க்கவும்.

3.யோகம்-சந்திரன் ஒவ்வொரு நட்சத்திரத்தையும் கடக்க எடுக்கும் காலப்பகுதி தான் யோகம்.
வான்மண்டலம்=360°
மொத்த நக்ஷத்திரங்கள்=27
மொத்த ராசிகள்=12
சந்திரன் ஒரு நக்ஷத்திரத்தை கடக்க எடுத்துக் கொள்கிற அளவு=360°/27=13° 20''
ஒரு ராசிக்கு உள்ள அளவு=360°/12 = 30°
#ஜோதிடம் #ஜோதிடம்அறிவோம்

4. நக்ஷத்திரம் - மொத்த நக்ஷத்திரங்கள் 27 உள்ளன . அதை பற்றி விவரமாக மேலே ☝️☝️☝️ உள்ளன.

#ஜோதிடம் #ஜோதிடம்அறிவோம்

5. கரணம் - ஒரு திதியின் முற்காலம், பிற்காலம் ஆகியவை கரணம் எனப்படும். 30 திதிகள் இருப்பதால் மொத்தமாக 60 கரணங்கள்.
#ஜோதிடம் #ஜோதிடம்அறிவோம்

நாள் என்றால் என்ன?
ஆங்கிலேயரின் ஒரு நாள் என்பது இரவு 12.01 மணியில் இருந்து மறுநாள் இரவு 12.00 மணி முடிய ஒரு நாள்.
நமது ஜோதிட முறைப் படி,சூரியோதயம் முதல் மறு நாள் சூரியோதயம் வரை ஒரு நாள்.ஒரு சூரிய உதயம் முதல் மறு சூரிய உதயம் உள்ள காலமே ஒரு நாள் எனப்படும்.
#ஜோதிடம் #ஜோதிடம்அறிவோம்

ஜோதிட நேர கணக்குகள் :-
60 விநாடி - 1 நாழிகை
1 நாழிகை = 24 நிமிடங்கள்
2.5 நாழிகை = 1 மணி நேரம்
2.5 நாழிகை( 1 மணி)= 1 ஓரை
60 நாழிகை = 1 நாள்
3.75 நாழிகை = 1 முகூர்த்தம்
7.5 நாழிகை = 1 ஜாமம்
8 ஜாமம் = 1 நாள்
#ஜோதிடம் #ஜோதிடம்அறிவோம்

ராசிகள் விவரம்: மொத்தம் 12 ராசிகள்.மேஷத்தில் ஆரம்பித்து மீனத்தில் முடிகிறது.ஒரு ஜாதகரின் எந்த வீட்டில் சந்திர பகவான் இருக்கிறாரோ,அந்த வீட்டு சொந்தகாரர் தான் இராசியாதிபதி என்று அந்த ஜாதகருக்கு அழைக்கப்படுவார்.
#ஜோதிடம் #ஜோதிடம்அறிவோம்

எந்த கிரஹங்கள் எந்த வீட்டில் உச்சம் மற்றும் நீச்சம் பெறுகின்றன என்பது பற்றி கீழே உள்ளன.சூரியன் மேஷ ராசியில் உச்சம் Powerfulபெறுகிறது.அதை முதல் வீடாக கணக்கில் கொண்டு கடிக்கார சுழற்சியில் எண்ணினால்,ஏழாவது வீடான துலாத்தில் நீசம்(Powerless)பெறுகிறது.அது போல் தான் மற்ற கிரஹங்களுக்கும்

நக்ஷத்திர அதிபதி

ஒரு குழந்தையின் முதல் தசை என்ன என்று எப்படி கண்டு பிடிப்பது எப்படி ? சந்திரன் எந்த நக்ஷத்திரத்தில் இருக்கிறாரோ அந்த நக்ஷத்திரத்தின் அதிபதியே அந்த குழந்தையின் முதல் மஹா தசை.
#ஜோதிடம் #ஜோதிடம்அறிவோம்

ஆன்மா மனித உடலை பிரியும் பொழுது எந்த நக்ஷத்திரத்தில் நடை பெறுகிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும். மொத்தம் உள்ள 27 நக்ஷத்திரங்களில், 13 நக்ஷத்திரங்களில் இறப்பு ஏற்பட்டால் , அதற்கு நம் சாஸ்திரத்தில் "தனிஷ்டா பஞ்சமி" என்று கூறப்படுகிறது.

அதற்கு அடப்பு என்று பெயர். அதாவது அந்த ஆன்மா இந்த பூமியை விட்டு உடனே செல்லாமல், இந்த பூலோகத்தில் தங்கி இறந்த இடத்ததை கீழே குறிப்பிட்ட மாதங்களுக்கு தேடி வரும் என்று நம் சாஸ்திரம் கூறுகிறது.

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling