அன்பெழில் Profile picture
நம்புவதை பகிர்ந்து நன்மை செய்வோம்.

Jan 22, 2022, 7 tweets

#கும்பகோணம் #திருக்குடப்தை கும்பகோணம், அதை சுற்றியுள்ள பகுதியில் ஏராளமான (188) கோவிகள் அமைந்திருப்பதால் அது கோவில் நகரம் என்று அழைக்கப்படுகிறது. கரு முதல் 60ஆம் கல்யாணம் வரை நம் வாழ்க்கை மங்களமாக அமைய வேண்டிய வரும் தரும் கோவில்கள் இங்குள்ளது தனிச் சிறப்பு.
1. கரு உருவாக (புத்திர

பாக்கியம்) - கருவளர்ச்சேரி
2. கரு பாதுகாத்து சுக பிரசவம் பெற - திருக்கருகாவூர்
3. நோயற்ற வாழ்வு பெறுவதற்கு -
ஸ்ரீவைத்தீஸ்வரன் கோயில்
4. ஞானம் பெற - சுவாமிமலை
5. கல்வி, கலைகள் வளர்ச்சிக்கு -
கூத்தனூர்
6. எடுத்த காரியம் வெற்றி பெற மன தைரியம் கிட்ட - பட்டீஸ்வரம்
7. உயர் பதவி

அடைய (வேலை வேண்டி) - கும்பகோணம் பிரம்மன் கோயில்
8. செல்வம், பெறுவதற்கு - ஒப்பிலியப்பன் கோயில்
9. கடன் நிவர்த்தி பெற - திருச்சேறை சரபரமேஸ்வரர்
10. இழந்த செல்வத்தை மீண்டும் பெற - திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி
11. பெண்கள் நற்சமயத்தில் ருது
ஆவதற்கும், ருது பிரச்சனைகள் தீர

- கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோயில் - நவ கன்னிகை
12. திருமண தடைகள் நீங்க -
திருமணஞ்சேரி
13. நல்ல கணவனை அடைய -
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் மங்களாம்பிகை
14. ஆதர்சன தம்பதி (கணவன் மனைவி ஒற்றுமை) - திருச்சத்திமுற்றம்
15. பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர -
திருவலஞ்சுழி
16. பில்லி,

சூனியம் செய்வினை கோளாறுகள் நீங்க - அய்யாவாடி ஸ்ரீ ப்ரத்யங்கிரா தேவி
17. கோர்ட்டு, வழக்குகளில் நியாய வெற்றி அடைய - திருபுவனம் சரபேஸ்வரர்
18. பாவங்கள் அகல - கும்பகோணம் மகாமக குளத்தில் நீராடல்
19. எம பயம் நீங்க - குளத்தில் நீராடல் ஸ்ரீ வாஞ்சியம்
20. ஆயுள் பெற - திருக்கடையூர்

21.தடைகள் நீங்க அருள்மிகு நடனபுரீஸ்வரர் ஆலயம், தண்டந்தோட்டம் - கும்பகோணம் அருகில்
முடிந்த போது இந்தக் கோவில்களுக்குச் சென்று தரிசித்து அருள் பெறுவோம்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling