ஊடகங்களே,"எளியவர்களும் இந்த பிரபஞ்சத்தின் ஒரு ஓரத்தில் இயங்கிக்கொண்டுதான் இருக்கிறோம்.உங்கள் கண்களை கொஞ்சம் விரித்து பாருங்கள்"
-@LeenaManimekali
சினிமா எனும் பெரும் முதலாளித்துவ பிரபஞ்சத்தின், எளிய பால்வீதி பிரதேசம் தற்சார்பு திரைவெளி.
A thread on
#Tamilindependentfilmspace
#Tolet 🏠
"சின்னதோ பெருசோ,
சொந்தமா ஒரு வீடு" பல நகர்ப்புற நடுத்தர குடும்பங்களோட வாழ்நாள் உழைப்பின் உயர்விழைவு இதுதான்
எப்படி ஒரு வீடு சமூகத்தின் ஒரு பிரிவு மக்களுக்கு வாழ்நாள் ஏக்கமாகவே தொடருது, இன்னொரு பிரிவுக்கு அதிகாரத்தின் வடிவங்களாக இருக்கென்ற ஆழமான வாழ்வியல்.
@Rchezhi
#Madhubanakadai 🥃
இரவுக்கோப்பையின் இன்ப உலா.
இரவின் நிழலில் இயங்கும் சமரசமில்லா குடிமக்கள் காவியம்.
காதலுக்கு,வேலையில்லா இளைஞனுக்கு, குடும்ப பொறுப்பற்ற ஆண்களுக்கு, தினமும் உடலுழைப்பை மட்டுமே நம்பி வாழ்கையில ஓடுகிற மக்களுக்குனு முழு சமூகச் சூழலின் கண்ணாடி பிம்பம் ஒயின்ஷாப்.
#Lens 🤡
அகத்தின் அழுக்குகள் அத்துணைக்குமான முகமூடியாக இணையவெளி.
நம்ம சுயஅடையாளத்த வெளிக்காட்டிக்க வேண்டிய தேவையை குறைக்கும் இணையவெளிகள், சக மனிதனை பாதிக்கும் நம் உள்மன இச்சைகளை,அவதூறுகளை, கீழ்மைகளை கொட்டும் களமாகவும் பரிணமித்து நிற்கிறது.
Film by @JPtheactor
#Radiopetti 📻
நினைவுகளால் வாழ்பவன் மனிதன்.
மனிதர்கள் விந்தணுக்களின் வழி சந்ததிகளை மட்டும் கடத்துவது இல்லை, சில உடைமைகள், பொருட்கள் தலைமுறைகளின் பிணைப்பாக நினைவில் தங்கும். ரேடியோ பெட்டி இந்த இரண்டுக்குமான ஒரு உருவகம்.
Film by #HariViswanath
#Revealetions 🌄
மனிதர்களின் அகவெளி காமத்தால் பூத்தது.
காமம் பூட்டிவைக்கப்பட்ட காற்று.
நான்கு மனிதர்களின் எல்லைமீறத் துடிக்கும் மனவெழுச்சிகளுக்கும், அதைத் தேக்கும் சுற்றம் தழுவித்த குற்ற உணர்ச்சிகளுக்கும் இடையில் பயணப்பட்டு நிகழும் வெளிப்படை.
Film by @iam_vj
#Nilanadukkam
அசல் தன்மையை விட பரபரப்பான தன்மையையும், நேர்மையை விட மெலோடிராமாவையும் விரும்பும் மனநிலைக்கு பழகிவிட்டோம்.
ஏதுமற்ற எல்லாம் உள்ள நிலவெளி, ஒற்றை மனிதன்.
மெல்லப்படரும் சூழல்.
Film by #Balajivembuchelli
#Sivapuranam 📷
கலை மனிதனின் அகம் சார்ந்த கூறுகளை கண்ணாடி போல் பிரதிபலித்து உளவியல் பேசும்.
புறவய சூழலில் இயைந்து செல்தலை காட்டிலும் தனிமையில் தன்னகத்தே கொண்டிருக்கும் அகவய தேடல் அலாதியானது.
எதிர்பாராது குவியம் கொள்ளும் பெண்ணின்,நினைவுசூழ் நித்சலன புராணம்.
@cinemaobscurak
#TheMosquitophilosophy
நாம் மாட்டிக்கொள்ளும் முற்போக்கு முகங்களுக்கு அப்பால், உறுத்தும் இயலாமைகள் நிரம்பி இருக்கலாம்.
சில உரையாடல்கள் அபத்தமாக தோன்றலாம், ஆனால் அது ஏதோ ஒருவகையில் இன்னொருவர்க்கு ஒரு எண்ணத்திணிப்பை செய்துகொண்டே இருக்கும்.
உள்ளுரு உரையாடல்
Film by @JPtheactor
#SethumAayiramPon
ஒப்பணையும், ஒப்பாரியும் சங்கமித்து விழா எடுக்கும், இழவு அழகானது.
மனிதன் மரணத்தை கொண்டாடும் வேளையில், வாழ்தலின் பூரணத்தை உணர்வான்.
தாலாட்டிலே தொடங்கி, ஒப்பாரியில் நிறையும் வாழ்விது..
சாகாவரம் போல் சோகமில்லை
Film by @Anand_RChandran
#Maadathy:#AnUnfairyTail (2021)
ஒருபுறம் பெண்ணை தெய்வமாக கோயிலில் நிலைநிறுத்தும் எத்தினிப்பையும்,
மறுபுறம் இச்சையின் பண்டமாக பெண்ணைப்பார்க்கும்
கீழமையையும், இணையொத்து நகரும் காட்சிகள்
இறுதியில் யோசனா மாடத்தியாகும் ஓர் இழையில் பெரும்பொருள் கொள்கிறது.
Film by @LeenaManimekali
#Nasir
ஓ! என் இனிய நண்பர்களே கவிஞன் நசீர் கேட்கிறான் வாழ்க்கையென்பது தனிமை, மொளனம் இதைத்தவிர வேறு என்னதான் என்று...?
ஆணையின்பால் பாசம்கொண்டு பாசாங்கு செய்யும் பாரத மானுடமே, ஆணைமுகத்தான்பால் 'மதம்'கொண்டு 'மதம்'கொள்ளும் மானுடம்.
Film by @cinemaobscurak
#ThumbiMaaya
எழுத்தாளனின் அகவயச்சிக்கல், மரணம் நோக்கிய ஆழ்சிந்தை, பாலியல் சார்ந்த உள்ளார்ந்த புரிதலுக்கான முயற்சி.
'என் உறுப்பு எனக்கு பாரமாக இருக்கு' என்ற வசனம் உடலியல் சார்ந்த தத்துவ விசாரணையாக விரிகிறது.
ரத்தம் தோய்ந்த சதையில் வீசும் அன்பு வாடை.
Film by @ratheshofficial
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.