#மந்திராலயம் மாஞ்சாலாவில் குரு #இராகவேந்திரர் தமது பிருந்தாவனத்தை அமைக்க தேர்ந்தெடுத்தற்கான காரணம் பிரகலாதராக இருந்த காலத்தில் இவர் யாகம் செய்த இடம் இது. குரு இராகவேந்திரரிடம் மாமிசத்தைப் படைத்து அவமரியாதை செய்ய நினைத்த, அந்த இடத்தை ஆண்ட நவாபின் படையலை பழங்களும் மலர்களுமாக
மாற்றிய அவரின் மகிமையை உணர்ந்த நவாப் அவரைப் பணிந்து என்ன வேண்டுமென்றாலும் கேட்க வேண்டினான். அப்போது இராகவேந்திரர் இந்த மாஞ்சாலி கிராமத்தைக் கேட்டார். நவாப்பும். அந்த பிரதேசம் பாறைகள் நிறைந்த வறண்ட பூமி வேண்டாம், வேறு நல்ல வளமான பகுதியை தருகின்றேன் என்றான். இராகவேந்திரர் அன்மீக
சக்தி மிகுந்த இப்பகுதியே வேண்டுமென கேட்க அதையே தானமாக மனமுவந்து வழங்கி சாசனம் செய்து குருதேவரை வணங்கி சென்றான். பின்னர் இராகவேந்திரர் மாஞ்சாலியில் வாழ ஆரம்பித்தார், அவரது இஷ்டதெய்வமான வெங்கடரமண சுவாமிக்கு ஒரு ஆலயமும் எழுப்பினார். ஆயிரக்கணக்கில் பக்தர்கள் மாஞ்சாலி கிராமத்திற்கு
வரத்தொடங்கினர். இந்த கிராமத்தின் கிராம தேவதை மாஞ்சாலியம்மன். அவர் இராகவேந்திரரிடம் சென்று தாங்கள் வந்த பிறகு என்னை மறந்து விடுவார்களே என்றபோது, இராகவேந்திரர் என்னை தரிசனம் செய்ய வருபவர்கள் முதலில் உன்னை தரிசனம் செய்த பிறகுதான் என்னை தரிசனம் செய்வார்கள் என்று வரம் தந்தார்.
ராகவேந்திரர் பிருந்தாவனத்தை தரிசித்த பிறகு எதிரே மந்திராலய ஹனுமன் உள்ளார். சிவ லிங்கமும் உள்ள்து. இராமர் கிஷ்கிந்தா செல்லும் போது அமர்ந்த கல்லினால் இந்த அனுமான் செய்யப்பட்டுள்ளார். இராகவேந்திரரின் பிருந்தாவனத்திற்கு பிறகு எஞ்சிய கல்லில் இந்த விக்ரகம் அவரின் விருப்பபடி உருவாக்கி
அவர் எதிரிலியே பிரதிஷ்டை செய்யப்பட்டது. இக்கல்லின் ஒரு சிறு பகுதி இன்னும் மாதவரம் கிராமத்தில் உள்ளது அதை இராமராக கருதி வழிபட்டு வருகின்றனர். மஹான் ராகவேந்திரர் பிருந்தாவனம் அருகில் அவரின் பூர்வாசிரம சகோதரரின் கொள்ளுப் பேரனான வாதீந்திர தீர்த்தர் பிருந்தாவனமும் அமைந்துள்ளது.
ராகவேந்திரர் பூஜை செய்த மூலராமர் விக்ரகம் இன்றும் மடாதிபதியால் பூஜை செய்யப்பட்டு வருகிறது. கி.பி. 1812ம் ஆண்டு. பிரிட்டிஷ் அரசு ஒரு சட்டம் இயற்றியது. அதன் மூலம் கோயில் இடத்திற்கான வாரிசுகள் யாரும் இல்லை என்றால் அந்த இடத்தை அரசாங்கமே எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவிப்புச் செய்தது.
அந்தச் சட்டத்தின் மூலம் பிருந்தாவனத்துக்கு தானமாகக் கொடுக்கப்பட்டிருந்த நிலமானியம் முடிவுக்கு வரும் நிலை ஏற்பட்டது. ஆனால் பொது மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அதனால் பிரிட்டிஷ் அரசு அப்போது பெல்லாரி மாவட்ட ஆட்சியாளராக இருந்த சர் தாமஸ் மன்றோ தலைமையில் ஒரு குழுவை நியமித்து
நிலைமையைச் சரி செய்யச் சொல்லி உத்தரவிட்டது. ஜீவசமாதி ஆலயம் அருகே சென்ற மன்றோ யாரோ அங்கு இருப்பது போல் வணக்கம் செலுத்தினார். பின் சத்தமாக உரையாட ஆரம்பித்தார். ஶ்ரீ ராகவேந்திரரே அவரிடம் ஆங்கிலத்தில் உரையாடி அந்த இடம் சட்டப்படி மடத்துக்கு சொந்தம் என்பதை ஐயம் திரிபுற விளக்கியதைக்
கண்டு பிரமித்தார் சர் தாமஸ் மன்றோ. தனக்குக் கிடைத்த பாக்கியத்தை எண்ணி மகிழ்ந்தார். அரசுக்கும், ஆளுநருக்கும், அந்த இடம் மடத்துக்குச் சட்டப்படி உரிமை உள்ள நிலம் என்று தகவல் அனுப்பியதுடன் அன்று முதல் ஸ்ரீ ராகவேந்திரரின் பக்தராகவும் ஆகிப் போனார். விரைவிலேயே மன்றோ தாற்காலிக ஆளுநராகப்
பொறுப்பேற்கும் நிலை வர, அவர் கையெழுத்திட்ட முதல் கோப்பு, மடத்துக்கு நிலம் அளிப்பது தொடர்பானது தான். இந்தச் சம்பவங்கள் அப்போதைய சென்னை மாகாண கெஜட்டிலும் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மந்தாரலயத்திலிருந்து 22 கி.மீ. தூரத்தில் பஞ்சமுகி க்ஷேத்ரம் உள்ளது. இந்த ஊரை காண தானம்
என்று குறிப்பிடுகின்றனர். சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் மலைக்குகையில் குருராஜர் செய்த தவத்தை மெச்சிப் பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமி காட்சி தந்தார். இங்கிருக்கும் ஸ்ரீ ராகவேந்திரர் சன்னதி, பஞ்சமுக ஆஞ்சநேயர் சன்னதிக்குப் படியேறி மலைக்குகையில் தரிசனம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.
மந்திராலயம் செல்வோம் மகானின் அருளை பெறுவோம்🙏🏻
பூஜ்யாய ராகவேந்திராய சத்ய தர்ம ரதாயச
பஜதாம் கல்ப விருக்ஷாய நமதாம் காமதேனவே🙏🏻
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.