Chocks Profile picture
To Be Or Not To Be

Feb 4, 2022, 11 tweets

// சின்னங்களின் வரலாறு //

இந்திய தேசிய காங்கிரஸ் 🔽

1. 1952 முதல் 1969 வரை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சின்னமாக பூட்டிய இரட்டை காளை மாடுகள் இருந்து வந்தது.

2. 1969 இல் இந்திரா தலைமையிலான காங்கிரஸ் (R) மற்றும் காமராஜர் தலைமையிலான ஸ்தாபன காங்கிரஸ் (O) என்று காங்கிரஸ் கட்சி இரண்டாக பிரிந்தது. இந்திரா காங்கிரஸ் (R) கட்சியின் சின்னமாக “பசுவும் கன்றும்” ஸ்தாபன காங்கிரஸ் (O) கட்சியின் சின்னமாக “கை ராட்டை சுற்றும் பெண்” இருந்து வந்தது.

3. 1977 நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு காங்கிரஸ் (R) பிளவுபட்டது. அதை தொடர்ந்து உருவான இந்திரா தலைமையிலான காங்கிரஸ் (I) கட்சிக்கு “கை” சின்னம் கிடைத்தது. அதுவே மீண்டும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியாக மாறி தேர்தலில் “கை” சின்னத்தில் போட்டியிட்டு வருகிறது.

பாரதிய ஜனதா கட்சி 🔽

1. 1952 முதல் 1977 வரை பாரதிய ஜன சங்கத்தின் சின்னமாக எண்ணெய் விளக்கு இருந்து வந்தது.

2. 1977 இல் பாரதிய ஜன சங்கம் ஜனதா கட்சியுடன் இணைந்த பின் ஜனதா கட்சியின் சின்னமாக “சக்கரத்திற்குள் கலப்பையை சுமந்து செல்லும் மனிதன்” இருந்து வந்தது. ஸ்தாபன காங்கிரஸ் (O), பாரதிய லோக் தளம், சோசலிஸ்ட் கட்சி, பாரதிய கிராந்தி தளம், பாரதிய ஜன சங்கம் போன்ற கட்சிகள் இணைந்தே ஜனதா கட்சி.

3. 1977 நாடாளுமன்ற தேர்தலில் வென்று மூன்று வருடங்கள் ஆட்சி செய்த ஜனதா கட்சியின் ஆட்சி 1980 இல் கலைக்கப்பட்ட பின்னர் பழைய பாரதிய ஜன சங்கத்தின் உறுப்பினர்கள் பாரதிய ஜனதா கட்சியை உருவாக்கினர். அதை தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி தேர்தலில் “தாமரை” சின்னத்தில் போட்டியிட்டு வருகிறது.

திராவிட முன்னேற்றக் கழகம் 🔽

1. 1957 இல் முதன் முதலாக தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் களமிறங்கிய திராவிட முன்னேற்றக் கழகம் சேவல் மற்றும் உதயசூரியன் ஆகிய சுயேச்சை சின்னங்களில் போட்டியிட்டது. 1957 தேர்தலில் 15 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

2. 1962 இல் திராவிட முன்னேற்றக் கழகத்தை மாநில கட்சியாக அங்கீகரித்து உதய சூரியன் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. பலமுறை பிளவு கண்ட போதும் இந்தியாவில் ஒரே சின்னத்தை பறிகொடுக்காமல் தொடர்ந்து வைத்திருக்கும் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம் தான்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 🔽

1. 1972 இல் தொடங்கப்பட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.தி.மு.க) தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டது.

2. 1987 இல் எம்.ஜி.ஆர் காலமான பிறகு அ.தி.மு.க கட்சியானது ஜெயலலிதா அணி மற்றும் ஜானகி அணி என்று இரண்டாக பிரிந்தது.

3. அதை தொடர்ந்து நடைபெற்ற 1989 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.கவின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு ஜெயலலிதா அணி சேவல் சின்னத்திலும் ஜானகி அணி புறா சின்னத்திலும் போட்டியிட்டனர்.

4. 1989 தேர்தலுக்கு பிறகு ஒரு கட்டத்தில் ஜெயலலிதா அணியும் ஜானகி அணியும் இணைந்து மீண்டும் ஒரே அ.தி.மு.கவான பிறகு அக்கட்சிக்கு மீண்டும் இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டது.

5. 2016 இல் ஜெயலலிதா காலமான பிறகும் இரட்டை இலை சின்னம் பிரச்சனைகளை சந்தித்தது ஆனால் தப்பித்தது.

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling