1. 1952 முதல் 1969 வரை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சின்னமாக பூட்டிய இரட்டை காளை மாடுகள் இருந்து வந்தது.
2. 1969 இல் இந்திரா தலைமையிலான காங்கிரஸ் (R) மற்றும் காமராஜர் தலைமையிலான ஸ்தாபன காங்கிரஸ் (O) என்று காங்கிரஸ் கட்சி இரண்டாக பிரிந்தது. இந்திரா காங்கிரஸ் (R) கட்சியின் சின்னமாக “பசுவும் கன்றும்” ஸ்தாபன காங்கிரஸ் (O) கட்சியின் சின்னமாக “கை ராட்டை சுற்றும் பெண்” இருந்து வந்தது.
3. 1977 நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு காங்கிரஸ் (R) பிளவுபட்டது. அதை தொடர்ந்து உருவான இந்திரா தலைமையிலான காங்கிரஸ் (I) கட்சிக்கு “கை” சின்னம் கிடைத்தது. அதுவே மீண்டும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியாக மாறி தேர்தலில் “கை” சின்னத்தில் போட்டியிட்டு வருகிறது.
பாரதிய ஜனதா கட்சி 🔽
1. 1952 முதல் 1977 வரை பாரதிய ஜன சங்கத்தின் சின்னமாக எண்ணெய் விளக்கு இருந்து வந்தது.
2. 1977 இல் பாரதிய ஜன சங்கம் ஜனதா கட்சியுடன் இணைந்த பின் ஜனதா கட்சியின் சின்னமாக “சக்கரத்திற்குள் கலப்பையை சுமந்து செல்லும் மனிதன்” இருந்து வந்தது. ஸ்தாபன காங்கிரஸ் (O), பாரதிய லோக் தளம், சோசலிஸ்ட் கட்சி, பாரதிய கிராந்தி தளம், பாரதிய ஜன சங்கம் போன்ற கட்சிகள் இணைந்தே ஜனதா கட்சி.
3. 1977 நாடாளுமன்ற தேர்தலில் வென்று மூன்று வருடங்கள் ஆட்சி செய்த ஜனதா கட்சியின் ஆட்சி 1980 இல் கலைக்கப்பட்ட பின்னர் பழைய பாரதிய ஜன சங்கத்தின் உறுப்பினர்கள் பாரதிய ஜனதா கட்சியை உருவாக்கினர். அதை தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி தேர்தலில் “தாமரை” சின்னத்தில் போட்டியிட்டு வருகிறது.
திராவிட முன்னேற்றக் கழகம் 🔽
1. 1957 இல் முதன் முதலாக தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் களமிறங்கிய திராவிட முன்னேற்றக் கழகம் சேவல் மற்றும் உதயசூரியன் ஆகிய சுயேச்சை சின்னங்களில் போட்டியிட்டது. 1957 தேர்தலில் 15 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
2. 1962 இல் திராவிட முன்னேற்றக் கழகத்தை மாநில கட்சியாக அங்கீகரித்து உதய சூரியன் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. பலமுறை பிளவு கண்ட போதும் இந்தியாவில் ஒரே சின்னத்தை பறிகொடுக்காமல் தொடர்ந்து வைத்திருக்கும் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம் தான்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 🔽
1. 1972 இல் தொடங்கப்பட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.தி.மு.க) தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டது.
2. 1987 இல் எம்.ஜி.ஆர் காலமான பிறகு அ.தி.மு.க கட்சியானது ஜெயலலிதா அணி மற்றும் ஜானகி அணி என்று இரண்டாக பிரிந்தது.
3. அதை தொடர்ந்து நடைபெற்ற 1989 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.கவின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு ஜெயலலிதா அணி சேவல் சின்னத்திலும் ஜானகி அணி புறா சின்னத்திலும் போட்டியிட்டனர்.
4. 1989 தேர்தலுக்கு பிறகு ஒரு கட்டத்தில் ஜெயலலிதா அணியும் ஜானகி அணியும் இணைந்து மீண்டும் ஒரே அ.தி.மு.கவான பிறகு அக்கட்சிக்கு மீண்டும் இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டது.
5. 2016 இல் ஜெயலலிதா காலமான பிறகும் இரட்டை இலை சின்னம் பிரச்சனைகளை சந்தித்தது ஆனால் தப்பித்தது.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
1.முகவுரை
2.அரசியல் நிலையானது
3.வலதுசாரி x இடதுசாரி
4.ஆரியர் x திராவிடர்
5.பார்ப்பன இயக்கம்
6.திராவிட இயக்கம்
7.நீங்கள் எந்தப் பக்கம்?
8.அரசியலில் நடிகர்கள்
9.முடிவுரைchocksvlog.blogspot.com/2024/07/blog-p…
1.முகவுரை
நடிகர்கள் கட்சி தொடங்குவது என்பது சினிமா செய்தியா?அரசியல் செய்தியா? அல்லது விளையாட்டு செய்தியா? என்பது குறித்து சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஒரு வேளை அரசியல் செய்தியின் கீழ் வந்தால் நடிகர்கள் என்ன மாதிரியான அரசியலை முன்னெடுக்க போகிறார்கள் என்பது கவனிக்க வேண்டியதாகும்.
நாற்காலி அரசியல் தவறில்லை, ஆனால் பிரதான அரசியல் என்பது யார் அதிகாரத்தை வைத்திருக்கிறார்கள், அதை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதைச் சுற்றியே உள்ளது. முதலில், மக்களாகிய நாம் இந்திய அரசியலை வரலாற்று ரீதியாக எப்படி அணுகியுள்ளோம் என்பதை ஆராய்வோம்.
1970 களில் மேல ஆவணி மூல வீதி மதுரைக்காரர்கள் பட்டியலில் விஜயகாந்திற்கு முதன்மை இடம் உண்டு. தந்தையின் அரிசி ஆலையை கவனித்து வந்த விஜயகாந்த் வீட்டிற்கு அருகிலே தான் அய்யா (அப்பாவின் அப்பா) வீடும் இருந்தது.
அய்யாவின் வீட்டு திண்ணையை ஒட்டி விஜயகாந்த்தும் அவரது நண்பர்களும் (இப்ராஹிம், திருப்பதி, ராமு வசந்தன், சுந்தர்ராஜன், காசி போன்றோர்) மாலை வேளையில் அடிக்கடி அரட்டை அடிப்பதுண்டு. அய்யா வீட்டில் இருந்தால், மாலை வேளையில் திண்ணையில் தண்ணீரை ஊற்றி விடுவார்.
அந்நேரம் நண்பர்கள் குழு அருகிலுள்ள டீக்கடைக்கு போய் விடுவார்கள். அரிசி ஆலை, திண்ணை, டீக்கடை அரட்டை என்றிருந்தது விஜயகாந்த் படை. விஜயகாந்திற்கும் மேல ஆவணி மூல வீதிவாசிகளுக்குமான நேரடி பரிச்சயம் 1970 களின் இறுதி வரை நீடித்தது.
1. முகவுரை 2. என்ன பந்தயம்? 3. பந்தயத்தை ஏற்ற நண்பர் 4. சடலத்தின் அருகில் சடலமாய் 5. குற்றவாளியான நண்பர் 6. முடிவுரை 7. துணுக்கு செய்தி 8. விவரணைகள் chocksvlog.blogspot.com/2023/11/blog-p…
1977 ஆம் ஆண்டில் கோட்டயம் மருத்துவ கல்லூரியை சேர்ந்த நண்பர்களான இரண்டு மருத்துவ மாணவர்கள் துணிச்சலை பற்றி உரையாடினர். இவ்விவாதமானது அவர்களுக்கிடையே ஒரு பந்தயத்தை முன்மொழிவதில் முடிந்தது.
2. என்ன பந்தயம்?
“பகல் நேரத்தில் பிணவறையில் ஒரு சடலத்தின் உதட்டில் அடையாளக்குறியுடன் கூடிய சிகரெட் (Marked Cigarette) வைக்கப்படும் எனவும் பந்தயத்தை ஏற்பவர் நள்ளிரவு 12 மணிக்கு மருத்துவ கல்லூரியின் பிணவறைக்கு சென்று சடலத்தின் உதட்டில் இருந்து அந்த சிகரெட்டை எடுத்து வர வேண்டும்”
ஒரு பிரச்சனையை பற்றிய தகவல்களை கண்டறிய அல்லது பிரச்சனைக்கான காரணங்களை ஆராய அரசின் அதிகாரம் பெற்ற ஒரு நபர் அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களை கொண்ட குழுக்கள் "ஆணையம்" என்று அழைக்கப்படுகின்றன. நியமிக்கப்பட்ட ஒவ்வொரு ஆணையத்திற்கும் ஒரு கதை உள்ளது எனினும் பொதுவாக
ஆணையங்களை அமைப்பது பயனற்றது என்று பொதுமக்கள் நம்புகிறார்கள். அதே நேரத்தில் ஆணையங்களை அமைப்பது அடிப்படையற்றது என்று சில அரசியல்வாதிகள் பதறுகிறார்கள்.
மொத்தத்தில் ஆணையங்களால் ஒருபோதும் பயன் இருந்ததில்லை என்பது உண்மையா? அவ்வாறு இல்லை என்றே துணிந்து கூறலாம். ஏன்?