Chocks Profile picture
To Be Or Not To Be
Jul 1 40 tweets 5 min read
// நாற்காலி அரசியலும் அரசியல் சித்தாந்தங்களும் //

Blog Link 👇



பொருளடக்கம்

1.முகவுரை
2.அரசியல் நிலையானது
3.வலதுசாரி x இடதுசாரி
4.ஆரியர் x திராவிடர்
5.பார்ப்பன இயக்கம்
6.திராவிட இயக்கம்
7.நீங்கள் எந்தப் பக்கம்?
8.அரசியலில் நடிகர்கள்
9.முடிவுரைchocksvlog.blogspot.com/2024/07/blog-p… 1.முகவுரை

நடிகர்கள் கட்சி தொடங்குவது என்பது சினிமா செய்தியா?அரசியல் செய்தியா? அல்லது விளையாட்டு செய்தியா? என்பது குறித்து சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஒரு வேளை அரசியல் செய்தியின் கீழ் வந்தால் நடிகர்கள் என்ன மாதிரியான அரசியலை முன்னெடுக்க போகிறார்கள் என்பது கவனிக்க வேண்டியதாகும்.
Dec 28, 2023 22 tweets 3 min read
// மேல ஆவணி மூல வீதி டூ கோடம்பாக்கம் //

1970 களில் மேல ஆவணி மூல வீதி மதுரைக்காரர்கள் பட்டியலில் விஜயகாந்திற்கு முதன்மை இடம் உண்டு. தந்தையின் அரிசி ஆலையை கவனித்து வந்த விஜயகாந்த் வீட்டிற்கு அருகிலே தான் அய்யா (அப்பாவின் அப்பா) வீடும் இருந்தது. Image அய்யாவின் வீட்டு திண்ணையை ஒட்டி விஜயகாந்த்தும் அவரது நண்பர்களும் (இப்ராஹிம், திருப்பதி, ராமு வசந்தன், சுந்தர்ராஜன், காசி போன்றோர்) மாலை வேளையில் அடிக்கடி அரட்டை அடிப்பதுண்டு. அய்யா வீட்டில் இருந்தால், மாலை வேளையில் திண்ணையில் தண்ணீரை ஊற்றி விடுவார்.
Nov 29, 2023 13 tweets 3 min read
// பிணவறை வழக்கு //

Blog 🔽



பொருளடக்கம்

1. முகவுரை
2. என்ன பந்தயம்?
3. பந்தயத்தை ஏற்ற நண்பர்
4. சடலத்தின் அருகில் சடலமாய்
5. குற்றவாளியான நண்பர்
6. முடிவுரை
7. துணுக்கு செய்தி
8. விவரணைகள் chocksvlog.blogspot.com/2023/11/blog-p…

Image 1. முகவுரை

1977 ஆம் ஆண்டில் கோட்டயம் மருத்துவ கல்லூரியை சேர்ந்த நண்பர்களான இரண்டு மருத்துவ மாணவர்கள் துணிச்சலை பற்றி உரையாடினர். இவ்விவாதமானது அவர்களுக்கிடையே ஒரு பந்தயத்தை முன்மொழிவதில் முடிந்தது.
Nov 4, 2023 6 tweets 1 min read
// இஸ்ரேலிய-பாலஸ்தீன மோதலின் தமிழ் சுருக்கம் //

1. ஆபிரகாமின் வழித்தோன்றல்களான பண்டைய இஸ்ரவேலர்கள் கானானில் குடியேறினர்.

2. கானானில் ஏற்பட்ட பஞ்சம் இஸ்ரவேலர்களை எகிப்துக்கு குடிபெயர வழிவகுத்தது, அங்கு அவர்கள் இறுதியில் அடிமைப்படுத்தப்பட்டனர். 3. பத்து கட்டளைகளை பெற்ற பிறகு மோசே இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து வாக்களிக்கப்பட்ட தேசத்தை நோக்கி அழைத்து சென்றார்.

4. பாலைவனத்தில் தண்ணீர் வழங்கல் தொடர்பாக மோசேயின் கீழ்ப்படியாமை, அவரை வாக்களிக்கப்பட்ட தேசத்திற்குள் நுழைவதை தடுத்தது.
Oct 23, 2022 114 tweets 21 min read
எனது 150 வது கட்டுரையை பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். வாசகர்களின் தொடர் ஆதரவிற்கு நன்றி. 🙏

ஆணையமும் வரலாறும் Blog Link 🔽

chocksvlog.blogspot.com/2022/10/blog-p… 1.முகவுரை

ஒரு பிரச்சனையை பற்றிய தகவல்களை கண்டறிய அல்லது பிரச்சனைக்கான காரணங்களை ஆராய அரசின் அதிகாரம் பெற்ற ஒரு நபர் அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களை கொண்ட குழுக்கள் "ஆணையம்" என்று அழைக்கப்படுகின்றன. நியமிக்கப்பட்ட ஒவ்வொரு ஆணையத்திற்கும் ஒரு கதை உள்ளது எனினும் பொதுவாக
Oct 13, 2022 12 tweets 2 min read
// இன்றைய கேள்வி //

இதுவரை கிடைக்கப்பெற்ற தரவுகளின் அடிப்படையில் எகிப்திய, கிரேக்க, ரோமானிய மரபுகள் தமிழ் மரபை விட பழமையானவை.

ஆனால் எகிப்திய, கிரேக்க, ரோமானிய மரபுகள் வரலாற்றில் வீழ்ந்திட, தமிழ் மரபு மட்டும் இன்று வரை தழைத்தோங்குவதற்கு காரணம் என்ன? விடையாக பல்வேறு கருத்துகளை பகிர்ந்து கொண்ட தோழர்கள் அனைவருக்கும் நன்றி. 🙏

விடை 🔽

"எளிமையும் நெகிழ்வும்" தான் தமிழ் மரபு தொடர்ச்சியாக தழைத்தோங்க காரணம் என்பது சர்வதேச அளவில் வரலாற்று ஆசிரியர்கள் தரும் விடையாகும்.

Simplicity and Flexibility
Sep 27, 2022 55 tweets 9 min read
// பாவல் வழக்கு //

Blog Link 🔽

chocksvlog.blogspot.com/2022/09/blog-p…

சுருக்கம்

1.முகவுரை
2.பாவல் குடும்பம்
3.கதையின் தொடக்கம்
4.கதையின் திருப்பம்
5.சன்யாசியா ராஜாவா
6.நீதிமன்றத்தில் வழக்கு
7.ராஜா தரப்பின் வாதம்
8.மருத்துவரின் வாதம்
9.மாவட்ட நீதிமன்ற தீர்ப்பு
10.உயர்நீதிமன்ற தீர்ப்பு 11.பிரிவி கவுன்சில் தீர்ப்பு
12.தீர்ப்பும் மரணமும்
13.என்ன நோக்கம்?
14.தடயவியல் ஆய்வுத் துறை
15.முடிவுரை
16.விவரணைகள்

1.முகவுரை

சுதந்திரத்திற்கு முந்தைய பரபரப்பான வழக்குகளில் ஒன்றான "பாவல் வழக்கு" என்பது கிழக்கு வங்காளத்தில் (இன்றைய வங்கதேசம்) உள்ள பாவல் இராச்சியத்தின் மூன்று
Sep 25, 2022 7 tweets 2 min read
// இன்று ஒரு Joke //

ஒரே ஒரு நாள் பள்ளிக்கூடத்திற்கு வேண்டுமென்றே Shoe அணியாமல் Slipper அணிந்து வர யாருக்காவது தைரியம் உண்டா? என்று எட்டாம் வகுப்பு நண்பர்கள் பேசிக் கொண்டனர்.

நண்பர்கள் கூட்டத்தில் ஒருவன் அதனை ஒரு நாள் செய்து பார்த்தால் என்ன? என்று எண்ணி ஒரு திட்டம் தீட்டினான். ImageImage தண்ணீரில் Shoe நனைந்துவிட்டதால் Slipper அணிந்து வந்ததாக காரணம் சொன்னால் அவன் பொய் சொல்வதாக வகுப்பு ஆசிரியர் எண்ணக்கூடும் என்பதால் அவன் ஒரு வேலை செய்தான்.

அவன் காலில் ஒரு Medical Plaster யை ஒட்டிய பின் Slipper அணிந்து பள்ளிக்கூடத்திற்கு சென்றான். Image
Sep 14, 2022 31 tweets 8 min read
Anna with Periyar Image Anna with Kalaignar Image
Aug 21, 2022 10 tweets 2 min read
அரசியல் என்பது தொடர் போராட்டம் என்று சொல்வதை விட அரசியல் என்பது தொடர் செயல்பாடு தான்.

ஒரு நாளும் அது முடிவுக்கு வராது, வரவும் கூடாது.

அரசியல் முடிவுக்கு வரும் நாள் நம் பூமி அழியும் நாளாக தான் இருக்க முடியும். மேலும் அரசியல் என்பதே சிறு தீமைக்கும் பெருந்தீமைக்கும் இடையே நடக்கும் போட்டி தான்.

இப்படிப்பட்ட அரசியலில் "ஊழல்" என்பது நடைமுறை பிரச்சனை.

ஊழலை நியாயப்படுத்த முடியாது ஆனால் ஒரு வேளை ஊழல் ஒழிந்துவிட்டால் அனைத்து கட்சிகளையும் இழுத்து மூடி விட முடியுமா?
Aug 18, 2022 4 tweets 1 min read
// "எந்திரன்" அனுபவம் //

மதுரையில் கீஷ்டு கானம் கடையில் முதல் நாள் ஆடியோ சிடி வெளியீடு பிரசித்தி பெற்றது.

ஆடியோ சிடி வெளியாகும் முதல் நாளில் "ரசிகர்கள் ஒன்றாக கூடுவதற்கு முன்னரே" எந்திரன் ஆடியோ சிடியை கீஷ்டு கானம் கடையில் முதல் நபராக தனியாக வாங்கியதை எண்ணி பார்க்கிறேன். 😅 எப்படி?

அன்று சுமார் காலை *5:45 மணியளவில் ஊழியர்கள் குட்டி யானையில் இருந்த ஆடியோ சிடி பெட்டிகளை எடுத்து கடையில் அடுக்கி வைத்து கொண்டு இருந்தார்கள்.

அப்போது ஒரு ஊழியரிடம் எந்திரன் ஆடியோ சிடியை வாங்கி கொண்டேன்.

*முதல் நாளே தோராயமான நேரத்தை கடையில் கேட்டு வைத்து கொண்டேன்.
Aug 18, 2022 7 tweets 1 min read
// அவை சான்றோர்களுக்கும் நண்பர்களுக்கும் ஒரு வேண்டுகோள் //

அன்றாடம் "பா.ஜ.க, காங்கிரஸ், அ.தி.மு.க, தி.மு.க மற்றும் எந்த வகையான செய்திகள்" குறித்தும் வெளிவரக்கூடிய எந்த ஒரு ஊடக செய்தியையும் நம்புவதற்கு முன்னர் "மூளையை கசக்கி" ஒரு முடிவுக்கு வரவும்.

நிற்க... Image எப்பேர்ப்பட்ட செய்திகளில் எல்லாம் அவசரப்படக் கூடாது?

என்னைப் பொறுத்த வரையில் எதிலுமே அவசரப்படக் கூடாது.

அரசு அல்லது அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மக்கள் பிரச்சனை ஆங்காங்கே எழுந்தால் "அதன் முழுமையான நடவடிக்கை தெரிய வரும் வரை" காத்திருக்க வேண்டும்.
Aug 18, 2022 6 tweets 1 min read
ஊடகங்கள் எந்தவொரு செய்தியையும் வெளியிடுவதற்கு ஒரு வரைமுறை இருக்கிறது.

ஒன்றிய இந்தியாவில் அதெல்லாம் செத்து காலங்கள் உருண்டோடி விட்டதோ?

"அந்த ஊடகம்" தமிழ்நாட்டில் நுழைந்ததற்கான காரணங்களும் வெளிப்படையானது.

நான் தி.மு.கவுக்கு முட்டு கெடுப்பதாக சிலர் நினைக்கலாம் ஆனால் அப்படி அல்ல. P.T.R ஒன்றிய அரசுக்கு எதிராக தொலைக்காட்சியில் அதிரடியாக பேசிய கண நேரத்தில் நரிக்குறவர் பெண்ணின் பேட்டி Trending செய்யப்படுகிறது.

ஊடகத்தின் Hidden Agenda தானே காரணமாக இருக்க முடியும்?

அந்த பேட்டி எங்கு எப்போது எடுக்கப்பட்டது?

அந்த பேட்டி ஏன் நேற்று வெளியிடப்பட்டது?
Aug 9, 2022 36 tweets 8 min read
// QWERTY விசைப்பலகையில் வரலாறு //

Typewriting பற்றி பலரும் தங்களின் நினைவுகளை அசைபோட்டது மகிழ்வுக்குரியது. 👌

Typewriting பாடத்தின் அடிப்படை "விரல்கள் இலகுவாக விளையாட வேண்டும்". அதற்கு வித்திட்டது QWERTY விசைப்பலகை (Keyboard). அதன் வரலாறை பற்றி சுருக்கமாக காண்போம். வாருங்கள்! // பொருளடக்கம் //

1.முகவுரை
2.ஆரம்பகால தட்டச்சு இயந்திரம்
3.அகரவரிசையும் சிக்கலும்
4.தந்தியும் சிக்கலும்
5.விசைப்பலகை பரிசோதனைகள்
6.QWERTY விசைப்பலகை
7.ரெமிங்டன் எண் 1 தட்டச்சு இயந்திரம்
8.ரெமிங்டன் எண் 2 தட்டச்சு இயந்திரம்
9.தரநிலையாக QWERTY
10.Dvorak விசைப்பலகை
Apr 18, 2022 46 tweets 9 min read
// புலம்பெயர்ந்தோரும் சமூக நீதியும் //

Blog Link 🔽

chocksvlog.blogspot.com/2022/04/blog-p…

சுருக்கம்

1.முகவுரை
2.புலம்பெயர்ந்தோரும் கோவிட் பெருந்தொற்றும்
3.ஐ.நா சபையின் பங்கு
4.புலம்பெயர்ந்தோரை அணுகுதல்
5.சட்டமும் தார்மீகமும்
6.அரசியல் அடிப்படை
7.கொள்கைகளை உருவாக்குதல் 8.அரசு நிர்வாக உரிமைகள்
9.புலம்பெயர்ந்தோர் உரிமைகள்
10.குடியேற்றத்தை குற்றமற்றதாக்கு
11.முடிவுரை
12.விவரணைகள்

குறிப்புகள்

# ஒருவரின் சொந்த நாட்டிலிருந்து வெளியேறுவது புலம்பெயர்தல் (Emigrate) எனப்படும்.

# ஒரு வெளிநாட்டில் நுழைவது குடியேற்றம் (Immigrate) எனப்படும்.
Mar 24, 2022 64 tweets 12 min read
// தேசியப் பங்குச்சந்தை இணை இருப்பிட ஊழல் // 🔁

Blog Link 🔽

chocksvlog.blogspot.com/2022/03/blog-p…

சுருக்கம்

1.முகவுரை
2.Moneylife கட்டுரை
3.யாரிந்த சித்ரா ராமகிருஷ்ணன்?
4.யாரிந்த ஆனந்த் சுப்ரமணியன்?
5.ஆனந்த் சுப்ரமணியத்தின் நியமனம்
6.என்ன ஊழல்?
7.என்ன நடந்தது? 8.யோகியும் சித்ரா ராமகிருஷ்ணாவும்
9.ஆனந்த் சுப்பிரமணியனும் மின்னஞ்சலும்
10.என்ன உத்தரவுகள்?
11.இந்திய ஊடகங்களின் மௌனம்
12.முகவுரை

1.முகவுரை

முன்பின் காலகட்டங்களை (Non-linear Time Zone) உள்ளடக்கி எழுதப்பட்டுள்ள இக்கட்டுரையை கவனமாகவும் பொறுமையாகவும் வாசிக்க வேண்டுகிறேன்.
Mar 14, 2022 5 tweets 1 min read
அவரவர் வெல்வதற்கும் வீழ்வதற்கும் அவரவர் தான் காரணம் என்று சொல்வது ஏற்கக்கூடியதே.

அதே நேரத்தில் காரணங்கள் எல்லாம் நியாயங்கள் ஆகாது எனினும் நாம் கூட்டமாக வாழக்கூடிய இச்சமூகத்தில் நமது வெற்றிக்கும் தோல்விக்கும் வித்திடும் சமூக காரணிகளை எளிதில் புறந்தள்ளி விட முடியாதே. மேலும் அவரவர் வெற்றி தோல்வி சரித்திரத்தின் பின்னணியில் இருக்கின்ற தத்துவங்களையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நம்மால் முடியவில்லை நமக்கு பிடிக்கவில்லை என்பதாலே தத்துவங்களை புறந்தள்ளி விட முடியாது.

// கூட்டுச் சமூகமும் சமூக காரணியும் அதன்பால் எழுந்த தத்துவமும் உண்மையானது //
Mar 12, 2022 11 tweets 3 min read
#RussiaUkraineWar

#NATO

உலக நாடுகளை ஒருங்கிணைத்து ஒற்றை அரசாக ஆள அமெரிக்கா விரும்பும் "புவிசார் அரசியல்" (Geopolitics) திட்டம் எதிர்காலத்தில் முழு வெற்றி பெறுமா அல்லது நாடுகளின் பிரிவினைகளே அதிகரிக்குமா?

புரட்சியா?

எதிர்ப்புரட்சியா? Image வல்லரசாக கடல் சார்ந்த ஆதிக்கம் அவசியம் என்பது ஒரு புறம் இருந்தாலும் நிலம் சார்ந்த ஆதிக்கமும் முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

அவ்வகையில் கடந்த 100 ஆண்டுகளாக புவிசார் அரசியலில் கிழக்கு ஐரோப்பா முக்கியத்துவம் பெறுகிறது.

நிற்க! ⬇️
Feb 6, 2022 12 tweets 2 min read
ஹிஜாப் பிரச்சினையை களமாக வைத்து "ஹிஜாப் தேவையா? இல்லையா?" என்று இடதுசாரிகள் பேச வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பதே வலதுசாரிகள் தான்.

சுருங்கச் சொன்னால் "ஹிஜாப் தேவையா? இல்லையா?" என்ற விவாதத்தை கிளப்பிய வகையில் அரசியல் காய் நகர்த்தலில் வலதுசாரிகள் வெற்றி பெற்றுவிட்டனர். ஹிஜாப் தேவையா? இல்லையா? என்று மதத்தை முன்னிலைப்படுத்தாத இடதுசாரிகள் பேசும் கொள்கை வேறு.

ஹிஜாப் தேவையா? இல்லையா? என்று இந்துத்துவா அல்லது இஸ்லாம் மதத்தை முன்னிலைப்படுத்தும் வலதுசாரிகள் பேசும் கொள்கை வேறு.

இடதுசாரிகள் பேச பேச வலதுசாரிகளுக்கு லாபம் தான்.

ஏன் அப்படி?
Feb 6, 2022 75 tweets 15 min read
// மந்திரி ஆகாத ஒரு ராஜாவின் கதை //

சுருக்கம்

1.முகவுரை
2.தொடக்க காலம்
3.இளமைக் காலம்
4.சிந்தித்து முடிவெடுத்தார்
5.சிகையலங்கார நிபுணரின் பார்வை
6.முயற்சியும் வெற்றியும்
7.உடலால் மறைந்தார்
8.புகழுரைக்கு உரியவர்
9.சதி கோட்பாடுகள்
10.முடிவுரை
11.இதர செய்திகள்
12.விவரணைகள் 1.முகவுரை

என்னடா “மந்திரி ஆகாத ஒரு ராஜாவின் கதை” என்று தலைப்பே பீடிகையாக இருக்கிறதே என்று யோசிக்கிறீர்களா? ஹா ஹா. 1970களில் உலக திரைப்பட ரசிகர்களின் மனதில் மந்திரி ஆக கட்டி ஆண்ட ராஜாவான ஒருவரை பற்றி தான் காண இருக்கிறோம்.
Feb 5, 2022 5 tweets 1 min read
இலை நண்பரிடம் "உங்க ஏரியா எப்படி இருக்கு? என்ன சொல்றாய்ங்க" என்று வினவினேன்.

அவரும் "கண்டிப்பா அண்ணன் ஜெயிச்சுருவாப்லன்னு சொல்றாய்ங்க" என்றார்.

திரும்ப "ஓ! யாருங்க சொன்னா?" என்று வினவினேன்.

அவரும் "நம்ம அண்ணன் கூட வீதியில் உடன் வர ஆளுங்க தான் குஷியாக சொன்னாய்ங்க" என்றார். நான் "ஏங்க! கூட வந்த பயலுக அண்ணன் ஜெயிச்சுருவாப்லன்னு தான் சொல்வாய்ங்க அப்புறம் தோப்பாருன்னு வேற சொல்வாய்ங்களா? ஆனா பாருங்க தேர்தல்ல வெற்றி தோல்வி என்பது உடன் சுத்தும் ஆதரவாளர்கள் தீர்மானிப்பது இல்ல. எவன் என்ன கட்சின்னு கணிக்க முடியாத பொதுமக்கள் தீர்மானிக்க வேண்டியது" என்றேன்.