#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஆஞ்சநேயர் சிவ கடாக்ஷம் பெற்றவர். மகேசனின் மற்றொரு ரூபம், சிரஞ்சீவி. ஹனன் - அழிப்பவர், மன் - மனம்.
தான் எனும் அகங்காரத்தை மனதிலிருந்து அழிப்பவராதலால்
ஹனுமான் என்று பெயர். கர்ணனைப் போலவே காதணிகளுடன் பிறந்தவர். வாயு, கருடனைவிட வேகமாகச் செல்லும் சக்தியை பிரம்மா
வரமாக கொடுத்துள்ளார். சூரியனைத் தன் குருவாகக் கொண்டவர். குருதட்சணையாக தன் மகன் சுக்ரீவனுக்குக் கடைசி வரை துணையாக இருக்கும்படி சூரியன் கேட்டுக் கொள்ள, அதன்படி வாலியிடமிருந்து அரசுரிமையைப் பெற்றுத் தந்தார். குருவணக்கமாக சூரிய நமஸ்காரத் தோத்திரத்தை பாடியவர். தகப்பனார் வாயு பகவானிடம்
இருந்து பிராணாயாமம் கற்று, பின் அதை மனித குலத்துக்கு அருளியவர். இலங்கேசுவரனின் பிடியிலிருந்து நவக்கிரகங்களை மீட்டதால், கோள்கள் அவருக்குக் கீழ்படியும் என்பது ஐதீகம். ஏழரை ஆண்டுச் சனியாக அனுமனைப் பிடித்த சனீஸ்வரன், ஏழரை நிமிடங்கள் கூட இவரிடம் தாக்குப் பிடிக்கமுடியாமல் விட்டு
விட்டான். அந்த வரலாறு தெரியாதோர் தொடர்ந்து படிக்கவும். ‘அனுமனே, நான் சனீஸ்வரன் வந்திருக்கிறேன். உனக்கு ஏழரை சனி காலம் வந்து விட்டதால் உன்னைப் பிடிக்க வந்திருக்கிறேன். உன்னைப் பிடிக்க உன் உடலில் ஏதேனும் ஒரு இடம் கொடு’ என்றார் அவர் முன் தோன்றிய சனீஸ்வர பகவான். அதற்கு அனுமனோ,
இராவணனின் சிறையில் இருக்கும் சீதா தேவியை மீட்டு ஸ்ரீ ராமனிடம் சேர்க்க சேது பந்தனப் பணியை மேற்கொண்டு வருகிறேன். சீதா தேவியை ராமனிடம் சேர்த்ததும் நானே உன்னைத் தேடி வருகிறேன். அப்போது என் உடல் முழுவதும் நீங்கள் வியாபித்துக் கொண்டு என்னை ஆட்டிப் படைக்கலாம் என்றார். சனி பகவானோ, நான்
சரியான காலத்தில் ஒருவரைப் பிடித்து, சரியான காலத்தில் விலகுபவன். காலதேவன் நிர்ணயித்த விதியை நானும் மீற முடியாது. நீயும் மீற முடியாது. அதனால் உன் உடலில் எந்த பாகத்தில் நான் பிடிக்கலாம் என்பதை கூறு என்றார். தனது கையால் ஸ்ரீ ராம ஜெயம் என பாறைகளுக்கு எழுதிக் கொண்டிருக்க, தோளில்
சுமந்து காலால் நடந்து கடலில் போடுவதால் இங்கெல்லாம் பிடிக்க வேண்டாம், வேண்டுமென்றால், உடலுக்கு தலையே பிரதானம் என்பதால் என் தலை மீது அமர்ந்து கொண்டு உங்கள் கடமையை செய்யுங்கள் என்றார் அனுமன். அதுவரை சாதாரண பாறையை சுமந்து வந்த அனுமன், சனீஸ்வரன் தலை மீது அமர்ந்த பின், முன்பை விட
மிகப்பெரிய பாறைகள் மீது ஜெய் ஸ்ரீ ராமன் என எழுதி தன் தலை மீது சுமந்து கடலில் வீசினார். இதுவரை அனுமன் சுமக்கும் பெரிய பாறைகளின் பாரம் அனுமன் சுமந்து கொண்டிருந்தார். ஆனால் தற்போது அனுமனின் தலையில் அமர்ந்திருந்த சனீஸ்வரன் சுமக்க வேண்டியதாக இருந்தது. இதனால் பாரத்தை தாங்க முடியாத
சனீஸ்வரன் சிறிது நேரத்தில் அனுமனின் தலையிலிருந்து கீழே குதித்தார். ஏழரை ஆண்டுகள் பிடிப்பதாக கூறி அதற்குள் என்னை விட்டுவிட்டீர்களே என அனுமன் கேட்க, பரமேஸ்வரனின் அம்சமான உங்களை கடந்த யுகத்தில் பிடித்து வெற்றி பெற்றேன். இந்த முறை தோல்வி அடைந்து விட்டேன் என்றார். இல்லை இந்த முறையும்
வென்றுள்ளீர்கள். அதாவது ஏழரை ஆண்டுகளுக்கு பதிலாக ஏழரை விநாடி என்னைப் பிடித்துக் கொண்டீர்கள் என அனுமன் கூறினார். ஸ்ரீ ராம ஜெயம் என எழுதிய பாறையை என் மீது வைத்து சுமந்ததால் நானும் ராம சேவையில் ஈடுபட்ட பாக்கியம் கிடைத்தது. அதனால் உனக்கு ஏதேனும் ஒரு வரம் தர விரும்புகிறேன் என்றார் சனி
அனுமனோ, “ராம நாமத்தை பக்தியுடன் உச்சரிப்பவருக்கு ஏழரை சனி காலமாக இருந்தாலும், அவருக்கு ஏற்படும் துன்பங்களில் இருந்து நீங்கள் தான் காத்தருள வேண்டும்” என்ற வரத்தை கேட்டார். அன்று முதல் ஏழரை சனி பிடித்தவர்கள் மிக சிறந்த பரிகாரமாக ஸ்ரீ ராமனையும், அனுமனையும் வழிபாடு செய்வது நன்மையை
தரும் என்ற பரிகாரம். அனுமனை வழிபட்டால் சனி பகவான் தோஷம் நீங்கும். கெட்டியாகப் பிடிப்போம் அனுமனை, நல் வழி காட்டுவார். ஆஞ்சநேய பகவானை வழிபட்டு எல்லா வளமும் பெறுவோம்.
ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஹனுமான், ஜெய் மாருதீ, ஜெய் ஜெய் ஆஞ்சநேயா.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.