அன்பெழில் Profile picture
நம்புவதை பகிர்ந்து நன்மை செய்வோம்.

Feb 7, 2022, 8 tweets

மதுரையில் தாய் மீனாட்சி கிளி வைத்திருப்பதைப் போல #பழநி மலையில் முருகன் கையிலுள்ள தண்டத்திலும் ஒரு கிளி இருக்கிறது. அதன் ரகசியம் என்ன? முருகனின் அருள்பெற்ற அருணகிரியார் மீது பொறாமை கொண்ட சம்பந்தாண்டான் என்னும் புலவன் அவரை பழிவாங்க நினைத்தான். ஒருசமயம் அவன் வஞ்சனையால்

பிரபுடதேவராயன் என்னும் மன்னன் மூலமாக அருணகிரிநாதரை பாரிஜாத மலர் பறித்துவரும்படி கட்டளையிட செய்தான். அருணகிரியார் தன் உயிரை ஒரு கிளியின் உடலில் செலுத்தி, உடலை திருவண்ணாமலை கோபுரத்தில் கிடத்திவிட்டு தேவலோகம் சென்று பாரிஜாதம் கொண்டு வந்தார். இதனிடையே சம்பந்தாண்டான் அவரது உடலை தகனம்

செய்துவிட்டான். கிளி வடிவில் திரும்பிய அருணகிரியார் தன் உடல் காணாமல் போனதால் திகைத்தார். முருகன் அவருக்கு அருள் செய்து தன் தண்டத்தில் அமர்த்திக் கொண்டார். இந்த அமைப்பில், தண்டத்தில் கிளி வடிவில் அருணகிரியாருடன் முருகன்காட்சி தருகிறார்.
#கந்தர்_அனுபூதி
ஆனா அமுதே அயில் வேலரசே

ஞானா கரனே நவிலத் தகுமோ யானாகிய வென்னை விழுங்கி வெறுந்தானாய் நிலை நின்றதுதற் பரவே,
- அருணகிரிநாதர்
பொருள் : கெடுதலும் அழிவும் இல்லாத அமுதம் போன்றவனே, கூரிய வேலாயுதத்தை கையில் ஏந்திய மன்னவனே, ஞானத்திற்கு இருப்பிடமானவனே, நான் என்னும் ஆணவ முனைப்பில் அழுந்தி இருக்கும் என்னிடமிருந்து

ஜீவபோதத்தை போக்கி சிவபோதத்துள் அடக்கி, வேறு ஒன்றும் இல்லாது எல்லாம் தானேயாய், நிலைத்திருப்பதான, மேலான நிலையை சொல்லத் தக்கதோ!
முருகன் முதலில் கோபித்து வந்து நின்ற தலம் என்பதால், மலை அடிவாரத்திலுள்ள திருஆவினன்குடி தலமே மூன்றாம் படை வீடு ஆகும்.
இங்கு முருகன் மயில் மீது அமர்ந்த

கோலத்தில் காட்சியளிக்கிறார். முருகன் குழந்தை வடிவமாக இருப்பதால் இவருடன் வள்ளி, தெய்வானை இல்லை. இவர் சிவனின் அம்சம் என்பதால் இவரது கருவறை சுற்றுச்சுவரில் தெட்சிணாமூர்த்தி, பிரகாரத்தில் பைரவர், சண்டிகேஸ்வரரும் இருக்கின்றனர். பழநிக்கு செல்பவர்கள் முதலில் இங்கிருந்து 4 கி.மீ.

தூரத்திலுள்ள பெரியாவுடையாரை தரிசித்துவிட்டு, பின்பு பெரியநாயகியையும், அடுத்து மலையடிவாரத்தில் இருக்கும் திருவாவினன்குடி குழந்தை வேலாயுதரையும் வணங்க வேண்டும். அதன்பின்பே மலைக்கோயிலில் தண்டாயுதபாணியை வணங்க வேண்டும் என்பது ஐதீகம்.
ஓம் சரவண பவ.
ஸ்ரீ சஷ்டி பகவான் அருளாளே இன்றைய நாளும்

திருநாளாகட்டும்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling