அன்பெழில் Profile picture
Feb 7, 2022 8 tweets 3 min read Read on X
மதுரையில் தாய் மீனாட்சி கிளி வைத்திருப்பதைப் போல #பழநி மலையில் முருகன் கையிலுள்ள தண்டத்திலும் ஒரு கிளி இருக்கிறது. அதன் ரகசியம் என்ன? முருகனின் அருள்பெற்ற அருணகிரியார் மீது பொறாமை கொண்ட சம்பந்தாண்டான் என்னும் புலவன் அவரை பழிவாங்க நினைத்தான். ஒருசமயம் அவன் வஞ்சனையால்
பிரபுடதேவராயன் என்னும் மன்னன் மூலமாக அருணகிரிநாதரை பாரிஜாத மலர் பறித்துவரும்படி கட்டளையிட செய்தான். அருணகிரியார் தன் உயிரை ஒரு கிளியின் உடலில் செலுத்தி, உடலை திருவண்ணாமலை கோபுரத்தில் கிடத்திவிட்டு தேவலோகம் சென்று பாரிஜாதம் கொண்டு வந்தார். இதனிடையே சம்பந்தாண்டான் அவரது உடலை தகனம்
செய்துவிட்டான். கிளி வடிவில் திரும்பிய அருணகிரியார் தன் உடல் காணாமல் போனதால் திகைத்தார். முருகன் அவருக்கு அருள் செய்து தன் தண்டத்தில் அமர்த்திக் கொண்டார். இந்த அமைப்பில், தண்டத்தில் கிளி வடிவில் அருணகிரியாருடன் முருகன்காட்சி தருகிறார்.
#கந்தர்_அனுபூதி
ஆனா அமுதே அயில் வேலரசே
ஞானா கரனே நவிலத் தகுமோ யானாகிய வென்னை விழுங்கி வெறுந்தானாய் நிலை நின்றதுதற் பரவே,
- அருணகிரிநாதர்
பொருள் : கெடுதலும் அழிவும் இல்லாத அமுதம் போன்றவனே, கூரிய வேலாயுதத்தை கையில் ஏந்திய மன்னவனே, ஞானத்திற்கு இருப்பிடமானவனே, நான் என்னும் ஆணவ முனைப்பில் அழுந்தி இருக்கும் என்னிடமிருந்து
ஜீவபோதத்தை போக்கி சிவபோதத்துள் அடக்கி, வேறு ஒன்றும் இல்லாது எல்லாம் தானேயாய், நிலைத்திருப்பதான, மேலான நிலையை சொல்லத் தக்கதோ!
முருகன் முதலில் கோபித்து வந்து நின்ற தலம் என்பதால், மலை அடிவாரத்திலுள்ள திருஆவினன்குடி தலமே மூன்றாம் படை வீடு ஆகும்.
இங்கு முருகன் மயில் மீது அமர்ந்த
கோலத்தில் காட்சியளிக்கிறார். முருகன் குழந்தை வடிவமாக இருப்பதால் இவருடன் வள்ளி, தெய்வானை இல்லை. இவர் சிவனின் அம்சம் என்பதால் இவரது கருவறை சுற்றுச்சுவரில் தெட்சிணாமூர்த்தி, பிரகாரத்தில் பைரவர், சண்டிகேஸ்வரரும் இருக்கின்றனர். பழநிக்கு செல்பவர்கள் முதலில் இங்கிருந்து 4 கி.மீ.
தூரத்திலுள்ள பெரியாவுடையாரை தரிசித்துவிட்டு, பின்பு பெரியநாயகியையும், அடுத்து மலையடிவாரத்தில் இருக்கும் திருவாவினன்குடி குழந்தை வேலாயுதரையும் வணங்க வேண்டும். அதன்பின்பே மலைக்கோயிலில் தண்டாயுதபாணியை வணங்க வேண்டும் என்பது ஐதீகம்.
ஓம் சரவண பவ.
ஸ்ரீ சஷ்டி பகவான் அருளாளே இன்றைய நாளும்
திருநாளாகட்டும்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Jun 21
#ஸ்ரீமகாலட்சுமி_தாயார் #பெரியபிராட்டி
1. பிறப்பினால் பெருமை
பாற்கடலில் அவதாரம் செய்தார் மகாலட்சுமி. அம்ருதத்தை பெறுவதற்காக பெருமாள் பாற்கடலை கடைந்தார் என்று சொல்வதை விட மகாலட்சுமியை பெறவே அவர் பாற்கடலை கடைந்தார் என்று சொல்வது தான் சரி. அம்ருதம் சக்கை மாதிரி. தாயார் தான் சாரம்.Image
தாயார் தோன்றினார், எல்லாரும் பார்த்துக் கொண்டே இருக்கும்போது அவர் பெருமாளின் திருமார்பில் போய் நிலையாக தங்கிவிட்டார். தாயாரின் பிறப்பின் பெருமை அத்தகையது!

ஜனகர் யாகத்துக்காக நிலத்தை உழும்போது நிலத்தில் கிடைத்தவள் தாயார் சீதாப்பிராட்டி. பெருமாளுடைய அவதாரத்தைக் காட்டிலும் Image
தாயாருடைய அவதாரம் மிகச் சிறந்ததாகும். பெருமாளாவது சில சமயம் தேவகி கௌசல்யா இவர்களின் பிரார்த்தனைக்கு இணங்க அவர்களின் கர்ப்பத்தில் வாசம் செய்தார். ஆனால் தாயார் அப்படி இல்லை. அயோனிஜையாகப் பிறந்தாள். அது தான் தாயாரின் மிகப் பெரிய ஏற்றம்.

பிருகு மகரிஷி பிரார்த்தித்தார் என்று Image
Read 13 tweets
Jun 20
#தண்டு_மாரியம்மன்
கோவை காந்திபுரம் பஸ் நிலையத்தல் இருந்து அவினாசி சாலையில் 1.5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது அன்னை தண்டு மாரியம்மன் திருக்கோவில். அழகிய 3 நிலை ராஜகோபுரம். உள்ளே நுழைந்ததும் மகா மண்டபத்தில் பலிபீடம், கொடிமரம் ஆகியவை உள்ளன. கருவறையில் அன்னை தண்டு மாரியம்மன் வடக்கு Image
திசை நோக்கி அமர்ந்த நிலையில், புன்னகை தவழும் இன்முகத்துடன் அருள் பாலிக்கிறாள். அன்னைக்கு 4 கரங்கள். மேல் 2 கரங்களில் சுதையையும் கத்தியையும் தாங்கி, கீழ் இரு கரங்களில் சங்குடனும், அபய முத்திரையுடனும் அன்னை அருள் பாலிக்கிறாள். தனது இடது காலை மடித்து வலது காலை தொங்கவிட்ட நிலையில் Image
அன்னை காட்சி தருகிறாள்.
அன்னையின் தேவக்கோட்டத்தின் கிழக்குப் பகுதியில் ராஜ கணபதியும், எருமை தலைமீது வெற்றிக் களிப்புடன் துர்க்கையும், தென் பகுதியில் தட்சிணா மூர்த்தியும், மேற்கு பகுதியில் மகாலட்சுமியும் பால முருகனும் அருள் பாலிக்கின்றனர். நுழைவாயிலில் மகிஷாசுரமர்த்தினி, கஜலட்சுமி
Read 15 tweets
Jun 20
#உண்மையான_பக்தி
தெய்வம் என் அருகே அமர்ந்து கொண்டிருக்கிறது. என் பக்தியின் வலிமையே வலிமை என அர்ஜூனனின் மனம் பாரதப் போரின் வெற்றியில் திளைத்துக் கொண்டிருந்தது. உன்னைவிட என்மேல் கூடுதலாக பக்தி செலுத்துபவர்கள் உலகில் இருக்கக் கூடாதா என்று கிருஷ்ணர் கேட்டார்.

என் மனத்தில் ஓடுகிற
Image
Image
எந்த சிறு சிந்தனையையும் உடனே படித்து விடுகிறானே கிருஷ்ணர் என அர்ஜூனன் திடுக்கிட்டான். அர்ஜூனனின் பக்தி சார்ந்த கர்வத்தை அடக்க கிருஷ்ணர் முடிவு செய்தார். அர்ஜூனா நான் பெரிதும் மதிக்கும் எனது பக்தை பிங்கலை இங்கே அஸ்தினாபுரத்தின் அருகில் வசிக்கிறாள். அவளை சென்று சந்திப்போம் வா
என்று கிருஷ்ணர் அழைத்தார். இதே தோற்றத்தில் போனால் உன் உயிருக்கு ஆபத்து நேரலாம். நான் பெண்ணாக மாறுகிறேன். நீயும் என் தோழியாக மாறு என்றான். சற்று நேரத்தில் அரண்மனையிலிருந்து கிருஷ்ணரும் அர்ஜூனனும் பெண்களாக மாறி பிங்கலையின் வீட்டுக் கதவை தட்டினர். தெய்வீக ஒளியுடன் ஒரு மூதாட்டி
Read 19 tweets
Jun 20
#நற்சிந்தனை
திருப்பதி பெருமாளுக்கு பூ கட்டும் திருப்பணியைச் செய்தவர் #அனந்தாழ்வான் என்ற அடியவர். ஒருநாள் பூக்கள் தொடுக்கும் போது பாம்பு அவரது விரலைத் தீண்டியது. பதறாமல் பூமாலை கட்டி பெருமாளுக்கு சாற்றப் போனார். பெருமாள் பதறினாராம். பாம்பு கடித்துவிட்டதே என்று பெருமாள் கூறியதற்கு Image
அனந்தாழ்வார், "சுவாமி, கடித்த பாம்புக்கு விஷம் அதிகம் என்றால் கைங்கர்யம் அங்கே. கடியுண்ட பாம்புக்கு விஷம் அதிகமானால் கைங்கர்யம் இங்கே. பின் என்ன கவலை" என்றார். பாம்பு கடித்து விஷம் அதிகமானால் வைகுந்தம். அங்கும் மாலை கட்டி தொண்டு செய்யலாம். அப்படி இறக்கவில்லை என்றால் இங்கேயே Image
தொடர்ந்து திருப்பணி செய்யலாம் என்று உறுதியாக அனந்தாழ்வான் கூறினார்.

நம்மவர்களின் பலர் கஷ்டங்களால் சாவதை விட கஷ்டங்கள் பற்றிய கற்பனையிலேயே சாகிறார்கள். ஆபத்துகளைவிட ஆபத்துக்கள் பற்றிய கற்பனைதான் ஆபத்தானவை.

ரயில் வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. ஒருவர் தன் கையை வெளியே தொங்கவிட்டு
Read 8 tweets
Jun 19
#சந்திரமௌலீஸ்வரர்_ஆலயம்
அண்ணா நகர் சென்னை
இறைவன்: சந்திரமௌலீஸ்வரர்
இறைவி: திரிபுரசுந்தரி
சென்னை அண்ணாநகரில் பல
நூற்றாண்டுகளுக்கு முன் #பாலீஸ்வரர் என்ற பெயரில் ஒரு கோவில் இருந்துள்ளது. காலப் போக்கில் சிதைந்து கவனிப்பாரற்றுப் போய் விட்டது. அப்பகுதியை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் Image
கையகப்படுத்தி வீட்டுமனைகளாகப் பிரித்து ஒதுக்கீடு செய்தது. அப்போது அப்பகுதியை ஒட்டி காலியாக இருந்த மனையில் மண்ணுக்குள் புதைந்த நிலையில் ஒரு பெரிய சிவலிங்கம் இருந்தது கண்டறியப்பட்டது. அது சூரியபிம்ப வகையிலான அபூர்வ சிவலிங்கம் ஆகும். சிவலிங்கத்தைக் கண்ட அப்பகுதி மக்கள் அதை வெளியில் Image
எடுத்து மேற்கூரை அமைத்து வழிபட்டு வந்தனர். 1970-ஆம் ஆண்டு காஞ்சி மகாபெரியவரை நேரில் சந்தித்த மக்கள் இச்சிவலிங்கம் பற்றிய விவரங்களைத் தெரிவித்தனர். அப்போது அவர், அந்தச் சிவலிங்கம் முன்பு அந்தப் பகுதியில் இருந்த பாலீஸ்வரர் கோவிலுக்கு உரிய சிவலிங்கம் என்பதைத் தெரிவித்தார். Image
Read 14 tweets
Jun 19
#ஶ்ரீவைஷ்ணவம்
ஸ்ரீ வைஷ்ணவத்தில், ஸ்ரீ வைஷ்ணவர்கள் பத்து விதமாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்
1. அத்வேஷி
விஷ்ணுவின் பேரிலும் அவனது அடியார்களிடத்திலும் த்வேஷம் (வெறுப்பு) கொள்ளாமல் இருப்பவன் அத்வேஷி.

2. அனுகூலன்
அத்வேஷியாக இருப்பதோடு, வைஷ்ணவர்களோடு நட்புடன் நடந்து கொள்வது, பெருமாள் கோவிலுக்குச் செல்வது, உற்சவங்களில் கலந்து கொள்ளுதல், அடியவர்களைப் போற்றி, அவர்களுக்கு மரியாதை செய்து உபசரிப்பது, மற்ற வைஷ்ணவர்களோடு இணைந்து செயல்படுவது, இவற்றை விருப்பத்துடன் செய்பவன் அனுகூலன்.

3. நாமதாரி
முன்சொன்ன குணங்களோடு மஹாவிஷ்ணுவின் ஆயிரம் திருநாமங்களில் ஒன்றைத் தன் பெயராக வைத்திருப்பவன்.

4. சக்ராங்கி
மேலே சொன்ன மூன்றோடு, வேத சாஸ்திரங்களில் சொன்னபடி மஹாவிஷ்ணுவின் திவ்ய ஆயுதங்களான சங்கு சக்ர சிஹ்நங்களை ஆச்சார்யன் மூலமாகத் தன் தோள்களில் தரித்து, திருமண் காப்பு தரித்து இருப்பவன்.

5. மந்திரபாடி
முன் சொன்ன நான்கோடு, ஸகல ஐஸ்வர்யங்களையும் கொடுக்கவல்ல, பகவத் மந்த்ரமான திருவெட்டெழுத்து மந்த்ரத்தை ஆச்சார்யன் மூலமாக உபதேசம் பெற்று, ஜபித்து காரியஸித்தி பெறுபவன்.

6. வைஷ்ணவன்
மேலே சொன்ன ஐந்தையும் மேற்கொண்டு, ஐம்புலன் இன்பங்களையும், இதர தேவதைகளை வழிபடுவதையும் விட்டவன், மோக்ஷம் அடைவதற்கு உரிய வழிகளான கர்ம ஜ்ஞான அல்லது பக்தி மார்க்கங்களை கடைபிடிப்பவன்.

7. ஸ்ரீ வைஷ்ணவன்
முன் சொன்ன ஆறையும் கடைப்பிடித்து, அவிச்சின்ன தைலதாரைப்போல (ஒழுகுகின்ற எண்ணெயானது பிசிறு இல்லாமல் தொடர்ச்சியாக ஒழுகுவது போல) சிந்தனையானது வேறு நினைவு இல்லாமல், சிந்தாமல் சிதறாமல் மஹாலக்ஷ்மியுடன் கூடிய ஸ்ரீமந் நாராயணனை மட்டும் மனதில் நிறுத்தி, த்யானிப்பவன்.

8. ப்ரபந்நன்
மேலே சொன்ன 7 தகுதிகளோடு, பகவானை அடைவதற்கு ப்ரபத்தி நெறியாகிய சரணாகதியே தகுந்தது என்று ப்ரபத்தியை கடைபிடிப்பவன்.
வேத சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள கர்ம ஜ்ஞான பக்தி யோகங்களை கடைப்பிடிப்பது கடினமானது.
அப்படியே கடைப்பிடித்தாலும் பகவானை அடைய பலபிறவிகள் எடுக்க வேண்டி வரும். ஆகையால் சரணாகதியின் மூலமாகவே பகவானை அடையப் பாடுபடுபவன்.

9. ஏகாந்தி
முன்சொன்ன 8 தகுதிகளோடு, எம்பெருமானை அடைய தான் மேற்கொள்ளும் சரணாகதியும் ஏற்றதல்ல என்று முடிவு செய்து, அந்த பகவானையே உபாயமாகப் பற்றிக் கொள்ளுபவன்.

10. பரம ஏகாந்தி
மேற்சொன்ன ஒன்பது தகுதிகளோடு பகவானை அடைய சரணாகதி மேற்கொள்ளுவதும், பகவானை உபாயமாகப் பற்றிக்கொள்ளுவதும் கூட கடினமானதுதான். ஆகவே நமக்கு நல்லவழிகாட்டியாக இருக்கும் நல்லதொரு ஆச்சார்யனை சரணமடைந்து, அவர் மூலமாக எம்பெருமானை அடையலாம் என்று முடிவு எடுப்பவன்.Image
#வைஷ்ணவ_பரிபாஷை

பெருமாள் - ஸ்ரீமந் நாராயணன், விஷ்ணு

பிராட்டி- ஸ்ரீதேவி, லக்ஷ்மி, மற்றும் பூதேவி, நீளாதேவி

தாயார் -ஸ்ரீதேவி, லக்ஷ்மி, மற்றும் பூதேவி, நீளாதேவி

நம்பெருமாள்- ஸ்ரீரங்க கோவில் உற்சவர்

பெரிய பெருமாள் -ஸ்ரீரங்க கோவில் மூலவர்

பெரிய பிராட்டி- ஸ்ரீரங்கநாயகி (ஸ்ரீதேவி)

தேவ பெருமாள் -காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள்

உற்சவர்- கோவிலிலிருந்து வெளியே எழுந்து அருளும் மூர்த்தி

மூலவர்- கோவிலேயே நிரந்தரமாக எழுந்து அருளும் மூர்த்தி

செல்வர்- உற்சவரின் பிரதிநிதி (உற்சவரைப் போலவே வழிபடும் மூர்த்தி)

யாக பேரர்- பவித்ரோற்சவம் முதலிய உற்சவங்களில் யாகசாலையில் எழுந்து அருளும் உற்சவ மூர்த்தி.

கோயிலொழுகு- கோவிலின் வரலாறு

கிடந்த திருக்கோலம் - சயநினித்து எழுந்தருளும் சேவை.

வீற்றிருந்த திருக்கோலம்- அமர்ந்து எழுந்தருளும் சேவை.

நின்ற திருக்கோலம் -நின்றோ, நடந்தோ எழுந்தருளும் சேவை.

ஆழ்வார் - பொதுவாக 12 ஆழ்வார்களைக் குறிக்கும், குறிப்பாக ஆழ்வார் என்றால் நம்மாழ்வார்.

பெரிய உடையார் -ஜடாயு

இளைய பெருமாள் - இலக்குவன்/லக்ஷ்மணன்

எம்பெருமானார் - இராமாநுஜாசார்யன்

இளையாழ்வார் - இராமாநுஜாசார்யன்

யதிராசர் - இர்ராமாநுஜாசார்யன் (சன்யாசிகளின் தலைவன்)

யதீந்திரர் - இர்ராமாநுஜாசார்யன் (சன்யாசிகளின் தலைவன்)

ஸ்வாமி - முதலாளி

ஆழ்வான் - கூரத்தாழ்வான்

ஆண்டான் - முதலியாண்டான்

லோகாச்சார்யர் - நம்பிள்ளையின் மற்றொரு பெயர்

பட்டர் - பராச‌ர பட்டர்

நாயனார் - அழகிய மணவாள பெருமாள் நாயனார் (பிள்ளை லோகாச்சார்யரின் தம்பி)

வேதாந்தாசாரியார் - வேதாந்த தேசிகன்

ஜீயர் - ஸன்யாசி

பெரிய ஜீயர், யதீந்திர ப்ரவணர் - மணவாள மாமுனிகள்

வரத த்வய ப்ரஸாதம் - பிள்ளை லோகாச்சார்யார் - 2 வரதனுக்கான வெகுமதி - காஞ்சி வரதன், நம்பூர் வரதாச்சாரியார்

சடாரி (ஸ்ரீ சடகோபம்) - எம்பெருமானாரின் பாத கமலங்கள்

ஸ்ரீ ராமானுஜம் - ஆழ்வார்திருநகரியிலுள்ள நம்மாழ்வாரின் பாத கமலங்கள்

மதுரகவிகள் - நம்மாழ்வாரின் பாத கமலங்கள்

முதலியாண்டான் - இராமாநுஜரின் பாத கமலங்கள்

அந்ந்தாழ்வான் - திருமலையில் இராமானுஜரின் பாத கமலங்கள்

பொன்னடியாம் செங்கமலம் - மணவாள மாமுனியின் பாத கமலங்கள்

அரையர் - எம்பெருமானின் முன் பிரபந்த்த்தை இசையுடனும் பாவத்துடனும் அனுசந்திப்பவர்

தேவரீர் - பிறரை குறிக்கும் முறை

அடியேன் - தன்னை கூறிக்கொள்ளும் முறை

அடியோங்கள் - தன்னை கூறிக்கொள்ளும் முறை

தாஸன் - அடிமை, அடியேன்

ஆசார்யர் - குரு, ஆசான்

பூர்வாசார்யர் - ஆசாரியரின் முன்னோடிகள்
பரமாசார்யர் - ஆசாரியரின் ஆசார்யர்

திவ்யப்ரபந்தம் -அருளிச்செயல் ஆழ்வார்களின் பாசுரங்கள்

உபயவேதாந்தம் - ஸமஸ்கிருத வேதம் (வேதம், உபநிஷது, புராணம், இதிஹாஸம்) மற்றும் திராவிட வேதம் (திவ்யப்ப்ரபந்தம்)

ஸ்ரீசூக்தி - ஆழ்வார் ஆசார்யரின் பாசுரங்கள்

க்ரந்தம் - புத்தகம்

வ்யக்யானம் - விளக்கம்

காலக்ஷேபம் - க்ரந்தம் மற்றும் வியாக்யான்ங்களின் வரி விளக்கங்கள்/சொற்பொழிவு

உபன்யாசம் - சொற்பொழிவு

உபயவிபூதி - நித்ய மற்றும் லீலா விபூதிகள்

நித்ய விபூதி - ஸ்ரீவைகுண்டம் - எம்பெருமானின் ஆன்மீக பாகம் - லௌகீக பாகத்தின் 3 மடங்கு

லீலா விபூதி - எம்பெருமானின் சொத்தின் லௌகீக பாகம் - ஆயிரமாயிரம் லோகங்களைக் கொண்ட 14 லோகங்கள்

விரஜா - நித்ய விபூதி மற்றும் லீலா விபூதியை பிரிக்கும் நதி

விஷயந்தரம் - எம்பெரும்மானை தவிர உள்ள மற்ற விஷயங்கள்

சேஷி - தலைவன்

சேஷன் - தொண்டன்

சேஷத்வம் - தலைவனுக்கு தொண்டனாய் பணி செய்யும் அறிவு

பார‌த‌ந்த்ரிய‌ம் - தொண்டனாய் இருந்து தலைவனின் ஆசைகளை நிறைவேற்றுதல்

அன்ய சேஷத்வம் - எம்பெருமான் மற்றும் பாகவதர்களை தவிர மற்றுள்ளவர்களின் தொண்டனாக விளங்குதல்

தேவதாந்த்ரம் - ப்ரம்மா, சிவன், இந்திரன் மற்றும் இதர தேவதைகள்

பஞ்ச ஸம்ஸ்காரம் - ஒருவரை ஸ்ரீவைஷ்ணவராக நியமிக்கும் பொழுது செய்யும் 5 சடங்குகள்

பர அன்ன நியமம் - தன் வீட்டில் சமைத்த பிரஸாத்த்தை மட்டும் உட்கொள்ளுதல் (கோயில் மற்றும் மடங்கள் விதிவிலக்கு)- குறிப்பு: ஸ்ரீவைஷ்ணவர் புஜிக்கும் உணவு மற்றும் எம்பெருமானுக்கு படைக்கும் உணவுகளில் கட்டுப்பாடு உள்ளன

பொன்னடி சாற்றுதல் - ஸ்ரீவைஷ்ணவரை இல்லத்திற்கு அழைத்தல்

நோவு சாற்றிக்கொள்ளுதல் - ஸ்ரீ வைஷ்ணவர் உடல் நலமின்மை

கண் வளருதல் - உற‌க்க நிலை

கண்டருளப் பண்ணுதல், அமுது செய்தல் - சாப்பிடுதல், நெய்வேத்யம் (எம்பெருமான் மற்றும் ஸ்ரீவைஷ்ணவருக்கு உணவு பரிமாறுதல்)

எழுந்தருள பண்ணுதல் - எம்பெருமானார், ஆழ்வார், ஆசார்யர்களை ஒரிடத்திலிருந்து மற்றொரு இட்த்திருக்கு எடுத்துச் செல்லுதல்

புறப்பாடு கண்டருளல் - திரு உலாImage
குடிசை - தன் இல்லத்தை குறிக்கும் சொல்

திருமாளிகை - மற்றொரு ஸ்ரீவைஷ்ணவரின் இல்லத்தை குறிக்கும் சொல்

நீராட்டம் - குளித்தல்

போனகம் - உணவு

ப்ரஸாதம், சேஷம் - எம்பெருமானார், ஆழ்வார், ஆசார்யன் மற்றும் ஸ்ரீவைஷ்ணவர் உணவு உண்ட மிச்சம்

காலக்ஷேபம் பண்ணுகிரார் - எம்பெருமானார், ஆழ்வார், ஆசார்யன் மற்றும் ஸ்ரீவைஷ்ணவர் ப‌ற்றிய‌ விஷ‌ய‌ங‌க‌ள் கேட்கிறார்

காலக்ஷேபம் சாதிக்கிரார் - எம்பெருமானார், ஆழ்வார், ஆசார்யன் மற்றும் ஸ்ரீவைஷ்ணவர் ப‌ற்றிய‌ விஷ‌ய‌ங‌க‌ள் சொல்லுகிறார்

சாதித்து அருள்(சாத்துமறை ) - பாசுரம் மற்றும் வேதம் ஓத ஆரம்பித்தல்

நாயந்தே - அடியேன்

திருநாடு அலங்கரித்தார் - உடலை விடுத்து வைகுண்டம் எய்தல்

திருவடி சம்பந்தம் - ஆசார்யனின் சம்பந்தம்

அலகிடுதல் - பெருக்குதல் (சுத்தம் செய்தல்)

ப்ரஸாதம் - அன்னம்

குழம்பமுது(நழிகரமது) - குழம்பு/சாம்பார்

சாற்றமுது - ரசம்

கரியமுது - காய்கரி/பொரியல்

திருக்கண்ணமுது - பாயசம்

தயிரமுது(தோத்தியோனம், தாச்சி மம்மு) -தயிர் சாதம்

புளியோதரை - புளி சாதம்

அக்கார அடிசில் - சர்க்கரையால் செய்த சாதம்.Image
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(