அன்பெழில் Profile picture
நம்புவதை பகிர்ந்து நன்மை செய்வோம்.

Feb 23, 2022, 9 tweets

#தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் சேலம் மாவட்டத்தில் உள்ளது. தாயார் பெயர் கற்பகாம்பாள். சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் இங்கு திருமணம் நடந்து, திருமால் தன் அன்புத் தங்கை பார்வதியை சிவபெருமானுக்கு தாரை வார்த்துக் கொடுத்ததால் 'தாரமங்கலம்' எனும் திருப்பெயர் இத்தலத்துக்கு வந்ததென்று

கூறுவர். 10 ஆம் நூற்றாண்டிலேயே இதன் சில பகுதிகள் இருந்தன. 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கெட்டி முதலி அரச பரம்பரையினர் இந்தக் கோயிலை விரிவுபடுத்திக் கட்டியுள்ளனர். பிற்காலத்தில் மும்முடிச் சோழனும், சீயாழி மன்னனும் இந்தக் கோயிலைப் புதுப்பித்து திருவிழாக்களைக் கொண்டாடி வந்துள்ளனர்.

வணங்காமுடி மன்னர் காலத்தில்தான், இந்தக் கோயில் முழுமையாகக் கட்டி முடிக்கப் பட்டுள்ளது. இந்தக் கோயிலைச் சுற்றி 306 து164 அடி அளவுக்கு மிகப்பெரிய கல்சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இது 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ஆலயத்தின் முன்கோபுரம் 90 அடி உயரத்தில் ஐந்து அடுக்குகளைக் கொண்டது.

ஒரு பெரிய தேரைக் குதிரைகளும் யானைகளும் இழுத்துச் செல்வதைப் போன்ற தோற்றத்தில் இந்தக் கோபுரம் அமைந்துள்ளது. சிறப்பு மிக்க சிற்பக் கட்டிட கலைக்குச் சான்றாக விளங்கும்
கடந்த ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலாக, நம் தமிழகத்தில் புதிதாக கோயில் கட்டுவதற்காகவோ அல்லது சிற்பங்கள் செய்வதற்காகவோ

கோயில் நிர்வாகிகளிடம் சிலை வடிக்கும் சிற்பிகள் ஒப்பந்தம் செய்து தாம்பூலம் வாங்கும்போது
தாரமங்கலம், தாடிக்கொம்பு, பேரூர், தாராசுரம், பெரியகோயில், பெரியபாளையம் உள்ளிட்ட சில கோயில்களில் உள்ள சிற்பங்கள் நீங்கலாக மற்ற கோயில்களில் உள்ளதை போன்ற சிற்பங்களை நாங்கள் செய்து கொடுக்கிறோம்

என்று சொல்லித் தான் இன்றளவும் ஒப்புதல் கொடுக்கிறார்கள். அத்தனை அரிய வகை சிற்பங்களைக் கொண்டது இத்திருக்கோவில்(கள்). இங்கு வீற்றிருக்கும் விநாயகரின் தலையில் ஊற்றும் தண்ணீர் நம் கண்களுக்கு புலப்படாமல் வழிந்தோடி கிணற்றுக்குள் விழும் அற்புதமான வடிகால் முறை, இத்தலத்தின் கீழ்பகுதியில்

காற்று புக முடியாத அறைக்குள் வீற்றிருக்கிறார் ஶ்ரீ பாதாள லிங்கேஸ்வரர். 18-ஆயுதங்களை ஏந்திய நடராஜர் சிற்பம், சிங்கத்தின் வாயில் (வெளியே எடுக்க முடியாத) உருளும் கல் சிற்பங்கள் இக்கலையின் மகோன்னத வெளிப்பாடாகும். தாரமங்கலம் கோயில் முன்மண்டபத் தூண்களில் ஒன்றில் இராமன் உருவமும்,

மற்றொரு தூணில் வாலி உருவமும் செதுக்கப்பட்டுள்ளது. வாலி சிலையில் நம் கண்களை வைத்துக்கொண்டு பார்த்தால் இராமன் உருவம் தெரியாது. இராமன் சிலையில் நம் கண்களை வைத்துக்கொண்டு பார்ந்தால் வாலி உருவம் தெரியும். இப்படிப்பட்ட கதைச் செய்தி கலைநூட்பத்துடன் வடிக்கப்பட்டுள்ளது.
ஓம் நமச்சிவாய🙏🏻

பழைய கோவில்களை நன்றாக பேணி காக்க உறுதியெடுப்போம்!
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling