அன்பெழில் Profile picture
நம்புவதை பகிர்ந்து நன்மை செய்வோம்.

Feb 26, 2022, 9 tweets

#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் பன்னிரு ஆழ்வார்களாலும் பாடப்பெற்ற ஒரே திவ்யதேசமான ஸ்ரீரங்கம் கோவில் பூலோக வைகுண்டம்! 7 உலகங்களையும் உள்ளடக்கியதாக, 7 பிரகாரங்கள் அமைந்த முழுமையான அமைப்பு கொண்டது இக்கோயில். 156 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது இக்கோயில். ஸ்ரீரங்கம் ஊரே கோயிலுக்குள்தான்

உள்ளது என்றால் அது மிகையாகாது. சப்த பிரகாரங்களில் 5 பிரகாரங்கள் கோயிலுக்குள் வந்து விடுகின்றன. 6வது பிரகாரமான உத்திரவீதியில் ஒரு பகுதியில் மட்டும் குடியிருப்புகள் உள்ளன. 7வது பிரகாரமான சித்திரை வீதியிலும், 7 பிரகாரங்களையும் உள்ளடக்கிய அடையவளைந்தான் சுற்றிலும் இருபுறமும்

குடியிருப்புகள் உள்ளன. இந்த 8 பிரகாரங்களுக்கு இடையிலும் பிரமாண்டமான மதில்சுவர்கள் உள்ளன. ஒவ்வொரு மதில் சுவரும் 12 அடி முதல் 15 அடி வரை உயரமும், 5 முதல் 10 அடி வரை அகலமும் கொண்டதாக அமைந்துள்ளது. இந்த மதில் சுவர்கள் வெவ்வேறு காலக்கட்டங்களில், பல்வேறு மன்னர்களால் கட்டப்பட்டதாக

வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளுக்கு நடுவே உள்ள தீவில் ஸ்ரீரங்கம் அமைந்துள்ளது. 2 கி.மீ. அகலமும், 20 கி.மீ. நீளமும் கொண்ட இந்த தீவிலே மலைப் பாறைகளோ, குன்றுகளோ ஏதுமில்லை.
இந்த மதில்சுவர்களை கட்டிய காலத்தில் இன்று இருப்பது போல், மின்சாரம், மிகை

ஒளி விளக்குகள், தகவல் தொடர்பு சாதனங்கள், அதிநவீன கிரேன்கள், இயந்திரங்கள் ஏதுமிருந்திருக்க வாய்ப்பில்லை. இந்த கற்கள் யாவும் பிரமாண்டமாக சீறிப்பாயும் 2 ஆறுகளின் நீர்ப் பிரவாகத்தை கடந்தே கொண்டு வரப்பட்டுள்ளன. இருப்பினும் இவ்வளவு பெரிய கட்டுமானங்களை அந்நாளைய மன்னர்கள் கட்டியுள்ளனர்

என்றால், அவர்களின் தன்னம்பிக்கை மற்றும் இறைவன் மீது கொண்டிருந்த பக்தி ஆகியவற்றின் வெளிப்பாடாகத்தான் இதை கருத வேண்டியிருக்கிறது.
அத்துடன் அந்நாளைய குடிமக்களின் கடின உழைப்பும், பக்தி தொண்டு மனப்பான்மையும் வெளிப்படுகிறது. இந்நிலையில், பழமையும், பெருமையும் வாய்ந்த ஸ்ரீரங்கம் கோயில்

மதில் சுவர்கள் காலப்போக்கில் ஒரு சில பகுதிகளில் பழுதுகள் ஏற்பட்டுள்ளன.மன்னர்கள் காலத்தில் கட்டிய மதில்கள் போல் இன்று நம்மால் நினைத்தால் கூட கட்டமுடியாது. என்றாலும், அவற்றை பாதுகாக்கவாவது நாம் முன்வர வேண்டும். இதுவே இவ்வளவு காலம் அரங்கனுக்குச் செய்யும் நன்றிக் கடன்.

7 பிரகாரப் பெயர்கள்
1. தர்மவர்மன் திருச்சுற்று - சத்யலோகம்
2. இராஜமகேந்திரன் திருச்சுற்று - தபோலோகம்
3. குலசேகரன் திருச்சுற்று - ஜனாலோகம்
4. ஆலிநாடன் திருச்சுற்று - மஹர்லோகம்
5. அகளங்கன் திருச்சுற்று -சுவர் லோகம்
6. விக்ரமசோழன் திருச்சுற்று- புவர்லோகம்
7. கலியுகராமன் திருச்சுற்று

- பூலோகம்
நம்மால் இப்பொழுது இந்த மாதிரி ஒரு மதில் சுவர் கூட எழுப்ப முடியாத நிலையில், உள்ளவற்றை பேணிக் காப்போம்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling