நம்பி Nambi - Vote for INDIA Profile picture
திராவிடன் | Dravidian | நாளும் ஒரு திருக்குறள் | Fitness | IT Infrastructure | Heritage | தமிழ் | உணவு | Food | ஊர் சுற்றல் | Travel

Mar 11, 2022, 11 tweets

#சென்னையின்_பாலங்கள்
பஞ்ச காலத்தில் (1806-37) மக்களுக்கு வேலை கொடுத்துக் காப்பாற்றுவதற்காக மசூலிப்பட்டணத்திலிருந்து மரக்காணம் வரை தோண்டப்பட்டது பக்கிங்காம் கால்வாய். இக்கால்வாய் மற்றும் இங்கு நீண்டகாலமாக மழைக்கால ஆறாக ஓடும் கூவம் ஆற்றின் மேல் கட்டப்பட்ட பாலங்களைப் பார்ப்போம் +

இப்போது நாம் நிற்பது கன்னிமாரா விடுதியின் மேற்கு வாயிலின் பக்கம் உள்ள கூவமாற்றுப் பாலத்தின் கரையில் (maps.app.goo.gl/1Nvef4FvkKL6VH…). 1825-இல் கட்டப்பட்ட 5 கண் பாலமிது... எத்திராஜ் (Commander-in-Chief Rd)
சாலையையும் அண்ணா சாலையையும் இணைக்கிறது. இப்பாலத்தைக் கட்டியவர் #Captain_Cotton+

#இந்தியாவில்_முதல்_இருப்புப்பாதையை சென்னையின் வடமேற்கிலிருக்கும் செங்குன்றத்திலிருந்து மூன்று மைல் நீளத்திற்கு 1837-இல் அமைத்தவர் இவரே. 18 மாடுகள் 9 வண்டிகள் மூலம் (சாலை அமைக்கத் தேவையான பொருட்களை) ஒரே ஒரு மாடு (ஆம்... எஞ்சின் அல்ல) இழுத்துச் சென்றது +

அப்பாலத்தைத் தாண்டி ஆற்றின் ஓரமே வந்து காசினோவை இணைக்கும் இந்த 5 கண் பாலமருகில் (maps.app.goo.gl/VizojX9aRyA6Xd…) நிற்கிறோம். 1864இல் கட்டப்பட்டு அண்ணாசாலையையும் கோமளீசுவரன் பேட்டையின் (புதுப்பேட்டையின் பழைய பெயர்) Harris சாலையையும் இணைக்கும் இதுவும் Harris Bridge என்றே அழைக்கப்படுகிறது+

மேற்கு ஓரமாகவே தொடர்ந்து வந்து நாம் நிற்பது 1817-இல் சென்னையிலேயே இரண்டாவதாகக் கட்டப்பட்ட இந்த St.Andrews பாலமருகே. ஆம்... கோட்டையிலிருந்து எழும்பூரிலுள்ள 200 ஆண்டு பழமையான St.Andrews Church-க்கு இப்பாலம் வழியாகச் சென்றதால் அதே பெயரில் அழைக்கப்பட்டது +

இப்பாலத்தைத் தாண்டி ஆற்றின் ஓரமாகவே சென்று இந்தவிடத்தில் (maps.app.goo.gl/Vb2mAvqjnPy55q…) நிற்கிறோம். இப்போது பயன்பாட்டில் இல்லாத இதன் அக்கரையில்தான் ரிப்பன் கட்டிடம் உள்ளது. 1850-இல் கட்டப்பட்ட Laws bridge (கல்வெட்டு உள்ள ஒரே பாலம்) என்றழைக்கப்பட்ட இதன்மேல் ட்ராம் வண்டிகள் சென்றுள்ளன +

அதே சிந்தாதிரிப்பேட்டை சாலையில் இன்னும் சென்று அண்ணா சாலை சந்திப்பில் உள்ள பெரியார் சிலையைத் தாண்டி (maps.app.goo.gl/72KgZg5uFa9Jkh…) இங்கே நின்று 1822-இல் கட்டப்பட்ட St.George's பாலத்தைப் பார்க்கிறோம்.

ஆற்றின் தெற்கு ஓரமாகவே கிழக்கு நோக்கி வந்து நாம் அடைவது இங்கே- maps.app.goo.gl/Sj2nYyjoQmCEAc…. சென்னைப் பல்கலைக்கழகத்தின் பின்வாயிலிலிருந்து பக்கிங்காம் கால்வாயைத் தாண்டுவதற்காக 1878-இல் அழகிய கண்களுடன் கட்டப்பட்ட Grand Duff பாலம் பயணிக்கும் பயன்பாடில்லாமல் இப்போது குடியிருப்புகளானது+

அதே சாலையில் தெற்கு நோக்கிக் கால்வாயின் ஓரமாகவே வந்து சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்துக்கு முன்னமே உள்ள 1878-இல் கட்டப்பட்ட Chepauk bridge-ஐக் கடந்து கடற்கரை சாலையில் இவ்விடத்தை (maps.app.goo.gl/PVEy4uB8E3AyiR…) அடைகிறோம்.

இதோ நாம் பார்ப்பது நேப்பியர் பாலம். 1835-இல் சிறு பாலமாகக் கட்டப்பட்டு 1943-இல் காங்க்ரீட் பாலமாக உருமாற்றம் பெற்றது. 1999-இல் இன்னொரு பாலமும் அதே மாதிரியில் கட்டப்பட்டு செல்லும் வழிகள் அதிகப்படுத்தப்பட்டன.

நேரம் செலவழித்து என்னுடனே வந்த அனைவருக்கும் அன்பும், மகிழ்வும், நன்றியும்...

தொடர்ந்து இணைந்து பயணிப்போம்... வணக்கம்...🙏💚😊

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling