#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் காஞ்சி மாவட்டத்தில் உள்ள அய்யங்கார்குளம் என்ற ஊரில் தான் இந்த அதிசய கோவிலுள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து செய்யாறு செல்லும் வழியில் காஞ்சியில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் இருக்கிறது கலவை கிராமம். இங்குதான் #சஞ்சீவிராயர்_ஆஞ்சநேயர் திருக்கோவில் அமைந்து
உள்ளது. முன்புறத்தில் நெடிதுயர்ந்த தூண்களுடன் காட்சி தரும் இந்தக் கோவில் உள்ளது. சஞ்சீவி மலையை பெயர்த்து எடுத்துக் கொண்டு ஆஞ்சநேயர் பறக்கும்போது மலையை ஒரு கையிலிருந்து மற்றொரு கைக்கு மாற்றினாராம். அப்போது மலையிலிருந்து ஒரு சிறு பாகம் கீழே விழ, அந்த இடத்தில் சஞ்சீவிராயர் ஆஞ்சநேயர்
கோயில் உருவானதாக நம்பிக்கை. 1585-1614ல் விஜயநகரை ஆண்ட வேங்கடபதி என்ற மன்னனின் அமைச்சராகப் பணி புரிந்தவர் ஸ்ரீலட்சுமி குமாரதேசிகன். அவர் ஒரு முறை ஸ்தல யாத்திரை வந்தபோது இந்த இடத்தில் தங்கினார். அப்போது அவருடைய கனவில் ஆஞ்சநேயர் வந்து அருள்பாலித்தார். எனவே அவர் இக்கோயிலை கட்டினார்.
மூலவராக சஞ்சீவிராயர் எனும் அனுமரும் இவருக்கு எதிரே ராமன், சீதை, லட்சுமணர் ஆகியோரும் அமைந்துள்ளனர். கோயிலை ஒட்டி பின்புறம் குளம் ஒன்று படித் துறையுடன் அமைக்கப் பட்டுள்ளது. விஜயநகர பேரரசின் நாயக்க மன்னரின் அமைச்சராக இருந்த எச்சூர் தாதாச்சாரியார் பொன் பொருளோடு இவ்வூர் வழியே பயணம்
செய்தபோது வழிப்பறிக்கொள்ளையரால் சூழப்பட்டார். ஆபத்திலிருந்து காக்க ராமரை வேண்டி நின்றார் எச்சூர் தாதாச்சாரியார். அப்போது கூட்டமாக வந்த குரங்குகள் கொள்ளையர்களைத் தாக்கித் துரத்தின. அதன்பின் இத்திருத்தலத்து ஆஞ்சநேயர் மீது பக்தி கொண்ட அவர் ஏதேனும் திருப்பணி செய்ய விரும்பி பிரம்மாண்ட
அளவில் 133 ஏக்கரில் குளத்தை அமைத்தார். இக்குளம் தாத சமுத்திரம் என்றும் ஐயங்கார் குளம் என்றும் புகழ் பெற்றது. இவரே ’ஸ்ரீ அனுமத் விம்சதி’ என்ற தோத்திரப் பாடலையும் இயற்றினார். இத்தலத்து அனுமரை வழிபடுவது ராமபிரானின் பாதங்களில் சரணடைவதற்கு ஒப்பானது என அப்பாடல்களில் குறிப்பிடுகின்றார்.
இந்தக் கோவிலுக்கு முன்னால் இருக்கும் குளக்கரையின் வடக்குப் பகுதியில் வாவிக் கிணறு ஒன்று உள்ளது. கிணற்றுக்குள் செல்ல படிகள் உள்ளன. கீழே சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட கருங்கல்லில் அமைந்த பதினாறு கால் மண்டபம் உள்ளது. அபூர்வமான அமைப்பு இது. மிக அற்புதமான கலை அம்சம் நிறைந்த வேலைப்பாடுகள்
கொண்ட பெருமாள் கோவில் பூமிக்கடியில் உருவாக்கப்பட்டு அதற்குள் அழகிய மண்டபமும் உள்ளது. அதன் நடுவே தான் வாவிக் கிணறு உள்ளது. இந்த கிணற்றில் உள்ள ஊற்று வருடம் முழுவதும் பெருக்கெடுத்து வருகிறது. அதனால் இந்த கோவில் எப்போதும் தண்ணீராலேயே நிரம்பிக் காணப் படுகிறது. சித்ரா பௌர்ணமி அன்று
தண்ணீரை வெளியேற்றி விடுவார்கள். சித்ரா பௌர்ணமி திருவிழா நாளில் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் பல்லக்கில் வந்து இந்த வாவிக் கிணற்றுக்குள் இருக்கும் மண்டபத்திற்குள் எழுந்தருள்கிறார். கூடவே இக்கோவில் ராம, லட்சுமண, சீதாதேவியும் இக்கிணற்றில் எழுந்தருளுவர். லட்சக் கணக்கான மக்கள் இந்த
அதிசயக் கிணற்றுக் கோவிலின் திருவிழாவிற்காக வருகிறார்கள். விழா முடிந்து ஒரு வாரம் கழித்து மீண்டும் தண்ணீர் நிரம்பத் துவங்கி விடும். இந்த நீரை முறையாகப் பாசனத்திற்கு ஏற்றம் மூலம் இறைத்துப் பயன் படுத்துகிறார்கள். இக்கோவிலின் அர்த்த மண்டபத்தின் வெளிப்புறச்சுவரில் ஆஞ்சநேயரின் 20
ஸ்லோகங்களும் கல்வெட்டுகளாக உள்ளன. வடக்குப் பார்த்த ஆஞ்சநேயர் இவர் என்பது கோயிலின் சிறப்பு. தவிர, ராஜகோபுரம் உள்ள ஆஞ்சநேயர் கோயிலும்கூட! அர்த்த மண்டபத்தின் உட்புறக் கூரையின் கீழ் ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தாலும், அவை இன்று சிதிலமடைந்துள்ளன. அர்த்த மண்டபத்தி்மேற் கூரை மூலைகளில்
கருங்கல் வளையங்களைக் காணலாம். இவற்றில் மிகச்சில மட்டுமே தற்போது முழுமையாக உள்ளன. வெட்டப்பட்ட மாபெரும் குலமும் மிகவும் சுருங்கியுள்ளது. நாம் பக்தியுடன் இக்கொவில்களுக்குச் சென்று இறை அருள் பெறுவோம். பழங்கால கோவில்களை அரசர்களும் பக்தர்களும் மிகுந்த சிரமத்துடனும் பொருட் செலவுடனும்
பக்தியுடன் கட்டியுள்ளனர். அவற்றை பேணிக் காப்போம். நம் இந்து மத அதிசயங்களை உலகுக்கு எடுத்து சொல்வோம். இது நம் கடமை.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.