அன்பெழில் Profile picture
நம்புவதை பகிர்ந்து நன்மை செய்வோம்.

Mar 25, 2022, 11 tweets

ஏன் #நாலு #நான்கு என்கிற எண்ணிக்கை/சொல் விசேஷம்?
நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க.
நாலு பேருக்கு நல்லது நடக்கும்னா எதுவும் தப்பில்ல.
நாலு காசு சம்பாதிக்கவாது படிக்கணும்ல.
நாலு ஊரு சுற்றினாதான் உலகம் புரியும்.
அவரு நாலும் தெரிஞ்சவரு, நாலும் புரிஞ்சவரு.
நாலு வார்த்த நறுக்குன்னு

கேக்கணும்.
நாலு பேருக்கு நன்றி.
இப்படி நாலுக்கு ஏக மரியாதை! இந்த நாலு வேறு எங்கெல்லாம் வருகிறது என்று பார்ப்போம்.
சங்க இலக்கியத்தில் பதினெண்கீழ்கணக்கு நூல்களில் பெயருடன் நான்கு சேர்ந்து வரும். சில நாலு நாற்பது மற்றும் எட்டுத் தொகையில் நானூறு, பிரபந்தத்தில் நாலாயிரம் என 4 வரும்.

“பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்” ஔவையாரின் நால்வழி நீதி நூலில் கடவுள் வாழ்த்து பாடல்.
நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, அக நானூறு, புற நானூறு, நாலாயிர திவ்ய பிரபந்தம்!
தவிர சொலவடை, நாலும் இரண்டும் சொல்லுக்கு

உறுதி. இதில் நாலு என்பது நாலடியார்.
“காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்நெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே”
நான்மறை என்பது வேதங்கள் நான்கு.
சைவ நெறியைப் பரப்பிய நாயன்மார்களில் முதன்மையானவர்கள் நான்கு பேர். அப்பர், சம்பந்தர்,

சுந்தரர், மாணிக்க வாசகர். இவர்களை நால்வர் என அழைக்கிறோம். மஹாவிஷ்ணுவின் பத்து (ஒன்பதில்) அவதாரங்களில் நான்கு அவதாரங்களுக்கு மட்டுமே மனிதனாக (கர்பவாசத்தில்) எடுத்ததாகும்.
வேதங்களை நான்காகப் பகுத்த வேத வியாசர் அவற்றை நாலு ரிஷிகளிடம் பரப்பும் பொறுப்பை ஒப்படைத்தார். அவர்கள் ருக்-

பைலர், யஜூர்-ஜைமினி, சாம-வைசம்பாயன, அதர்வண-சுமந்து.
தசரதனுக்கு நான்கு பிள்ளைகள்.
நான்கு புருஷார்த்தங்கள். அவை தர்ம, அர்த்த, காம, மோட்சம்.
மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை
கடக்க வேண்டிய நிலைகளும் நான்கு. அவை பிரம்மசர்யம், கிருஹஸ்தாச்ரமம், வானப்ரஸ்தம், சந்யாசம்.
பிரம்மாவின் மானச

புத்திரர்கள் நான்கு பேர். சநகர், சநாதனர், சநந்தனர், சனத் குமாரர்.
தொழிலின் அடிப்படையில் நான்கு வர்ணங்கள்.
பிரம்மாவுக்கு நான்கு தலைகள். சதுர்முகன் என்ற பெயர் பிரம்மாவுக்கு உண்டு.
ஆதிசங்கரர் பாரத நாட்டின் நான்கு திசைகளிலும்/மூலைகளிலும் நான்கு மடங்கள் நிறுவி நான்கு சீடர்களை

நியமித்தார்.
அக்னிக்கு கம்பீரா, யமலா, மஹதி, பஞ்சமி என நான்கு வடிவங்கள்.
திசைகள் நான்கு.
ஹரித்வார், அலஹாபாத் (பிரயாகை த்ரிவேணி சங்கமம்), நாசிக், உஜ்ஜையினி என நான்கு இடங்களில் கும்ப மேளா நடைபெறும்.
ரத, கஜ, துரக, பதாதி-தேர், யானை, குதிரை, காலாட் படைகள் என நால் வகைப் படைகள்!

அஹம் பிரம்மாஸ்மி, தத்வம் அஸி, பிரக்ஞானம் பிரம்ம, அயமாத்ம ப்ரம்ம- உபநிஷத்தில் கூறப்படும் நாலு மஹா வாக்யங்கள்.
வெல்ல முடியாத நாலு “நித்ரா ஸ்வப்ன, ஸ்த்ரீ, காமஅக்னி இந்தன கரா பாண” இதன் பொருள்: கனவு காண்பது தூக்கத்தை நிறைவு செய்யாது, பெண்களுக்கு ஆசை நிறைவு செய்யாது, தீயை விறகு நிறைவு

செய்யாது,குடிகாரனை குடி நிறைவு செய்யாது.
யுகங்களும் கிரதம், திரேதம், துவாபரம், கலி என நான்கு.
அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகியவை பெண்டிரின் நால் வகை குணங்கள்.
சிவராத்ரியில் நாலு கால பூஜை நடக்கும்.
நான்கு வேதங்களும் கற்றவர்களை சதுர்வேதி என்பார்கள்.
நாலு பேரை போல வாழ்வில் நல்லா

இருக்கனும். நாலு என்பது விசேஷமாக குறிப்பிடப்படுவது, நல்லதுக்கும், கெட்டதுக்கும், நான்கு பேர் வேண்டும் என்ற கருத்தாக்கத்தை கொண்டுள்ளது என்பதை தான் காட்டுகிறது.
ஒரு நாலு பேருக்குக்கு தெரியட்டும் என்று நாலு பத்தி எழுதினதை ஒரு நாலு பேராவது படிச்சா சரி😊
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling