தீராத பல் வலியை நொடியில் போக்க வேண்டுமா? இதோ அற்புதமான 10 இயற்கை மருத்துவ முறைகள்!
நம்மில் சிலருக்கும் திடீரென அடிக்கடி பல்வலி வருவதுண்டு
நம் பற்களின் இரண்டு பாதுகாக்கும் கவசங்கள் இனாமல், டென்டின் உள்ளது. இரண்டையும் தாண்டி சொத்தை ஆழமாக பரவும் போது வலி ஏற்படுகின்றது.
இதனை எளிதில் சரி செய்ய கீழ் குறிப்பிடப்பட்டுள்ள முறைகளை பின்பற்றினால் போதும். தற்போது அவற்றை பார்ப்போம்.
• மிளகுத் தூளுடன் உப்பு சேர்த்துப் பல் விளக்கி வர சொத்தைப் பல், பல்வலி, ஈறு வலி, வாய் துர்நாற்றம் போகும்.
• ஈறுகளில் வீக்கம் மற்றும் வலிக்கு பப்பாளிப் பாலை வீக்கத்தில்
தடவி,இலேசாகத் தேய்க்க உள்ளிருந்த கெட்டநீர் வெளியேறி வலியும் வீக்கமும் போகும்.
•பல் வலி உள்ள போது பல் துலக்கியபின், ஒரு நெல்லிக்காயை நன்கு மென்று தின்னவும்.
•பிரம்ம தண்டு இலையை எரித்து சாம்பலாக்கி பல் தேய்க்க,பல் ஆட்டம்,பல் சொத்தை,பல் கறை,பல்லில் இரத்தம் வடிதல் எல்லாமே தீரும்.
ஆலமரப் பாலை பற்கள் மீது தடவினால் பல் ஆட்டம் நிற்கும்.ஆயில் புல்லிங் தினம் செய்ய பல் மற்றும் ஈறுகளில் ஏற்படும் வைரஸ்,பாக்டீரியா தொற்றிலிருந்து விடுபடலாம்.
•கோவைப்பழம் அடிக்கடி சாப்பிட பல் பலப்படும். நந்தியாவட்டை வேரை வாயிலிட்டு மென்று துப்பவும்.ஒமத்தை நீர்விட்டு அரைத்து
களி போல் கிளறி இளஞ்சூட்டில் பற்றுப்போடவும்.
• ஒரு பல் பூண்டை நசுக்கி, வலி உள்ள இடத்தில் வைக்கலாம். இதுபோல் கிராம்பை நசுக்கியும் வைக்கலாம்.)
• வாகை மரப் பட்டையை எரித்துப் பொடித்து பல் துலக்க ஈறு நோய் மற்றும் பல் வலி குணமாகும்.கருவேலம் பட்டைப் பொடியால் பல் துலக்கவும்(Pic)
• மாசிக்காயைத் தூளாக்கி, நீரில் கொதிக்க வைத்து கொப்பளிக்க ஈறு பலமடையும்.அசோக மரப் பட்டைப் பொடியுடன்(Pic attached) உப்பு சேர்த்து விளக்கவும்.
• கடுகை பொடி செய்து வலிக்கும் இடத்தில் பற்று போடவும். வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவவும்.
நான் சில மாதங்களுக்கு முன் பாதுக்காக்க வேண்டிய பயனுள்ள குறிப்புகளள் னு ஒரு பதிவு போட்டிருந்தேன். அது செம ரீச்..செம response. இதெல்லாம் ஒருபுறம் இருக்க..
மறுபுறம்.. எனக்கு கால் வலி, வயித்து வலி இதுக்கு மருந்து சொல்லுங்க..அதுக்கு மருந்து சொல்லுங்க னு கிட்டத்தட்ட 100க்கும் மேல DM😔
தயவு செய்து உங்கள் பிரச்சனைக்கு மருத்துவர் மட்டுமே ஒரே தீர்வு..
நான் போடும் பதிவுகள் எல்லாம் நம் பாட்டிகள் சொன்ன வைத்திய முறை தான்.. இது நிரந்தர தீர்வு தரும் என்று எந்த ஆதாரமும் கிடையாது. எனவே உங்கள் உடலை பாதுகாக்க எப்போதும் மருத்துவர் ஆலோசனை பெருவது தான் சால சிறந்தது🙏
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.