தீராத பல் வலியை நொடியில் போக்க வேண்டுமா? இதோ அற்புதமான 10 இயற்கை மருத்துவ முறைகள்!
நம்மில் சிலருக்கும் திடீரென அடிக்கடி பல்வலி வருவதுண்டு
நம் பற்களின் இரண்டு பாதுகாக்கும் கவசங்கள் இனாமல், டென்டின் உள்ளது. இரண்டையும் தாண்டி சொத்தை ஆழமாக பரவும் போது வலி ஏற்படுகின்றது.
இதனை எளிதில் சரி செய்ய கீழ் குறிப்பிடப்பட்டுள்ள முறைகளை பின்பற்றினால் போதும். தற்போது அவற்றை பார்ப்போம்.
• மிளகுத் தூளுடன் உப்பு சேர்த்துப் பல் விளக்கி வர சொத்தைப் பல், பல்வலி, ஈறு வலி, வாய் துர்நாற்றம் போகும்.
• ஈறுகளில் வீக்கம் மற்றும் வலிக்கு பப்பாளிப் பாலை வீக்கத்தில்
தடவி,இலேசாகத் தேய்க்க உள்ளிருந்த கெட்டநீர் வெளியேறி வலியும் வீக்கமும் போகும்.
•பல் வலி உள்ள போது பல் துலக்கியபின், ஒரு நெல்லிக்காயை நன்கு மென்று தின்னவும்.
•பிரம்ம தண்டு இலையை எரித்து சாம்பலாக்கி பல் தேய்க்க,பல் ஆட்டம்,பல் சொத்தை,பல் கறை,பல்லில் இரத்தம் வடிதல் எல்லாமே தீரும்.
ஆலமரப் பாலை பற்கள் மீது தடவினால் பல் ஆட்டம் நிற்கும்.ஆயில் புல்லிங் தினம் செய்ய பல் மற்றும் ஈறுகளில் ஏற்படும் வைரஸ்,பாக்டீரியா தொற்றிலிருந்து விடுபடலாம்.
•கோவைப்பழம் அடிக்கடி சாப்பிட பல் பலப்படும். நந்தியாவட்டை வேரை வாயிலிட்டு மென்று துப்பவும்.ஒமத்தை நீர்விட்டு அரைத்து
களி போல் கிளறி இளஞ்சூட்டில் பற்றுப்போடவும்.
• ஒரு பல் பூண்டை நசுக்கி, வலி உள்ள இடத்தில் வைக்கலாம். இதுபோல் கிராம்பை நசுக்கியும் வைக்கலாம்.)
• வாகை மரப் பட்டையை எரித்துப் பொடித்து பல் துலக்க ஈறு நோய் மற்றும் பல் வலி குணமாகும்.கருவேலம் பட்டைப் பொடியால் பல் துலக்கவும்(Pic)
• மாசிக்காயைத் தூளாக்கி, நீரில் கொதிக்க வைத்து கொப்பளிக்க ஈறு பலமடையும்.அசோக மரப் பட்டைப் பொடியுடன்(Pic attached) உப்பு சேர்த்து விளக்கவும்.
• கடுகை பொடி செய்து வலிக்கும் இடத்தில் பற்று போடவும். வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவவும்.
நான் சில மாதங்களுக்கு முன் பாதுக்காக்க வேண்டிய பயனுள்ள குறிப்புகளள் னு ஒரு பதிவு போட்டிருந்தேன். அது செம ரீச்..செம response. இதெல்லாம் ஒருபுறம் இருக்க..
மறுபுறம்.. எனக்கு கால் வலி, வயித்து வலி இதுக்கு மருந்து சொல்லுங்க..அதுக்கு மருந்து சொல்லுங்க னு கிட்டத்தட்ட 100க்கும் மேல DM😔
தயவு செய்து உங்கள் பிரச்சனைக்கு மருத்துவர் மட்டுமே ஒரே தீர்வு..
நான் போடும் பதிவுகள் எல்லாம் நம் பாட்டிகள் சொன்ன வைத்திய முறை தான்.. இது நிரந்தர தீர்வு தரும் என்று எந்த ஆதாரமும் கிடையாது. எனவே உங்கள் உடலை பாதுகாக்க எப்போதும் மருத்துவர் ஆலோசனை பெருவது தான் சால சிறந்தது🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
Kids Educational Games and Toys Collections :
நிறைய பேர் கேட்ட suggestion னு கூட சொல்லாம் . குழந்தைகள் நிறைய நேரம் mobile பயன்படுத்தறாங்க.. அவர்களை engage செய்ய நல்ல Educational board games நிறைய suggest செய்யுங்கனு . இந்த thread முழுவதும் படியுங்கள்.. உங்க குழந்தைகளின் வயதிற்கு ஏற்ற board games வாங்கி கொடுங்க.. குறிப்பா வாங்கி கொடுத்து அவர்களுடன் நேரம் ஒதுக்கி விளையாடுங்க. மறக்காமல் இந்த பதிவை Bookmark ல kids னு save செஞ்சு வெச்சுக்கங்க.
1.Creative Fun with Words | 3 Letter Words (Age :4+ Years)
How to Play : Build 3-letter words by assembling beautifully illustrated pictures of objects relating to child’s immediate environment.
Skills Developed : Letter recognition, Letter sounds, Spelling Reading
HOW TO CHOOSE BEST WATER HEATER FOR YOUR HOME - A COMPLETE BUYING GUIDANCE ( உங்க வீட்டிற்கு சிறந்த Water Heater தேர்வு செய்வது எப்படி ) #waterheater #geyser
நிறைய பேர் தொடர்ந்து கேட்கும் ஒரு suggestion என்றால், வீட்டிற்கு நல்ல water heater சொல்லுங்க? இதை நான் போன வருடமே AC, Dishwasher , RO பற்றி எல்லாம் எழுதும் போதே water heater பற்றியும் எழுத வேண்டும் என்று இருந்தேன். முடியாமல் போனது. இப்போ தொடர்ந்து நிறைய பேர் Water Heater suggestion கேட்பதால் சரி இதை பற்றி detail ஆக எழுதலாம் என்று இந்த பதிவு.
நீங்க உங்க வீட்டுக்கு Water Heater வாங்குவது என்று முடிவு செய்துவிட்டால். முதலில் மனதில் வைக்க வேண்டியது இந்த மூன்று விஷயங்கள் தான். 1. Type 2. Size 3. Safety Features
Type :
முதலில் எந்த மாதிரி heaters எல்லாம் இருக்கு னு பார்ப்போம். இதை தெரிந்து கொண்டாலே யாருக்கு என்ன type heater set ஆகும் னு தெரிஞ்சிக்கலாம்.
1. Instant Water Heater :
இதை Tankless water heater னு கூட சொல்லலாம். இது சின்ன size bathroom , kitchen ல பயன்படுத்தலாம். உடனடியா சுடு தண்ணி கிடைக்கும் ஆனா இதில் இருக்கும் மிக பெரிய பிரச்சனை என்னனா குறைந்த அளவில் தான் சுடு தண்ணீர் கிடைக்கும்.. அதன் பிறகு 1௦ நிமிடங்களில் இருந்து 15 நிமிடம் வரை break கொடுக்கனும்.
2. Storage Geyser :
இது 1௦ லிட்டர் ல இருந்து 25 லிட்டர் capacity வரைக்கும் இருக்கு. உங்க வீட்டில் எத்தனை பேர் இருக்கீங்க, என்ன மாதிரி bathroom setup செஞ்சிருக்கீங்க என்பதை பொருத்து தேர்வு செய்யவேண்டும். உதாரணத்துக்கு உங்க வீட்டில் 5 ல இருந்து 8 பேர் வரைக்கும் இருக்கீங்க கூடவே வீட்டில் Bath Tub இருக்கு அல்லது எப்பவுமே shower ல தான் குளிப்பீர்கள் என்றால் கண்டிப்பா 25 litre capacity இருக்கும் heater தேவைப்படும். அளவான குடும்பம், தினமும் பக்கெட் தான் பயன்படுத்துவீங்க என்றால் 15 litre water heater போதுமானது.
THINGS TO CONSIDER:
மேல சொன்ன விஷயங்கள் மட்டுமல்லாமல் நீங்க வாங்க போகும் heater எங்க install செய்ய போறீங்க? அங்க எவ்ளோ space இருக்கு ? இதை எல்லாம் வைத்து தான் நீங்க Horizontal heater வாங்க வேண்டுமா அல்லது Vertical Heater வாங்க வேண்டுமா என்பதை முடிவு செய்ய வேண்டும்.
Horizontal heater vs Vertical Heater :
Horizontal heater is less energy efficient. இதனால் முடிந்த அளவு Vertical water Heater தேர்வு செய்யுங்க. இடம் பற்றாக்குறை இருக்கு, வேற வழியே இல்லைனா மட்டும் Horizontal water heater தேர்வு செய்யுங்க. இதுல நீங்க இன்னொரு விஷயம் கவனத்தில் கொள்ள வேண்டியது Instant water heater ல எனக்கு தெரிந்து “STAR RATING” கொடுத்து இருக்க மாட்டாங்க.. காரணம் அது அதிக current consumption செய்யும். கண்டிப்பா அது 1 or 2 star தான் இருக்கும்.
சரி நல்ல Energy Efficient இருக்கும் water heater தேர்வு செஞ்சுக்கலாமா ? என்று கேட்டால்? இல்லை. கூடவே “FASTER HEATING” எது கொடுக்கும் என்று பார்த்து தேர்வு செய்ய வேண்டும்.. இல்லை என்றால் தண்ணி சூடாகவே அதிக நேரம் ஆகும். சரி இந்த இரண்டுமே இருக்கும் நல்ல water heater வாங்கலாமா என்றால் ? இல்லை. கூடவே SAFETY FEATURES எந்த brand நல்லா கொடுக்கறாங்க என்பதையும் வைத்து தான் தேர்வு செய்ய வேண்டும்.
HOMEDECOR PRODUCTS COLLECTIONS – WEDDING AND HOUSEWARMING SPECIAL GIFTS COLLECTIONS - PART 1
நிறைய பேர் சொந்த வீட்டை decorate செய்யவும் , நண்பர்கள் கல்யாணம் அல்லது புதுமனை புகுவிழாக்கு கொடுக்க நல்ல gift suggest செய்யுங்கனு கேட்டுட்டே இருப்பீங்க. அதற்காக தான் இந்த thread. இதுல நிறைய பயன் உள்ளதாகவும் , அழகான gift products நல்ல reviews இருக்கறதா கண்டு பிடிச்சு இந்த தொகுப்பு ல கொடுத்து இருக்கேன். உங்களுக்கு எப்ப யாருக்கு gift கொடுக்க வேண்டும் என்றாலும் இந்த பதிவு பயன் உள்ளதா இருக்கும். அதனால் மறக்காமல் bookmark செஞ்சு வெச்சுக்கங்க.
யானை ஆசிர்வாதம் செய்வது போல் வீட்டில் அல்லது கடையில் வைப்பது நிறைய பேருக்கு செண்டிமெண்ட் ஆக பிடிக்கும். ஒரு இடத்தில் யானை இருந்தால் ஒரு மாதிரி positive ஆ feel ஆகும். நானும் என்னுடைய workspace பக்கத்தில் ஒரு யானை போட்டோ மாட்டி வெச்சிருக்கேன். இப்போ சமீபத்தில் என் அக்கா ஒரு fitness studio தொடங்கியதற்கு வாழ்த்து தெரிவித்து இந்த Blessing Elephants தான் வாங்கி கொடுத்தேன். உங்களுக்கும் உங்க வீட்டில் அல்லது வியாபாரம் செய்யும் இடத்தில் இந்த யானையை வைக்க விரும்பினால் மறக்காமல் வாங்கிக்கங்க. இதுல 3 materials options கொடுத்து இருக்கேன்.
Eden Woods Resorts & Spa | Luxury Five Star Resort in Munnar,Kerala
நான் மூனார் போனது உண்மையாகவே பிளான் செய்யாத sudden trip தான். நான் இதற்குமுன் மூனார் போகனும் னு note செஞ்சு வெச்சிருந்த resort எல்லாம் கடைசி நேரம் என்பதால் rooms கிடைக்கல (அது இதை விட costly) அதனால் இந்த resort தேர்வு செஞ்சோம்.
இந்த பதிவு ல முடிஞ்ச அளவு photos மற்றும் குட்டி குட்டி videos போஸ்ட் செஞ்சு கூடவே அதற்கான விளக்கம் short ஆ எழுதறேன்.
Coimbatore ல இருந்து 170 KM வரும். கிட்டதட்ட 5 மணி நேரம் ஆகும் (காரில் சென்றால்). நாங்க
கோவை - பொள்ளாச்சி - உடுமலைப்பேட்டை ரோடு வழியாக மறையூர் பின் மூனார் சென்று அடைந்தோம்.
இந்த resort மூனார் ல இருந்து 17 km தள்ளி outer ல இருக்கு. மூனார் ல இருந்து resort போகும் வழி தான் இது. Google Map சரியாக கூட்டி சென்று விடும்.
மூனார் ல இருந்து 17 km தள்ளி Resort இருப்பதால் முடிந்த அளவு இந்த Resturant லையே Breakfast அல்லது lunch முடிச்சிட்டு போயிடுங்க. இந்த ஹோட்டல் ஏற்கனவே நம் followers க்கு நிறைய முறை suggest செஞ்சிருக்கேன். Quality நன்றாக இருக்கும். குழந்தைகள் , பெரியவங்க சாப்பிடற மாதிரி காரம் குறைவாக தான் இருக்கும். இந்த கடையின் விலை பட்டியல் , நாங்க சாப்பிட்ட உணவு மற்றும் bill இங்க பதிவு செஞ்சிருக்கேன் .