சாஸ்திரம் மொத்தம் 32 வகையான அறங்களை சொல்லியிருக்கிறது. இவை அனைத்தையும் அம்பாளே காஞ்சிபுரத்தில் தான் செய்து காட்டி அனைவருக்கும் முன்மாதிரியாக திகழ்ந்துள்ளாள். அன்னைக்கு ‘தர்மசம்வர்த்தினி’ என்று பெயர் உண்டு. தமிழில் ‘அறம் வளர்த்த நாயகி.’ நம் பொருளாதார நிலைக்கு ஏற்ப தர்மங்களை செய்து
பலன் பெறுவோம். பொருள் அதிகம் தேவைப்படும் அறம் முதல் அதிகம் செலவில்லாத குடிக்க நீர் கொடுக்கும் தண்ணீர் தானம் வரை பல அறங்கள் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளன.
#தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்:
1. அன்னதானம் செய்தால் பூர்வ ஜென்ம கர்மவினைகள் தீரும். பித்ருக்களின் ஆசிர்வாதம்
கிடைக்கும்.(பழைய சாதத்தை எப்பொழுதும் தானமாக கொடுக்கக் கூடாது. அவ்வாறு செய்தால் அது உங்கள் வருமானத்தை விட அதிகப்படியான செலவுகளையே உங்களுக்கு கொண்டு வந்து சேர்க்கும்.)
2. மானத்தை மறைக்க உதவும் ஆடைதானம் செய்தால் தகாத உறவுக் குற்றங்கள் நீங்கும். பெண்களுக்கு இரட்சையாக இருக்கும்.
3. காலணி தானம் செய்தால் பெரியோர்களை நிந்தித்த பாவம் விலகும்.
4. மாங்கல்ய சரடு தானம் செய்தால் காமக் குற்றங்கள் அகலும். தீர்க்க மாங்கல்ய பாக்யம் உண்டாகும்.
5. பொன் மாங்கல்யம் தானம் செய்தால் மாங்கல்ய தோஷங்கள் நீங்கும். திருமண தடங்கல்கள் நீங்கும்.
6. குடை தானம் செய்தால் தவறான
வழியில் சேர்த்த செல்வத்தினால் ஏற்பட்ட பாவம் விலகும். குழந்தைகளுக்கு சிறப்பான எதிர்காலம் உண்டாகும்.
7. பாய் தானம் செய்வதால் பெற்றவர்களை பெரியவர்களை புறக்கணித்ததால் வந்தசாபங்கள் தீரும். கடும் நோய்களுக்கு நிவாரணம் கிட்டும். அமைதியான மரணம் ஏற்படும்.
8. பசு தானம் செய்தால்
இல்லத்தின் தோஷங்கள் விலகும். பலவித பூஜைகளின் பலன்கள் கிடைக்கும்.
9. பழங்கள் தானம் செய்தால் பல ஜீவன்களை வதைத்த சாபம் தீரும். ஆயுள் விருத்தியாகும்.
10. காய்கறிகள் தானம் செய்தால் பித்ரு சாபம் விலகும். குழந்தைகள் ஆரோக்யம் வளரும்.
11. அரிசி தானம் செய்தால் பிறருக்கு ஒன்றுமே தராமல்
தனித்து வாழ்ந்த சாபம் தீரும். வறுமை தீரும்.
12. எண்ணெய் தானம் செய்தால் நாம் அறிந்தும் அறியாமலும் செய்த கர்ம வினைகள் அகலும். கடன்கள் குறையும்.
13. பூ தானம் செய்தால் அந்தஸ்து காரணமாக பிறரை அவமதித்ததால் ஏற்படும் தீவினைகள் நீங்கும். குடும்ப வாழ்க்கை சுகமாக சாந்தமாக அமையும்.
14. அரிசியை தானம் தர பாவங்கள் தொலையும்.
15. வெள்ளியை தானம் தர மனக்கவலை மறையும்.
16. தயிர் தானம் தர இந்திரிய விருத்தியாகும்.
17. நெய் தானம் தர நோயைப் போக்கும்.
18. பால் தானம் தர துக்கநிலை மாறும்.
19.தேன் தானம் தர பிள்ளைப்பேறு கிட்டும்.
20. நெல்லிக்கனி தானம் தர ஞானம் உண்டாகும்.
21. தேங்காய் தானம் தர நினைத்த காரியம் வெற்றி அடையும்.
22.தீபங்களை தானம் தர கண்பார்வை தெளிவாகும்.
23. பூமியை தானம் தர பிரம்மலோக தரிசனமும் ஈஸ்வர தரிசனமும் கிட்டும்.
24. மஞ்சள் தானம் - மங்களம் உண்டாகும்.
25. திலதானம் (எள்ளு) - பாப விமோசனம்
26. வெல்லம் தானம்- குலம் வளறும், துக்கம்
தீரும்.
27. தண்ணீர் தானம் - மனசாந்தி ஏற்படும்
28. கம்பளி (போர்வை) தானம் - கெட்ட கனவுகள் நீங்கும். கெட்ட சகுனங்கள் தோன்றாது.
28. சந்தனக்கட்டை தானம் - புகழ்
29. ஆலயத்துக்கு யானை தானம் - இந்திரனுக்கு இணையான பதவி.
30. புத்தக தானம் - ஞானம்
31. பூணூல் தானம் - பருத்தியிலான பூணூலை தானம்
செய்வதால் புனிதம் அடைகிறோம், மனச்சாந்தி ஏற்படும்.
32. விசிறி தானம் - பனையோலை, மூங்கிலால் ஆன விசிறியை தானம் செய்வதால் ரோகம் அகலும். ஆரோக்கியம் பெறுகும்.
பயன் கருதாது தானம் அளிப்பதே மிகச் சிறந்தது. அவர்களுக்கு மரணம் உன்னதமாக அமைவதோடு மறு பிறவி இருப்பதில்லை. இல்லாதவர்களுக்கு தான்
தானம் செய்ய வேண்டும். நமக்கு வேண்டியவர்களுக்கு தானம் செய்தால் அதில் பலனில்லை. வெயில் காலம் வருகிறது. நம்மால் இயன்ற தானத்தை செய்து துயர் துடைப்போம்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.